டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காலநிலையில் பெரும் மாற்றம்.. வெளுக்கப் போகுது மழை.. எப்போது தெரியுமா? ஐஎம்டி வெளியிட்ட பரபர தகவல்

Google Oneindia Tamil News

டெல்லி: பருவநிலை மாற்றத்தால் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நாடு முழுவதும் அதிகப்படியான மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. குறிப்பாக செப்டம்பர் மாதத்தில் மிக அதிகப்படியான மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) அறிவிப்பின் படி, ஜூன்-செப்டம்பர் வரை பருவ மழை மாதங்கள் ஆகும். இந்த நான்கு மாதத்தில் தான் இந்தியா ஆண்டுதோறும் பெரிய அளவில் மழையை பெறுகிறது. கடந்த ஜூன் மாதத்தில் இந்தியாவில் மழைப்பொழிவு இயல்பை விட 17.6% ஆக இருந்தது. ஜூலை மாதத்தில், நாடு முழுவதும் 10% மழை பற்றாக்குறை இருந்தது.

ஜூலை மாதத்தில் மிக வறண்ட வானிலையே பெரும்பாலும் இருந்தது. இருப்பினும், ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நாடு முழுவதும் அதிகப்படியான மழை பெய்யும் என்று இந்தியா வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது, குறிப்பாக செப்டம்பர் மாதத்தில், அதிக மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இருவரும் இணைந்து செயல்படுவோம்.. 'கூட்டாளி' நேபாளத்திடம் அழுத்தமாக சொல்லும் சீனா!இருவரும் இணைந்து செயல்படுவோம்.. 'கூட்டாளி' நேபாளத்திடம் அழுத்தமாக சொல்லும் சீனா!

ஆகஸ்ட் மழை

ஆகஸ்ட் மழை

வானிலை மையம் கணித்தபடி மேற்கு மற்றும் மத்திய இந்தியா முழுவதும் கடுமையான மழை பெய்துள்ளது. ஆகஸ்ட் 5 ஆம் தேதி, மும்பையில் வெறும் 12 மணி நேரத்தில் 216 மிமீ மழை பதிவானது. நகரின் சில பகுதிகள், மலபார் ஹில்ஸ் போன்ற பகுதியில் இதே காலகட்டத்தில் 309 மி.மீ மழை பெய்ததுதான் வானிலை ஆய்வகத்தின் அறிவிப்பின் படி, ஆகஸ்ட் மாதத்தில் 22 ஆண்டுகளில் அதிகபட்ச ஒற்றை நாள் மழையாகும்.

இடுக்கி நிலச்சரிவு

இடுக்கி நிலச்சரிவு

அதே நேரத்தில், தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டதில் 24 மணி நேரத்தில் 820 மிமீ மழை பதிவானது. இதனால் பெரும் நிலச்சரிவு மற்றும் வெள்ளம் ஏற்பட்டது. கடந்த வாரத்தில், இந்தியாவில் மும்பையை ஒட்டிய மேற்கு கடற்கரை பகுதிகளில் 390-710 மி.மீ வரை மழை பதிவாகியுள்ளது. கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில், ஆகஸ்ட் 7 ம் தேதி ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவில் சுமார் 80 பேர் மண்ணில் புதைந்தனர். இதுவரை 50க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. உயிரிழந்தவர்களில் பலர் தமிழகத்தைச் சேர்ந்த தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் ஆவர். இந்தியாவில் ஜூலை இறுதி வரை மழை பற்றாக்குறையாக இருந்த நிலையில், ஆகஸ்ட் முதல் 10 நாட்களுக்குள் அந்த பற்றாக்குறையை மழை ஈடுசெய்தது.

மழை குறைந்தது

மழை குறைந்தது

டெல்லியில், ஆகஸ்டில் பருவமழை மழை இதுவரை இயல்பை விட 72% குறைவாக உள்ளது. ஐஎம்டியின் தரவுகளின்படி, 10 ஆண்டுகளில் ஆகஸ்ட் மாதத்தில் மிகக் குறைந்த மழை இதுதான். இந்த மாதத்தில் இதுவரை டெல்லியில் வெறும் 31.1 மி.மீ மழை பதிவாகியுள்ளது என்று டெல்லி வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மூன்று மடங்கு அதிகம்

மூன்று மடங்கு அதிகம்

புனேவில் உள்ள இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனத்தின் (ஐ.ஐ.டி.எம்) காலநிலை விஞ்ஞானி ராக்ஸி மேத்யூ கடந்த வாரம் பெய்த மழையை பற்றி ஒரு அறிக்கையில், "கடந்த 70 ஆண்டுகளில் மழை தரவு குறித்த எங்கள் பகுப்பாய்வில், மூன்று மடங்கு தீவிரமாக இருந்ததை காண்கிறோம் மேற்கு கடற்கரை மகாராஷ்டிரா பகுதி) மற்றும் மத்திய இந்தியாவில் பெரிய அளவில் மழை பெய்துள்ளது இதற்கு காரணம் அரபிக் கடல் மீதான பருவ காற்றில் வெப்பம் அதிகமான சூழல் ஏற்பட்டதன் காரணமாக பெரிய ஏற்ற இறக்கங்களை வெளிப்படுத்தியது தான்" என்றார்.

விவசாயம் பாதிக்கும்

விவசாயம் பாதிக்கும்

மழையின் இந்த சீரற்ற பொழிவால் விவசாயம் கடுமையாக பாதிக்கும். வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளுக்கும் காரணமாக அமைந்துள்ளது. அண்மையில் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் (MoES) அறிக்கையின்படி, இந்திய பிராந்தியத்தில் காலநிலை மாற்றத்தின் மதிப்பீடு, "பழுப்பு மேகம்" காரணமாக வட இந்தியாவில் பருவமழை 6% (1951-2015) குறைந்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது. வரவிருக்கும் நாட்களில் பருவமழை இன்னும் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அறிக்கை கூறுகிறது.

கனமழை பெய்யும்

கனமழை பெய்யும்

மிக நீண்ட மழையும் வறண்ட வானிலையும் மாறி மாறி இருக்க போகிறதாம். மிக அதிக மழைப்பொழிவு அல்லது வறண்ட வானிலை என்கிற கால நிலைகள் விவசாயத்திற்கே அல்லது நிலத்தடி நீர் மறுசீரமைப்பிற்கே முற்றிலும் நல்லது அல்ல என்கிறார் காலநிலை விஞ்ஞானி சிராக் தாரா. கடந்த சில ஆண்டுகளில் வருடாந்திர மழையின் போக்குகளை பார்க்கும்போது, புவி வெப்பமடைதலின் விளைவாக பெருமளவில் ஏற்ற இறக்கமான மழைக்கால மழைப்பொழிவு இந்தியாவில் இருப்பது தெரிகிறது.

English summary
The Indian Meteorological Department has forecast heavy rains across the country in August and September due to climate change. The Indian Meteorological Department has forecast heavy rains, especially in September. Due to global warming, the trend of extreme monsoons with long dry spells alternating with very heavy rains is here to stay.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X