டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

55 நாடுகளுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் தரும் இந்தியா.. ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் தர சம்மதம்

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பபட்ட பல்வேறு நாடுகளுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து வழங்கி வரும் இந்தியா, ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் அந்த மருந்தை வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Recommended Video

    55 நாடுகளுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை ஏற்றுமதி செய்கிறது இந்தியா

    உலகம் முழுவதும் கொரோனாவால் 2134971 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளது. இன்று (வியாழக்கிழமை) ஒரு நாளில் மட்டும் 48540 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 143110 பேர் உலகம்முழுவதும் உயிரிழந்துள்ளனர்.

    அரபு நாடுகளிலும் கொரோனா பரவல் தற்போது வேகமாக அதிகரித்து வருகிறது. அரபு நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் (அமீரகம்) இன்று ஒரு நாளில் மட்டும் 460 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

    அமெரிக்காவில் பெரும் சோகம்.. கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 33000த்தை தாண்டியது!அமெரிக்காவில் பெரும் சோகம்.. கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 33000த்தை தாண்டியது!

    5825 பேருக்கு பாதிப்பு

    5825 பேருக்கு பாதிப்பு

    ஒட்டுமொத்தமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் 5825 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 35 பேர் உயிரிழந்துள்ளனர். 1095 பேர் குணம் அடைந்துள்ளனர்.
    இந்நிலையில் உலகின் பல்வேறு நாடுகளும் கொரோனாவை கட்டுப்படுத்த ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தையே தற்போது தடுப்பு மருந்தாக பயன்படுத்துகின்றன.

    தடையை விலக்கிய இந்தியா

    தடையை விலக்கிய இந்தியா

    இந்த மருந்தை தயாரித்து ஏற்றுமதி செய்து வரும்நாடு இந்தியா தான். இந்தியாவிடம் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை வாங்குவதற்காக அமெரிக்க அதிபர் டிரம்ப் நேரடியாகவே மிரட்டி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.அதன்பிறகு இந்திய அரசு மனிதாபிமான அடிப்படையில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை ஏற்றுமதி செய்வதற்கான தடையை விலக்கியது.

    இந்தியா அளிக்கிறது

    இந்தியா அளிக்கிறது

    தற்போது இந்தியாவிடம் இருந்து அமெரிக்கா உள்பட 50க்கும் மேற்பட்ட நாடுகள் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை தருமாறு கோரிக்கை வைத்தன. அந்த நாடுகளுக்கு மருந்துகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இப்போது ஐக்கிய அரபு அமீரகம் எமிரேட்ஸ் நாடும் தங்களுக்கும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை தருமாறு கோரிக்கை வைத்தது. இதை ஏற்று மருந்தை அனுப்பி வைக்க இநதியா சம்மதித்துள்ளது.

    ஏன் இவ்வளவு கிராக்கி

    ஏன் இவ்வளவு கிராக்கி

    இந்தியாவிடம் இருந்து ஹைட்ராக்ஸி குளோரோகுயின் (எச்.சி.க்யூ) மருந்தை தற்போது 55 நாடுகள் பெற்று வருகின்றன. அவற்றில் 21 நாடுகள் வணிக அடிப்படையில் பெற்றுள்ளன. மற்ற நாடுகள் மிகக் குறைந்த அளவிலான மானியத்தில் மருந்தை வாங்கி உள்ளன. ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து கொரோனாவுக்கு எதிராக நன்கு வேலை செய்வதாக டிரம்ப் சொன்ன பிறகே இந்த மருந்துக்கு உலகம் முழுவதும் பெரும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. எனினும் மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் இந்த மருந்தை உட்கொண்டால் மரணமும் ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

    English summary
    India has also approved supply of Hydroxychloroquine (HCQ) to the United Arab Emirates (UAE), say sources.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X