பத்ம பூஷண் விருது பெற்ற சுந்தர் பிச்சை.. பெருமையோடு இந்தியாவுக்கு மனம் உருகி நன்றி..என்ன சொன்னார்?
டெல்லி: தமிழகத்தை சேர்ந்த கூகுள் அல்பபெட் நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியாக உள்ள சுந்தர் பிச்சைக்கு பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்ட நிலையில் அமெரிக்காவில் அவர் இன்று விருதை பெற்று கொண்டார். இதையடுத்து சுந்தர் பிச்சை மத்திய அரசுக்கும், இந்திய மக்களுக்கும் மனம் உருகி நன்றி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் மிகவும் உயரிய விருதாக பத்ம விருதுகள் உள்ளன. பத்ம விருதுகள் பட்டியலில் பத்ம விபூஷன், பத்ம பூஷண், பத்மஸ்ரீ உள்ளிட்ட மூன்று விருதுகள் இடம்பெற்றுள்ளன.
பொதுசேவை, தொழில் துறை, கலைத்துறை, அறிவியல் மற்றும் பொறியியல் துறை, வா்த்தகம், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, குடிமைப் பணிகள் உள்பட பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
நம்பி வந்த மாணவி! ரேப் செய்து கொன்று தின்ற நபர்.. பிரபலமாக மாறிய கொடூரம்! ஆனாலும் விதி விடவில்லை

பத்ம விருதுகள் அறிவிப்பு
2022ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் குடியரசு தினத்தையொட்டி அறிவிக்கப்பட்டன. இந்த விருது பட்டியலில் 4 பேருக்கு பத்ம விபூஷன், 17 பேருக்கு பத்ம பூஷன், 107 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டன. மொத்தம் 128 பேருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டது. இதில் தமிழகத்தை சேர்ந்தவர்களும் அடங்குவர்.

சுந்தர் பிச்சைக்கு விருது
தொழில் துறையை பொறுத்தமட்டில் தொழில் துறையை பொறுத்தமட்டில் தமிழ்நாட்டைப் பூர்வீகமாக கொண்ட கூகுள் ஆல்பாபெட் சிஇஓ சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓவான இந்தியாவின் சத்ய நாதெல்லா ஆகியோர் பத்ம பூஷண் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு இருந்தனர். இந்நிலையில் தான் சமீபத்தில் பத்ம விருதுகள் அனைவருக்கும் வழங்கப்பட்டன. பதவிக்காலம் முடிவடைவற்கு முன்பாக இந்த விருதுகளை முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

சுந்தர் பிச்சைக்கு விருது
இந்நிலையில் சுந்தர் பிச்சைக்கு விருது வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் தான் சுந்தர் பிச்சைக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் நடந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் பத்ம பூஷண் விருதை சுந்தர் பிச்சை பெற்று கொண்டார். இந்தியா சார்பில் சுந்தர் பிச்சைக்கு அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்து வழங்கினார்.

சுந்தர் பிச்சை சொன்னது என்ன?
இந்த விருதை பெற்ற சுந்தர் பிச்சை இந்தியாவுக்க நன்றி தெரிவித்துள்ளார். இதுபற்றி சுந்தர் பிச்சை தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்துக்கு நன்றி. எனது குடும்பத்தினர் இருக்கும் இந்த வேளையில் பத்ம பூஷண் விருது பெறுவது பெரிய கவுரமாக உள்ளது. விருது வழங்கிய இந்திய மக்களுக்கும், அரசுக்கும் நன்றி'' என கூறியுள்ளார்.

மதுரை டூ அமெரிக்கா என பாராட்டு
மேலும் விருது வழங்கியது பற்றி அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்து தனது ட்விட்டர் பக்கத்தில் படங்களை வெளியிட்டுள்ளார். அதில், ‛‛கூகுள் அல்பபெட் சிஇஓவாக உள்ள சுந்தர் பிச்சையிடம் பத்ம பூஷண் விருதை ஒப்படைப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். மதுரையில் இருந்து மவுண்டன் வியூ வரை சுந்தர் பிச்சையின் பயணம் உத்வேகம் அளிக்கும் வகையில் உள்ளது. இவரது இந்த பயணம் இந்தியா-அமெரிக்கா இடையேயான பொருளாதாரம், தொழில்நுட்பத்தை வலுப்படுத்துதுகிறது. இவரது செயல்பாடு என்பது உலகளாவிய புதுமை கண்டுபிடிப்புகளில் இந்தியர்களின் திறமையான பங்களிப்பை மீண்டும் உறுதி செய்கிறது'' என தெரிவித்துள்ளது.