டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அரிசி ஏற்றுமதியில் இந்தியாவின் அசுர வளர்ச்சி! - கையேந்தும் நிலையில் சீனா

Google Oneindia Tamil News

டெல்லி: தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து அரிசி ஏற்றுமதி சரிவடைந்திருக்கும் நிலையில், இந்தியாவிடம் பல நாடுகள் அரிசிக்காக கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

உலகில் மிக முக்கியமான அரிசி விநியோகம் செய்யும் நாடாக இந்தியா வேகமாக உருமாறி வருகிறது. 2020 ஆம் ஆண்டில் தாய்லாந்து, வியட்நாம் உள்ளிட்ட பெரியளவில் அரிசி ஏற்றுமதி செய்யும் நாடுகளின் விநியோகம், வெள்ளம் மற்றும் வறட்சி காரணமாக கடுமையாக வீழ்ச்சியடைந்தது.

India to became a big rice supplier in world china

தவிர, இந்திய அரிசியுடன் ஒப்பிடும்போது, தாய்லாந்து மற்றும் வியட்நாம் வழங்கும் தானியங்களின் விலை டன்னுக்கு கிட்டத்தட்ட 100 டாலர்கள் முதல் 150 டாலர்கள் வரை அதிகமாகும்.

worldstopexports தரவுகளின் படி, வியட்நாமின் அரிசி ஏற்றுமதி 48.6 சதவீதமும், பாகிஸ்தானின் 36.9 சதவீதமும் குறைந்துள்ளது.

சீனா, வியட்நாம், மலேசியா, பங்களாதேஷ் உள்ளிட்ட பல புதிய சந்தைகளுக்கு உடைந்த அரிசியை இந்தியா வழங்கத் தொடங்கியுள்ளது. உலகளாவிய உணவுப் பாதுகாப்பைப் பேணுவதில் அதன் பங்கு மிகவும் தெளிவாக இருப்பதால், ஆப்பிரிக்க நாடுகளும் இந்தியாவில் இருந்து தங்கள் அரிசி வாங்கும் ஆர்டர்களை அதிகரித்துள்ளன.

இந்தியா ஏற்கனவே ஏப்ரல்-நவம்பர் காலக் கட்டத்தில் சுமார் 7 மில்லியன் டன் பாஸ்மதி அல்லாத அரிசியை ஏற்றுமதி செய்துள்ளது, இது 123 சதவீதம் அதிகரித்துள்ளது. அகில இந்திய அரிசி ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் (AIREA) கருத்துப்படி, உடைந்த அரிசியின் மொத்த ஏற்றுமதி 2020-21 ஆம் ஆண்டில் 10 மில்லியன் டன்னை எட்டும்.

அதேபோல் ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கான பாஸ்மதி அரிசியின் ஏற்றுமதி 71 சதவீதம் அதிகரித்துள்ளது.

"அதிக உற்பத்தி மற்றும் சிறந்த விலையுடன் நாட்டின் அரிசி ஏற்றுமதியாளர்களுக்கு 2021 ஆம் ஆண்டு மிகவும் சிறப்பாக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என்று அகில இந்திய அரிசி ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் நிர்வாக இயக்குனர் வினோத் கவுல் தெரிவித்துள்ளார்.

எங்க மகளுக்கு சுகபிரசவம் ஆகாது.. சிசேரியன்தான்னு டாக்டர் சொல்லிட்டார்.. அப்புறம் தான்..! எங்க மகளுக்கு சுகபிரசவம் ஆகாது.. சிசேரியன்தான்னு டாக்டர் சொல்லிட்டார்.. அப்புறம் தான்..!

பாங்காக் போஸ்ட்டின் தகவலின் படி, 2021 ஆம் ஆண்டில் அரிசி ஏற்றுமதி "2020ல் எதிர்பார்க்கப்பட்ட 5.8 மில்லியன் டன்னிலிருந்து சற்று மீண்டெழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவானதாகும்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுவாக தாய்லாந்தில் இருந்து அரிசி ஒரு டன்னுக்கு சுமார் $400- $450 ஆகவும், இந்தியா தானியத்தை ஒரு டன்னுக்கு 300 டாலராகவும் ஏற்றுமதி செய்கிறது.

"இந்த ஆண்டு அரிசி ஏற்றுமதி இருள் நிறைந்ததாகவே உள்ளது, ஏனெனில் உலகளவில் வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்தை மிச்சப்படுத்தவும், மலிவான விலையில் அரிசி வாங்கவும் வாய்ப்புள்ளது" என்று தாய்லாந்து அரிசி ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் கெளரவத் தலைவர் சூக்கியாட் ஓபாஸ்வோங்ஸே குறிப்பிட்டுள்ளார்.

சீனா எப்போதும் தாய்லாந்து, வியட்நாம், மலேசியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து அரிசியை இறக்குமதி செய்துள்ளது, ஆனால் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்வதைத் தவிர்த்தது.

சி.என்.பி.சி அறிக்கைப்படி, சீனாவில் வாழும் மூன்றில் இரண்டு பங்கு மக்களுக்கு அரிசி பிரதான உணவு என்று கூறியுள்ளது. "சீனாவில் கடும் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால் அந்த குறையைப் போக்க அவர்கள் தற்போது இந்தியாவிடம் உதவி கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

English summary
How India became king in rice exports - Here the answer
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X