டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

2035ல் இந்தியாவில்.. தாத்தாக்களும், பாட்டிகளும்தான் அதிகம் இருப்பார்களாம்!

Google Oneindia Tamil News

டெல்லி: இளைஞர்களை அதிகம் கொண்ட நாடாக உள்ள இந்தியா 2035 ம் ஆண்டு முதியோர்களின் தேசமாக மாறப்போகிறது.

கடந்த 2014 ம் ஆண்டு ஐநா வெளியிட்ட ஆய்வறிக்கையின்படி உலகம் முழுவதும் 10 வயது முதல் 24 வயதுக்கு உட்பட்ட 180 கோடி இளைஞர்கள் இருந்தனர். இதில் இந்தியாவில் மட்டும் 35.6 கோடி இளைஞர்கள் இருந்தனர். இது இந்திய மக்கள் தொகையில் 28 சதவீதம். இப்படி இளைஞர்களின் நாடாக இருந்த இந்தியா வரும் 2035 ம் ஆண்டு முதியோர்களின் நாடாகப் போகிறது.

India to home more elders by the year 2035

2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி வரும் 2036-ம் ஆண்டில் 26 சதவீதம் உயரும். இப்போது இருக்கும் இளைஞர்களின் எண்ணிக்கையை விட முதியோர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என ஆய்வில் கூறப்படுகிறது. இது குறித்து நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த தேசிய மக்கள் தொகை ஆணையம் நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் எண்ணிக்கை இப்போது இருக்கும் அளவைக் காட்டிலும், இரு மடங்காக அதிகரிக்கும். அதேசமயம், இளைஞர்கள் எண்ணிக்கையில் சரிவு இருக்கும் என தெரிவித்துள்ளது.

சமீபத்தில் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்புத் துறையின் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அதிகாரி ஒருவர் இந்திய மக்கள்தொகை அதிகரிப்பு குறித்தும், முதியோர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு குறித்தும் கூறிய அவர் முதல் கட்ட கணக்கெடுப்பில் அனைத்துவிதமான புள்ளிவிவரங்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

இளைஞர்கள் சுயதொழில் ஆரம்பிங்க.. அரசு வேலைக்காக காத்திருக்கலாமா... அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு இளைஞர்கள் சுயதொழில் ஆரம்பிங்க.. அரசு வேலைக்காக காத்திருக்கலாமா... அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு

கடந்த 2011-ம் ஆண்டு கணக்கீட்டின்படி இந்தியாவின் மக்கள் தொகை 121.10 கோடி. இதுவே 2035-ம் ஆண்டில் 26.8 சதவீதம் அதிகரித்து 153.60 கோடியாக அதிகரிக்கும். ஒட்டுமொத்த மக்கள் தொகை அதிகரிக்கும் அதே வேளையில் முதியோர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரிக்கும். முதியோர்களின் இப்போதைய எண்ணிக்கை 8.6 சதவீதம்.

இது 2035-ம் ஆண்டில் 15.4 சதவீதமாக அதிகரிக்கும். இந்த காலகட்டத்தில் 25 முதல் 29 வயதுள்ள இளைஞர்கள் எண்ணிக்கை 19.0 சதவீதத்தில் இருந்து 15சதவீதமாகக் குறையும் என கணிக்கப்பட்டுள்ளது. 15 வயதுக்குட்பட்டவர்களின் எண்ணிக்கை 30.9 சதவீதத்தில் இருந்து 17 சதவீதமாகக் குறையும். அதாவது அடுத்துவரும் ஆண்டுகளில் மக்களிடையே குழந்தை பெற்றுக்கொள்ளும் எண்ணம் குறையத் தொடங்கும். கடந்த 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பு படி குழந்தை பெற்றுக் கொள்ளும் சதவீதம் 2.4.

இது 2031-35-ம் ஆண்டில் 1.65 சதவீதமாக குறையும். கடந்த 2011-ம் ஆண்டில் 43 சதவீதமாக இருந்த பச்சிளங்குழந்தைகள் இறப்பு வீதமும் குறையத்தொடங்கி இறப்பு வீதம், 15 முதல் 30 ஆகக் குறையும். கிராமங்களை விட நகர்ப்புறங்களில் மக்கள் தொகை 25 சதவீதமாக அதிகரிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

English summary
According to an UN Report India will have more elders by the year 2035.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X