டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஏப்ரல் 2வது வாரம் இந்தியாவில் அவசர நிலை பிரகடனமா? தீயாய் பரவிய போலி மெசேஜ்.. ராணுவம் மறுப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: ஏப்ரல் மாத இரண்டாவது வாரத்தில், இந்தியாவில் அவசரநிலை பிரகடனப்படுத்தும் என்று கூறி சுற்றி வரும் தகவலை, இந்திய ராணுவம் மறுத்துள்ளது.

இந்த செய்தி போலியானது மற்றும் தீங்கிழைக்கும் தன்மை கொண்டது என்று இந்திய ராணுவத்தின் ADG PI டுவிட்டரில் தெரிவித்துள்ளது.

India to declare emergency in mid-April? Absolutely fake says Indian Army

COVID-19 பரவியதிலிருந்து இதுபோன்ற பல செய்திகள் சுற்றி வருகின்றன. மத்திய அரசு நிதி அவசரநிலையை அறிவிக்கும் என்று கூட சில செய்திகளில் கூறப்பட்டது. சில ஊடகங்களில் வெளியான இந்த தகவலை, மத்திய அரசு மறுத்தது.

இந்த நிலையில்தான், மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்க, ஏப்ரல் 2வது வாரத்தில், இந்தியாவில் அவசர நிலை அறிவிக்கப்படும், உள்ளூர் நிர்வாகத்திற்கு உதவுவதற்காக, இந்திய ராணுவம், என்சிசி, என்எஸ்சி அதிகாரிகள் குழுவை களமிறக்கும் என்று, அறிவிக்கப்பட்டது.

ஆனால் இவற்றையெல்லாம், ராணுவமே மறுக்கும் அளவுக்கு நிலைமை போயுள்ளது என்றால், அந்த மெசேஜ்களின் போலித்தன்மையை பற்றி அறிந்து கொள்ளலாம்.

English summary
It is being said that by mid April, an emergency would be declared. The message further says that following the declaration, veterans of the Indian Army, NCC and NSC cadets would be deployed to assist the civil administration.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X