டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எல்லாம் நல்லா இருக்கு.. 'மைனஸ் ஒன்..' வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தாக்கு

Google Oneindia Tamil News

டெல்லி: ஒட்டுமொத்த சுற்றுப்புற நாடுகளும், 'மைனஸ் ஒன்', பிராந்திய ஒத்துழைப்புக்கு மிகுந்த ஒத்துழைப்பு அளித்து வருகின்றன என்று, வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார்.

டெல்லியில் நடந்த உலக பொருளாதார மன்றத்தின் ஒரு அமர்வில் இன்று நிருபர்கள் கேள்விக்கு பதிலளித்த ஜெய்சங்கர், கூறியதாவது: இந்தியாவை சுற்றியுள்ள ஒட்டுமொத்த நாடுகளும் நல்லுறவை பேணுகின்றன. மைனஸ் ஒன். இவ்வாறு தெரிவித்தார்.

India’s entire neighbourhood, minus one, fairly good story, says S Jaishankar

அமெரிக்காவுடனான கலந்துரையாடல்களில் காஷ்மீர் விவகாரம் வந்ததா என்ற கேள்விக்கு பதிலளித்த ஜெய்சங்கர் செப்டம்பர் 30 அன்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோவை சந்தித்து பேசியதை குறிப்பிட்டு, இவ்வாறு பதிலளித்தார்.

அரசியலமைப்பின் 370 வது பிரிவின் கீழ் ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ஆகஸ்ட் 5ஆம் தேதி ரத்து செய்தது. தற்போது ஓரளவுக்கு அங்கே இயல்பு நிலை திரும்பி வருகிறது.

முன்னதாக பொருளாதார மன்றத்தில் பேசியபோது, நாங்கள் அதிகமான தேசியவாதிகள். இந்த வகையில் இந்தியா ஒரு விதிவிலக்குதான். ஆனால் அதே நேரத்தில் உலகத்துடன் அதிக ஈடுபாடு கொண்டவர்கள். தேசியவாதம் என்பதை, சர்வதேசவாதிக்கு எதிரான பதமாக நான் பார்க்கவில்லை என்றார் அவர்.

English summary
India’s External Affairs Minister S Jaishankar on Friday told the World Economic Forum that nationalism is not a negative ideology.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X