டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தபால் சேவையையும் திடீரென நிறுத்திக் கொண்டது பாகிஸ்தான்.. இந்தியா கடும் கண்டனம்

Google Oneindia Tamil News

Recommended Video

    'But Pakistan Is Pakistan': India Hits Out Over Stopping Of Postal Mails

    டெல்லி: இந்தியாவுடனான தபால் சேவையை நிறுத்திக்கொள்வதாக பாகிஸ்தான் இன்று திடீரென அறிவித்துள்ளது. இது சர்வதேச தபால் சேவை மரபுகளுக்கு எதிரானது என இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் பிரிவு 370ஐ மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் ரத்து செய்தது. இதற்கு கண்டனம் தெரிவித்த பாகிஸ்தான், இந்தியாவுடனான வர்த்தக உறவை முறித்துக் கொள்வதாக அறிவித்தது.

    அத்துடன் டெல்லியில் உள்ள தங்கள் நாட்டு தூதரை திரும்ப அழைக்கவும், இந்திய தூதரை திருப்பி அனுப்பவும் செய்தது. இந்தியா - பாகிஸ்தான் இடையே இயக்கப்படும் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்தையும் நிறுத்தியது. வாகா எல்லையை மூடியது.

     இந்து கோயில் மீது தாக்குதல்... கடும் நடவடிக்கை எடுக்க பாக். பிரதமர் ஆணை இந்து கோயில் மீது தாக்குதல்... கடும் நடவடிக்கை எடுக்க பாக். பிரதமர் ஆணை

    இந்தியா பதிலடி

    இந்தியா பதிலடி

    இப்படி இரு நாடுகளுக்கும் இடைய உறவில் பெரிய அளவில் விரிசல் விழுந்த நிலையில், இந்தியா பாகிஸ்தான் இடையே போர் வரும், அணு ஆயுத போர் வரும் என்ற தொனியில் ஐநா சபையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் மிரட்டல் விடுத்து பேசினார். இதற்கு இந்தியா அங்கேயே பதிலடி கொடுத்தது.

    இந்தியா பதிலடி

    இந்தியா பதிலடி

    இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் குப்வாரா மாவட்டத்தின் எல்லைப்பகுதியில் சனிக்கிழமை இரவு முதல் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் இரண்டு ராணுவ வீரர்கள் உள்பட 3பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக இந்திய ராணுவம் பீரங்கி மூலம் தாக்குதல் நடத்தியது.

    பாகிஸ்தான் வீரர்கள் பலி

    பாகிஸ்தான் வீரர்கள் பலி

    இந்த தாக்குதலில் 6 முதல் 10 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் செயல்பட்டு வந்த மூன்று தீவிரவாத முகாம்களும் அழிக்கப்பட்டதாக இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் நேற்று தெரிவித்தார்.

    மத்திய அரசு கண்டம்

    மத்திய அரசு கண்டம்

    இதனை பாகிஸ்தான் ராணுவம் திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் இந்தியாவுடனான தபால் சேவையை நிறுத்திக்கொள்வதாக பாகிஸ்தான் இன்று திடீரென அறிவித்துள்ளது. இதற்கு மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    ரவி சங்கர் பிரசாத்

    ரவி சங்கர் பிரசாத்

    ,இது தொடர்பாக அவர் கூறுகையில், எந்த ஒரு நோட்டீசும் வழங்காமல் பாகிஸ்தான் தபால் சேவையை நிறுத்தியிருப்பது சர்வதேச நெறிமுறைகளுக்கு எதிரானது. பாகிஸ்தான் பாகிஸ்தான் தான்.அந்த நாடு எப்போதும் திருந்தப்போவது இல்லை என்றார்.

    English summary
    India slammed Pakistan for unilaterally stopping postal mail service between the two nations, saying the move was in contravention of international norms.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X