டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எதிர்க்கட்சிகளில் பிரதமராகும் தகுதி யாருக்கு.. 52% மக்களின் சாய்ஸ் இதுதான்.. இந்தியாடுடே பரபர சர்வே

Google Oneindia Tamil News

டெல்லி: எதிர்க்கட்சிகளின் அடுத்த பிரதமராகும் தகுதி யாருக்கு உள்ளது என்பது குறித்து எழுப்பப்பட்ட சர்வேயில் பெரும்பாலானவர்களின் தேர்வு ராகுல்காந்தியாக இருந்தது.

எதிர்க்கட்சிகளில் பிரதமராகும் வாய்ப்பு யாருக்கு இருக்கிறது என்று இந்தியா டுடே மற்றும் கார்வி இன்சைட்ஸ் சார்பில் சர்வே எடுக்கப்பட்டது. சுமார் 13 ஆயிரம் பேரிடம் எடுக்கப்பட்ட சர்வேயின் அறிக்கை நேற்று வெளியானது.

மம்தா பானர்ஜி

மம்தா பானர்ஜி

அதில் பிரதமர் நரேந்திர மோடிக்கு மாற்றாக எதிர்க்கட்சிகள் சார்பில் பிரதமராகும் தகுதி ராகுல் காந்தி 52 சதவீதம் உள்ளதாக சர்வே கூறுகிறது. ராகுல் காந்திக்கு அடுத்தப்படியாக பிரதமராகும் வாய்ப்பு மம்தா பானர்ஜிக்கு உள்ளது.

மம்தா இரண்டாவது இடம்

மம்தா இரண்டாவது இடம்

மம்தா பிரதமராக வேண்டுமென 44 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். அதாவது வெறும் 8 சதவீதம் பேரே ராகுலுக்கு அடுத்த படியாக எதிர்க்கட்சிகளின் பிரதமராகும் தகுதி மம்தாவுக்கு உள்ளதாக கூறியுள்ளனர்.

மக்கள் கருதவில்லை

மக்கள் கருதவில்லை

அதே வேளையில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் ஆகியோருக்கு பிரதமராகும் திறமை இருப்பதாக மக்கள் கருதவில்லை.

எத்தனை சதவீதம்

எத்தனை சதவீதம்

வெறும் 4 சதவீதம் பேரே மோடிக்கு மாற்று அரவிந்த் கேஜரிவால் என்று கூறியுள்ளனர். மாயாவதிக்கு 3 சதவீதமும் அகிலேஷ் யாதவுக்கு 5 சதவீதமும் மோடிக்கு பிறகு பிரதமராகும் வாய்ப்புள்ளதாக சர்வே கூறுகிறது.

English summary
India Today and Karvy Insights poll survey says that If Indians were given an option to choose their next prime minister from the opposition parties, Congress president Rahul Gandhi will be the most preferred choice to lead the country.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X