டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சிலைகளுக்கு பதில்.. இந்தியா 'சகிப்புத்தன்மை.. மரியாதை' கற்றுக்கொடுக்கும் பள்ளிகளை கட்டணும்'.. ராஜன்

Google Oneindia Tamil News

டெல்லி: தலைவர்களுக்கு சிலைகளை எழுப்புவதற்கு பதில், இந்தியா தனது குழந்தைகளுக்கு ஒருவர் மீது ஒருவர் மிகவும் சகிப்புத்தன்மையுடனும் மரியாதையுடனும் இருக்கக் கற்றுக் கொடுக்கும் நவீன பள்ளிகளையும் பல்கலைக்கழகங்களையும் கட்டியெழுப்ப வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.

இந்து தேசியவாதம் சமூக பதட்டங்களைத் தூண்டுவதோடு மட்டுமல்லாமல், இந்தியாவை அதன் பொருளாதார வளர்ச்சியிலிருந்து விலக்குகிறது என்றும் கூறியுள்ளார்.

நரேந்திர மோடி அரசு மட்டும் விதிவிலக்கல்ல. இந்த அரசம் அதிக அதிகாரத்தை பெறுவதைத்தான் சமூக மற்றும் அரசியல் ரீதியான குறிக்கோள்கைளை கொண்டுள்ளது என்றும் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

விமர்சனம்

விமர்சனம்

பொருளாதாரத்தை சரி செய்வது எப்படி என்பது குறித்து இந்தியா டுடே இதழில் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் கட்டுரை எழுதியுள்ளார். அந்த கடடுரையில் மோடி அரசின் சமூக அரசியல் அஜண்டாக்களை விமர்சிக்கும விதமாக கூறியிருப்பதாவது,

சகிப்பு தன்மை

சகிப்பு தன்மை

"தேசிய அல்லது மத தலைவர்களுக்கு பிரமாண்டமான சிலைகளை உருவாக்குவதற்கு பதிலாக, இந்தியா தனது குழந்தைகளின் மனதைத் திறக்கும் நவீன பள்ளிகளையும் பல்கலைக்கழகங்களையும் கட்டியெழுப்ப வேண்டும். அந்த பள்ளிகள் ஒருவருக்கொருவர் சகிப்புத்தன்மையுடனும் மரியாதையுடனும் இருக்க வேண்டும் என்பதை போதிக்க வேண்டும். மேலும் எதிர்காலத்தில் போட்டி நிறைந்த உலகமயமாக்கப்பட்ட உலகில் தங்களைத் தாங்களே வைத்திருக்க உதவும் வகையிலும் இருக்க வேண்டும்

அதிக அதிகாரம்

அதிக அதிகாரம்

பெரும்பான்மைவாதம் உலகம் முழுவதுமே பிரபலமாக உள்ளது, இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல. "அதிகாரத்தில் இருப்பவர்கள் அதிக கட்டுப்பாட்டை விரும்புவதற்கான போக்கு உள்ளது, இந்த அரசாங்கம் (மோடி அரசு0 விதிவிலக்கல்ல, குறிப்பாக சமூக மற்றும் அரசியலில் இதைத்தான் நிகழ்ச்சி நிரலாக கொண்டுள்ளது... இந்தியாவுக்குத் தாங்க முடியாத சமூக பதட்டத்தைத் தூண்டுவதைத் தவிர, இந்து தேசியவாதம் பொருளாதார வளர்ச்சியிலிருந்து விலக்கியும் விடுகிறது. இது சமூக பதற்றத்தை மேலும் அதிகரிக்கும்.

முடக்கப்படுகிறது

முடக்கப்படுகிறது

நரேந்திர மோடி அரசு விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துகிறது. மதிப்பு மிக்க விமர்சனங்களே சரியான நேரத்தில் அதன் போக்கை சரி செய்ய அனுமதிக்கும். ஆனால் எதிர்காலத்தில் அரசாங்கத்தை அமைக்க விரும்பும் அரசு அதன் சொந்த அதிகாரிகளை முடக்குகிறது. அத்துடன் தன்னடைய நீண்ட கால அரசியல் நடவடிக்கைக்காக எச்சரிக்கையாக உள்ளது.

அரசியல் பழிவாங்கல்

அரசியல் பழிவாங்கல்

விசாரணை மற்றும் வரி அமைப்புகள் குறிப்பிட்டவர்களை மட்டும் வலை போட்டு பிடிப்பதற்கான செயல்களை அனுமதிக்கக் கூடாது. மேலும் அவர்கள் அனைவரையும் குற்றவாளியாக்கும் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அத்துடன் அவர்கள் நிச்சயமாக அரசியல் பழிவாங்கலுக்கு பயன்படுத்தப்படுகிறார்கள் என்ற தோற்றத்தை கொடுக்கக்கூடாது." என்றார்.

English summary
Raghuram Rajan said India should build modern schools and universities that teach its children to be more tolerant and respectful of one another
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X