டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புயலுக்கு இடையே.. அந்தமான் அருகே பிரமோஸ் ஏவுகணையை டெஸ்ட் செய்த இந்தியா.. திடீரென ஏன்? பின்னணி!

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியா ராணுவம் சார்பாக அந்தமான் - வங்கக்கடல் பகுதியில் பிரமோஸ் ஏவுகணை சோதனை செய்யப்பட்டுள்ளது.

இந்தியா - சீனா இடையே லடாக் எல்லையில் உரசல் ஏற்பட்டுள்ளது. இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உரசல் இன்னும் சரியாகவில்லை.

லடாக் மற்றும் அருணாசலப்பிரதேசம் அருகே இதற்காக இந்திய ராணுவம் பிரமோஸ் ஏவுகணைகளை குவித்து உள்ளது. சீனா அத்துமீறலாம் என்பதால் தரையில் இருந்து மற்றும் விமானத்தில் இருந்து தாக்கும் பிரமோஸ் ஏவுகணைகளை இந்தியா எல்லையில் குவித்து உள்ளது.

ஜம்மு காஷ்மீர் எல்லையில் எந்த ராணுவ தாக்குதலும் நடக்கவில்லை.. இந்திய ராணுவம் விளக்கம்!ஜம்மு காஷ்மீர் எல்லையில் எந்த ராணுவ தாக்குதலும் நடக்கவில்லை.. இந்திய ராணுவம் விளக்கம்!

எப்படி

எப்படி

இந்த நிலையில்தான் தரையில் இருந்து இன்னொறு இடத்தில் இடத்திற்கு சென்று குறி வைத்து தாக்கி அழிக்கும் பிரமோஸ் ஏவுகணைகளை இந்திய ராணுவம் இன்று சோதனை செய்துள்ளது. அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இருந்து வங்கக்கடல் அருகே இருக்கும் தீவு ஒன்றில் இந்த சோதனை செய்யப்பட்டடுள்ளது.

வங்கக்கடல்

வங்கக்கடல்

வங்கக்கடலில் தற்போது நிவர் புயல் உருவாகி உள்ளது. இங்கிருந்து சில கிலோ மீட்டர் தூரத்த்தில்தான் இந்த ஏவுகணை சோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் இருந்த சரக்கு கப்பல், போக்குவரத்து கப்பல்களுக்கு ஏற்கனவே எச்சரிக்கை விதிக்கப்பட்டது. இந்த வாரம் முழுக்க இப்படி நிறைய ஏவுகணை சோதனைகள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏன் இப்படி

ஏன் இப்படி

இன்று செய்யயப்பட்ட பிரமோஸ் ஏவுகணை தரையில் இருந்து இன்னொரு பகுதியில் தரையில் இலக்கை தாக்கி அழிக்கும் ஏவுகணை ஆகும். இந்த பிரமோஸ் ஏவுகணையின் துல்லியதன்மையை சோதனை செய்யும் வகையில் இந்த சோதனை நடந்துள்ளது. இந்த பிரமோஸ் ஏவுகணை 290 கிலோ மீட்டர் தூரம் இருக்கும் இலக்குகளை தாக்கும். மேக் 3 வேகத்தில் செல்லும் உலகிலேயே வேகமான ஏவுகணை ஆகும் இது.

இலக்கு

இலக்கு

இந்தியாவிடம் 450 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் இலக்குகளை தாக்கும் பிரமோஸ் ஏவுகணைகளும் கூட உள்ளது. ஆனால் அதை இந்தியா சோதனை மட்டுமே செய்து வருகிறது. இந்த நிலையில் ரஷ்யாவுடன் இணைந்து பிரமோஸ் ஏவுகணையை அப்டேட் செய்ய இந்தியா முடிவு செய்துள்ளது.

800 கிலோ மீட்டர்

800 கிலோ மீட்டர்

800 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் இலக்குகளை தாக்கும் வகையில் இந்தியா ரஷ்யாவுடன் இணைந்து பிரமோஸ் ஏவுகணைகளை உருவாக்க உள்ளது. இதற்கு முன்னோட்டமாக பிரமோஸ் ஏவுகணைகளின் துல்லியத்தன்மையை சோதனை செய்ய இந்தியா முடிவெடுத்து, அந்தமான் பகுதியில் இன்று சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த சோதனை முடிவுகள் குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

English summary
India test fired a land-attack version of the BrahMos from the Andaman and Nicobar Islands today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X