டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டாலருக்கு கெட்-அவுட் சொன்னது இந்தியா.. யுஏஇ.யுடன் இனி ரூபாயில்தான் வியாபாரம்.. அமெரிக்கா ஷாக்

அரபு அமீரகத்திடம் இருந்து இந்தியா பெட்ரோல், டீசல் வாங்குவதற்கு அமெரிக்க டாலருக்கு பதிலாக இந்திய ரூபாயை பயன்படுத்த முடிவு செய்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    அரபு அமீரகத்திடம் இனி ரூபாயில்தான் வியாபாரம்- வீடியோ

    டெல்லி: அரபு அமீரகத்திடம் இருந்து இந்தியா பெட்ரோல், டீசல் வாங்குவதற்கு அமெரிக்க டாலருக்கு பதிலாக இந்திய ரூபாயை பயன்படுத்த முடிவு செய்துள்ளது.

    இந்தியா தற்போது கொஞ்சம் கொஞ்சமாக அமெரிக்காவிடம் இருந்து விலக தொடங்கி இருக்கிறது என்றுதான் கூற வேண்டும். முதலில் ரஷ்யாவுடன் ராணுவ ஒப்பந்தம் செய்தது, பின் சீனாவுடன் நெருக்கம் காட்டுவது, ஈரானுடன் எண்ணெய் வர்த்தகம் செய்வது என்று இந்தியா தொடர்ந்து அமெரிக்காவை மறைமுகமாக சீண்டி வருகிறது.

    இந்த நிலையில்தான் தற்போது அமெரிக்காவை அதிர வைக்கும் வகையில் டாலர் வர்த்தகத்தை இந்தியா புறக்கணிக்க முடிவு செய்துள்ளது.

    என்ன செய்கிறது

    என்ன செய்கிறது

    இந்தியாவும் அரபு அமீரகமும் போட்டு இருக்கும் புதிய ஒப்பந்தத்தின்படி அரபு அமீரகத்திடம் இருந்து இந்தியா பெட்ரோல், டீசல் வாங்குவதற்கு அமெரிக்க டாலருக்கு பதிலாக இந்திய ரூபாயை பயன்படுத்த முடிவு செய்துள்ளது. இனி வரும் சமயங்களில் அரபு அமீரகத்துடன், டாலர் மற்றும் யூரோ இரண்டிலும் இந்தியா வர்த்தகம் செய்யாது. அதற்கு பதிலாக 100 சதவிகிதம் இந்திய ரூபாய் மூலமே எண்ணெய் பொருட்கள் வாங்க இந்தியா முடிவு செய்து இருக்கிறது. இந்த பணத்தை அரபு அமீரகத்திடம் இந்தியா நேரடியாக அனுப்பிவிடும்.

     இதற்குமுன் எப்படி இருந்தது

    இதற்குமுன் எப்படி இருந்தது

    எண்ணெய் வர்த்தகத்தில் இதுவரை டாலரும், யூரோவும்தான் கிங்காக இருந்தது. இந்தியா பிற எண்ணெய் வள நாடுகளிடம் இருந்து டாலரில் எண்ணெய் பொருட்கள் வாங்கி வந்தது. சரியாக சொல்ல வேண்டும் என்றால் 55 சதவிகிதம் யூரோ கொடுத்தும் 45 சதவிகிதம் இந்திய ரூபாய் கொடுத்தும் இந்தியா எண்ணெய் வாங்கி வந்தது.

    விலை குறையும்

    விலை குறையும்

    தற்போதைய புதிய ஒப்பந்தம் காரணமாக எதிர்காலத்தில் எண்ணெய் விலை குறையும். தற்போது டாலரை மையப்படுத்திதான் உலக வர்த்தகம் இருக்கிறது. அதை இந்த புதிய ஒப்பந்தம் மாற்ற வாய்ப்புள்ளது. அப்படி நடக்கும்பட்சத்தில் இது வர்த்தக உலகின் பெரிய புரட்சியாக மாறும்.

    ரியாக்சன்

    ரியாக்சன்

    இந்த ஒப்பந்தம் உலக நாடுகளை ஆச்சர்யப்பட வைத்துள்ளது. இந்தியாவா இப்படி ஒரு ஒப்பந்தத்தை செய்தது என்று அதிர்ச்சியாகி இருக்கிறார்கள். அதேபோல் அமெரிக்கா இதன் காரணமாக இந்தியா மீது கோபத்தில் இருப்பதாக தகவல்கள் வருகிறது. ஏற்கனவே நிகழும் பிரச்சனைகளை கருத்தில் கொண்டு இந்த கோபம் ஏற்பட்டுள்ளது. இது இல்லாமல் மேலும் சில நாடுகள் டாலரை மொத்தமாக புறக்கணிக்க முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வருகிறது.

    English summary
    India says get out to Dollar, Decides to trade with UAE in Rupess. The decision made US to go shock.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X