டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

100 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி- இலக்கை கடக்கிறது இந்தியா- கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு!

Google Oneindia Tamil News

டெல்லி: நாடு முழுவதும் 100 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி என்ற இலக்கு எட்டப்பட உள்ளது. இதனை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.

Recommended Video

    #BREAKING 100 கோடி தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை!

    உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து இருந்து வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா கோரத்தாண்டவம் தொடருகிறது.

    அமெரிக்காவில் ஒரே நாளில் 2,005 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். ரஷ்யாவில் ஒரே நாளில் 1,028 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர்.

    தமிழகத்தில் 57 லட்சம் பேர் 2-ஆம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதது வருத்தம்.. மா.சு தமிழகத்தில் 57 லட்சம் பேர் 2-ஆம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதது வருத்தம்.. மா.சு

    இந்தியா நிலவரம்

    இந்தியா நிலவரம்

    இந்தியாவில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்துள்ளது. உலக நாடுகளின் ஒருநாள் கொரோனா பாதிப்பு பட்டியலில் இந்தியா தற்போது 7-வது இடத்தில் இருக்கிறது. இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 18,359 ஆக உள்ளது. நாட்டில் ஒருநாள் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 160 ஆக குறைந்துள்ளது. இந்தியாவில் நேற்று காலை நிலவரப்படி 1,78,098 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை (ஆக்டிவ் கேஸ்கள்) பெற்று வருகின்றனர். இந்தியாவில் நேற்று 17,560 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தனர்.

    இந்தியாவில் கொரோனா தடுப்பூசி

    இந்தியாவில் கொரோனா தடுப்பூசி

    இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணியும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. நேற்று காலை வரையிலான 24 மணிநேரத்தில் 99,12,82,283 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருந்தது. இன்று காலை வரை இது 99.85 கோடியாக உயர்ந்துள்ளது.

    100 கோடி இலக்கை தாண்டுகிறது

    100 கோடி இலக்கை தாண்டுகிறது

    இன்று இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டோரின் எண்ணிக்கை 100 கோடியை தாண்ட உள்ளது. நமது நாட்டில் ஒரு வினாடிக்கு மொத்தம் 700 தடுப்பூசிகள் போடப்படுகின்றன. நாட்டில் இதுவரை 75% பேர் கொரோனா தடுப்பூசி முதல் டோஸையும் 31% பேர் கொரோனா தடுப்பூசி 2-வது டோஸையும் போட்டுள்ளனர்.

    100 கோடி இலக்கு- கொண்டாட்டஙக்ள்

    100 கோடி இலக்கு- கொண்டாட்டஙக்ள்

    இன்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டோரின் எண்ணிக்கை 100 கோடியை தாண்டும் போது டெல்லி செங்கோட்டையில் பிரமாண்டமான தேசியக் கொடி ஏற்றி கொண்டாடப்பட உள்ளது. அத்துடன் 100 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதை ரயில் மற்றும் பேருந்து நிலையங்கள் என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் அறிவிக்கவும் திட்டமிட்டுள்ளனர். 100% தடுப்பூசி செலுத்திக் கொண்ட கிராமங்களில் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பாராட்டு விழா நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    English summary
    India will cross 1 billion Covid jab milestone today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X