டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்தியாவின் கடும் நடவடிக்கை.. சீன முதலீடுகளுக்கு ஆப்பு.. திணறும் சொமாட்டோ.. என்னாகும் எதிர்காலம்!!

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவின் புதிய அந்நிய முதலீட்டு விதிகளால் 3 பில்லியன் டாலர் மதிப்பு கொண்ட சொமாட்டோ நிறுவனத்தில் சீன முதலீட்டாளர்கள் முதலீடு செய்வது பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    Zomato-வுக்கான Investment-ஐ நிறுத்திய China | Boycott China | Oneindia Tamil

    இந்தியாவில் துவங்கப்பட்டு இருக்கும் உணவு டெலிவரி நிறுவனமான சொமாட்டோவில் சீன நிறுவனங்கள் 3 பில்லியன் டாலர் அளவிற்கு முதலீடு செய்துள்ளன.

    கடந்த ஜனவரி மாதம் சொமாட்டோ நிறுவனத்தில் சீனாவின் டிஜிட்டல் பேமென்ட் நிறுவனமான ஆன்ட் ஃபினான்சியல் 150 மில்லியன் டாலர் அளவிற்கு முதலீடு செய்து இருந்தது. ஆனால், அந்த தொகையில் தற்போது சொமாட்டோ நிறுவனத்தால் 100 மில்லியன் டாலரை பெற முடியவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

     திடீரென விடுக்கப்பட்ட எச்சரிக்கை.. சீனாவில் புதிய வகை திடீரென விடுக்கப்பட்ட எச்சரிக்கை.. சீனாவில் புதிய வகை "பிளேக் நோய்".. மக்கள் அச்சம்.. என்ன நடந்தது?

    சீனா ஆட்சேபனை

    சீனா ஆட்சேபனை

    கொரோனா வைரஸ் பரவல் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இந்தியாவில் அண்டை நாடுகள் முதலீடு செய்வது தடுக்கப்படும் என்று இந்தியா கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்தது. இதையடுத்து, புதிய விதிமுறைகளையும் அறிவித்தது. இந்திய நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்வதையும் தடுத்தது. இது உலக நாடுகளின் வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிரானது என்று சீனா எதிர்ப்பு தெரிவித்து இருந்தது.

    சீனாவிடம் போன எச்டிஎப்சி வங்கி

    சீனாவிடம் போன எச்டிஎப்சி வங்கி

    இதற்கு முக்கியக் காரணம் வீட்டுக் கடன் வழங்கும் வங்கிகளில் மிகப் பெரிய வங்கியான ஹெச்டிஎப்சி வங்கியின் பங்குகளை சீனாவின் பீபிள் பாங்க் ஆப் சீனா வாங்கியதுதான். இந்த வங்கியின் 1,74,92,909 பங்குகளை, அதாவது 1.01 சதவீதம் பங்குகளை சீன வங்கி வாங்கி இருந்தது. இந்தப் பங்குகளை கடந்த ஜனவரி, மார்சுக்கு இடையிலான கால கட்டத்தில் சீன வங்கி வாங்கி இருக்கலாம் என்ற தகவல் வெளியாகி இருந்தது.

    இந்தியாவின் கிடுக்கிப் பிடி

    இந்தியாவின் கிடுக்கிப் பிடி

    இந்த தகவலை அடுத்து இந்தியா கடுமையான விதிகளை அமல்படுத்தியது. மத்திய அரசுக்கு தெரியாமல் எந்தவித முதலீடுகளும் அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் வரவிடாமல் தடுக்க செக் வைத்தது. இதையடுத்துதான், சீனாவின் முதலீடுகளும் இந்தியாவில் குறையத் தொடங்கின. இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் சீன நிறுவனங்கள்தான் அதிகளவில் முதலீடு செய்துள்ளன.

    மூதலீடுகள் பாதிப்பு

    மூதலீடுகள் பாதிப்பு

    தற்போது, டென்சென்ட், அலிபாபா ஆகிய நிறுவனங்கள் தங்களது முதலீட்டை நிறுத்திக் கொண்டன. எல்லையில் இந்தியா, சீனா இடையே ஏற்பட்டு வரும் சண்டையில் இந்தியாவில் சீன முதலீடுகளும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் சீன நிறுவனங்களின் முதலீடும் பாதிக்கப்பட்டு வருகிறது. ஆன்ட் ஃபினான்சியல் சொமாட்டோவில் 560 மில்லியன் டாலர் முதலீடு செய்து இருக்கிறது. அதாவது அந்த நிறுவனத்தின் 25 சதவீதப் பங்குகள் ஆன்ட் ஃபினான்சியலுக்கு சொந்தமானது.

    தவிக்கும் சொமோட்டா

    தவிக்கும் சொமோட்டா

    இந்தியாவில் மற்றொரு நிறுவனமான ஸ்விக்கியுடன் சொமாட்டோவுக்கு வர்த்தகப் போட்டி ஏற்பட்டு இருக்கும் நிலையில், முதலீடு தடைபட்டு இருப்பது சொமாட்டோவுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. ஸ்விக்கியில் சீனாவின் டென்சென்ட் மற்றும் மேய்துவன்-தியான்பிங் ஆகிய நிறுவனங்கள் முதலீடு செய்து இருக்கின்றன. தற்போது சொமாட்டோ நிறுவனத்தின் மீதான சீன நிறுவனத்தின் முதலீடு குறைந்தாலும், முன்பு கூறியதுபோல், வரும் 2021ஆம் ஆண்டில் இந்த நிறுவனத்தின் பங்குகள் பொதுப் பங்குகளாக கொண்டு வரப்படும் என்று அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    13 % ஊழியர்களுக்கு லே ஆஃப்

    13 % ஊழியர்களுக்கு லே ஆஃப்

    இந்தியாவில் சொமாடோ நிறுவனத்தில் கடந்த மே மாதம் 13 சதவீத ஊழியர்களுக்கு லே ஆஃப் விடப்பட்டு இருந்தது. வரும் ஆறு அல்லது 12 மாதங்களில் இன்னும் 25 முதல் 40 சதவீதம் வரையிலான சொமாட்டோ உணவகங்கள் குறைக்கப்படும் என்று அந்த நிறுவனத்தின் செயல் அதிகாரி தீபிந்தர் கோயல் தெரிவித்துள்ளார். ஸ்விக்கி நிறுவனமும் 1000த்துக்கும் மேற்பட்ட ஊழியர்களை பணியில் இருந்து நீக்கியுள்ளது.

    சீனாவின் அதிக்கம்

    சீனாவின் அதிக்கம்

    இந்தியாவில் இருக்கும் 30 ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் 60 சதவீத முதலீடுகள் சீன நிறுவனங்களால் செய்யப்பட்டுள்ளது. அதாவது 100 கோடி டாலர் அளவிற்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை மும்பையில் இருக்கும் கேட்வே ஹவுஸ் மார்ச் மாதம் தனது அறிக்கையில் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் இந்தியாவில் இருக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    English summary
    China has stopped investment in Zomato; India's new investment law have hit funding in India.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X