டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எல்லைகளில் தொடர்ந்து படைகளை குவிக்கும் சீனா.. பதற்றத்தை திணிப்பதால் இந்தியா கடும் அதிருப்தி

Google Oneindia Tamil News

டெல்லி: எல்லைகளில் தொடர்ந்து ராணுவத்தினரை குவித்து பதற்றத்தை உருவாக்கும் சீனாவின் நடவடிக்கைகளால் மத்திய அரசு கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.

லடாக் மற்றும் சிக்கிம் எல்லைகளில் சீனா தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வருகிறது. இதேபோல் நேபாளத்தை தூண்டி விட்டு அங்கும் எல்லை பிரச்சனையில் சீனா குளிர் காய்ந்து வருகிறது.

India says change in status quo by China at LAC is not acceptable

சிக்கிம் எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் மீது சீன ராணுவத்தினர் கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். இதற்கு இந்திய தரப்பில் பதிலடி தரப்பட்டது. இருதரப்பிலும் சிலர் படுகாயமடைந்தனர். அதேநேரத்தில் சீனா சிறிது நேரம் இந்திய வீரர்களை பிடித்து வைத்தது என தகவல் வெளியானது. ஆனால் இதை ராணுவத் தரப்பு மறுத்திருக்கிறது.

இந்தியாவைப் பொறுத்தவரையில் வரையறுக்கப்பட்ட எல்லைகளில் ராணுவத்தை நிறுத்தி வைத்திருக்கிறது. ஆனால் சீனாவோ அத்துமீறி ஒவ்வொரு எல்லைப் பகுதிகளிலும் ராணுவத்தினரை ஊடுருவ செய்து வருகிறது. இதுதான் இருநாடுகளிடையேயான எல்லை பதற்றத்துக்கும் காரணமாக இருக்கிறது. இருநாட்டு பேச்சுவார்த்தைகளின் போதும் இந்திய தரப்பு இதை சுட்டிக் காட்டியிருக்கிறது.

பைக் வாங்க பணம் கேட்டு துன்புறுத்தல்.. தாள முடியாமல் தீக்குளித்தேன்.. கர்ப்பிணியின் மரண வாக்குமூலம்பைக் வாங்க பணம் கேட்டு துன்புறுத்தல்.. தாள முடியாமல் தீக்குளித்தேன்.. கர்ப்பிணியின் மரண வாக்குமூலம்

Recommended Video

    சீனாவிற்கு செக் வைக்க திட்டம்... இந்தியா மாஸ்டர் பிளான் | Oneindia Tamil

    ஆனால் சீனா அதைப்பற்றி எல்லாம் கண்டுகொள்ளாமல் படை குவிப்பை மேற்கொண்டு வருகிறது. இந்த பதற்றமான சூழ்நிலையில்தான் லே பகுதியில் இந்திய ராணுவ தளபதி நரவணே பார்வையிட்டார். லடாக் பகுதியில்தான் 800க்கும் அதிகமான சீன ராணுவத்தினர் இந்திய எல்லைக்குள் ஊடுருவி முகாமிட்டு தங்கி இருந்தனர். எல்லையில் இந்தியாவின் பொறுமையை சோதிக்கும் சீனாவுக்கு அனேகமாக எல்லைப் பகுதியில் தக்க பாடம் தரலாம் என்கின்றன பாதுகாப்பு வட்டாரங்கள்.

    English summary
    The People's Liberation Army of China has deployed additional troops along the disputed boundary with India.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X