டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பாகிஸ்தானுடன் இனி எல்லை வர்த்தகம் இல்லை.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு.. பரபரப்பு காரணம்!

பாகிஸ்தான் உடன் எல்லைப்பகுதியில் நடந்து வரும் வர்த்தகத்தை மொத்தமாக நிறுத்துவதாக மத்திய அரசு தெரிவித்து இருக்கிறது.

Google Oneindia Tamil News

டெல்லி: பாகிஸ்தான் உடன் எல்லைப்பகுதியில் நடந்து வரும் வர்த்தகத்தை மொத்தமாக நிறுத்துவதாக மத்திய அரசு தெரிவித்து இருக்கிறது.

காஷ்மீர் மாநிலத்தில், எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தானுடன் இந்தியா இத்தனை நாட்கள் வர்த்தகம் செய்து வந்தது. ஆனால் இதை திடீர் என்று மொத்தமாக நிறுத்த போவதாக தற்போது இந்திய மத்திய அரசு அறிவித்து உள்ளது.

மத்திய அரசின் இந்த திடீர் முடிவு இந்தியா - பாகிஸ்தான் உறவில் பெரிய பிளவை ஏற்படுத்தும் நிலையை உருவாக்கி உள்ளது. காஷ்மீரில் கடந்த சில வாரங்களுக்கு முன் புல்வாமாவில் 44 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டார்கள்.

காங்கிரஸ் என்னை கொடுமைப்படுத்தியது.. நான் திருப்பி கொடுப்பேன்.. பாஜகவில் இணைத்த சாத்வி சபதம்! காங்கிரஸ் என்னை கொடுமைப்படுத்தியது.. நான் திருப்பி கொடுப்பேன்.. பாஜகவில் இணைத்த சாத்வி சபதம்!

மோசம்

மோசம்

இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுக் கொண்டது. ஆனால் இந்த தாக்குதலில் பாகிஸ்தான் மீது இந்தியா கடுமையான புகார் வைத்தது. அதன்பின் இந்தியா நடத்திய பாலகோட் தாக்குதல் காரணமாக இரண்டு நாடுகளுக்கு இடையில் போர் பதற்றம் நிலவி வந்ததும் குறிப்பிடத்தக்கது.

திடீர் முடிவு

திடீர் முடிவு

இந்த நிலையில் தற்போதுதான் இரண்டு நாடுகளுக்கு இடையில் கொஞ்சம் அமைதியான சூழ்நிலை நிலவி வருகிறது. இப்படி இருக்கும் சமயத்தில் பாகிஸ்தான் உடன் எல்லைப்பகுதியில் நடந்து வரும் வர்த்தகத்தை மொத்தமாக நிறுத்துவதாக மத்திய அரசு தெரிவித்து இருக்கிறது. இது நிறைய பாதிப்புகளை ஏற்படுத்த போகிறது.

யாருக்கு நஷ்டம்

யாருக்கு நஷ்டம்

இதனால் இந்திய வியாபாரிகள் அதிகம் கஷ்டப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானுக்கு அவர்கள் பொருட்களை அளித்து வந்ததன் மூலம் லாபம் அடைந்து வந்தனர். தற்போது அந்த வர்த்தகம் மொத்தமாக முடங்கி உள்ளது. இனி இந்தியர்கள் பாகிஸ்தான் எல்லையில் பொருட்களை விற்க முடியாது.

என்ன காரணம்

என்ன காரணம்

பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்த வர்த்தகத்தை பயன்படுத்தி போலி ரூபாய் நோட்டுகளை கடத்துவதாகவும், ஆயுதங்களை கொண்டு வருவதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது. இதனால்தான் இந்த தடையை விதித்தோம் என்று அரசு விளக்கி உள்ளது.

English summary
India stops its border trade with Pakistan as a new twist on Lok Sabha Election time.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X