டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜார்க்கண்ட் தேர்தல்: அடடே இந்தியா டுடே- ஆக்சிஸ் மை இந்தியா சொன்னது போலவே நடக்குதே!

Google Oneindia Tamil News

டெல்லி: ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலுக்கு பிறகு பல்வேறு ஊடகங்கள் நடத்திய எக்சிட் போல்களில் இந்தியா டுடே- ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்பே தற்போது தேர்தல் முடிவுகளுடன் ஒத்து போகிறது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் கடந்த நவம்பர் 30-ஆம் தேதி தொடங்கி கடந்த டிசம்பர் 20-ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை பல்வேறு ஊடகங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பை வெளியிட்டன.

India Today-Axis My India exit poll gets it right again

அதில் இந்தியா டுடே, ஆக்சிஸ் மை இந்தியாவும் கருத்து கணிப்பை வெளியிட்டது. அதன் படி ஜார்க்கண்ட் தேர்தலில் பாஜக 22 முதல் 32 இடங்களில் வெற்றி பெறும். காங்கிரஸ் கூட்டணி 38 முதல் 50 இடங்களை பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.

அதாவது பாஜக ஆட்சியை இழக்கும் என்பதுதான். இந்த கணிப்புகள் தற்போது இன்று வெளியாகி வரும் தேர்தல் முடிவுகளுடன் கிட்டத்தட்ட ஒத்து போகிறது.

ஜேஎம்எம் 30 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 16 இடங்களிலும் பாஜக 25 தொகுதிகளிலும், ஜேவிஎம்பி 3 இடங்களிலும் ஏஜேஎஸ்யூ இரு தொகுதிகளிலும், ஆர்ஜேடி ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றது. அதாவது காங்கிரஸ்-ஜேஎம்எம்- ஆர்ஜேடி கூட்டணியோ அறுதி பெரும்பான்மையை கடந்து 47 இடங்களில் வெற்றி பெற்றது.

இதையடுத்து ஜார்க்கண்ட் மாநில முதல்வராகிறார் ஜேமந்த் சோரன்.

English summary
Election result trends as same as the India today- Axis My India exit poll 2019.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X