டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியா - அமெரிக்கா 2+2 பேச்சுவார்த்தை - ராணுவ தகவல் பரிமாற்றம் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்து

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியா மற்றும் அமெரிக்க நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் இடையேயான 2+2 பேச்சுவார்த்தை இன்று டெல்லி ஹைதராபாத் இல்லத்தில் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, பாதுகாப்புத்துறை அமைச்சர் மார்க் எஸ்பர் ஆகியோருடன் இந்தியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் தலைமையிலான குழுவினர் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தையில் ராணுவ தகவல் தொடர்பு பரிமாற்றம் தொடர்பான முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

அமெரிக்கா இந்தியா இடையேயான உறவு மற்றும் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் இரு நாட்டு வெளியுறவு மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் இடையேயான 2+2 பேச்சுவார்த்தை ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது.

India-US 2+2 talks discussions at Hyderabad House in New Delhi

இந்த பேச்சுவார்த்தையின் போது பிராந்திய பாதுகாப்பு சர்வதேச விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான 2+2 பேச்சுவார்த்தை இன்றும் நாளையும் நடைபெறுகிறது.

இந்த பேச்சு வார்த்தையில் கலந்துகொள்ள அமெரிக்கா வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் மார்க் எஸ்பர் ஆகியோர் நேற்று டெல்லி வந்தடைந்தனர். இவர்களுக்கு ராணுவ முறைப்படி சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இன்று காலையில் டெல்லி ஹைதராபாத் இல்லத்தில் 2+2 பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, பாதுகாப்புத்துறை அமைச்சர் மார்க் எஸ்பர் ஆகியோருடன் இந்தியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் தலைமையிலான குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

India-US 2+2 talks discussions at Hyderabad House in New Delhi

இந்த பேச்சுவார்த்தையின் போது, பிராந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பு, ராணுவ தகவல் பகிர்வு, ராணுவ தொடர்புகள் மற்றும் பாதுகாப்பு வர்த்தகம் தொடர்பாக விவாதிக்கப்படுகிறது. லடாக்கில் சீனாவுடனான எல்லை பதற்றம், இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம் போன்ற அம்சங்களும் பேச்சுவார்த்தையில் இடம் பெற்றன.

பேச்சுவார்த்தையின் முடிவில் ராணுவ தகவல் பரிமாற்றம் தொடர்பான முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதன் மூலம் இரு நாட்டு பாதுகாப்பு படைகளுக்கான வரைபடங்களை பகிர்ந்து கொள்ள முடியும். எதிரி நாட்டு படையின் நகர்வுகளை கண்காணித்து துல்லிய தாக்குதல்கள் நடத்த முடியும்.

அமெரிக்க ராணுவ சாட்டிலைட் படங்கள்.. உடனுக்குடன் இந்தியாவுக்கு கிடைக்கும்.. கையெழுத்தாகும் ஒப்பந்தம் அமெரிக்க ராணுவ சாட்டிலைட் படங்கள்.. உடனுக்குடன் இந்தியாவுக்கு கிடைக்கும்.. கையெழுத்தாகும் ஒப்பந்தம்

இந்தியா சீனா எல்லைப் பிரச்சனை அமெரிக்கா சீனா இடையேயான வர்த்தக மோதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில் இந்திய அமெரிக்க வெளியுறவு, பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் இடையேயான பேச்சுவார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

English summary
The third India-US 2+2 ministerial dialogue held on Today in Delhi. US secretary of state Mike Pompeo and defense secretary Mark Esper and External affairs minister S Jaishankar and Defence minister Rajnath Singh participate from the Indian side.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X