டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தீவிரவாதத்திற்கு உதவுவோருக்கு எதிராக இந்தியா-அமெரிக்கா இணைந்து செயல்பட முடிவு: மோடி அதிரடி அறிவிப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புடன், டெல்லியிலுள்ள, ஹைதராபாத் இல்லத்தில், இன்று மதியம் பிரதமர் மோடி சந்திப்பு நிகழ்த்தினார். அப்போது சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

Recommended Video

    Trump India Visit|டிரம்ப்பின் இந்திய வருகை... பின்னணி என்ன ?

    பின்னர், இரு தலைவர்களும், கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, இரு நாடுகள் இடையேயான, கூட்டறிக்கையை அவர்கள் வெளியிட்டனர். மோடி உரையாற்றுகையில் கூறியதை பாருங்கள்:

    India, US Have Decided To Enhance Efforts To Hold Supporters Of Terrorism Accountable: PM Modi

    கடந்த 8 மாதங்களில், டிரம்ப்புடனான, என்னுடைய, 5 வது சந்திப்பு இதுவாகும். இந்தியா-அமெரிக்க உறவுகள் இரண்டு அரசுகளுக்கிடையில் மட்டுமல்ல, மக்களை மையமாகக் கொண்டவை என்பதை, நேற்றைய வரவேற்பு தெளிவுபடுத்தியது. 21ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான உறவுகளில் இது ஒன்றாகும்.

    அதிபர் டொனால்டு ட்ரம்ப்புடன், வணிகம், பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்களை பற்றி இன்று ஆலோசனை நடத்தினேன். தீவிரவாதத்திற்கு ஆதரவு அளிப்போருக்கு எதிராக இந்தியா மற்றும் அமெரிக்கா இரண்டு நாடுகளும் இணைந்து செயல்படும்.

    தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையை தீவிரப்படுத்துவது தொடர்பாக இருவரும் ஆலோசித்தோம். பாதுகாப்பு, மின்னுற்பத்தி துறைகளில், கூட்டுறவு மக்களுக்கு இடையேயான உறவு போன்ற அனைத்தையும் குறித்து விவாதித்தோம்.

    வெளிப்படையான ஆரோக்கியமான வர்த்தகத்தை இரு நாடுகளும், மேம்படுத்துவது என்று ஆலோசித்தோம். அமெரிக்கா, இந்தியாவுக்கு எண்ணெய் மற்றும் எரிவாயு விஷயத்தில், முக்கிய ஆதாரமாக மாறியுள்ளது. நமது மொத்த எரிசக்தி வர்த்தகம் கடந்த 4 ஆண்டுகளில் சுமார் 20 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளன. இவ்வாறு மோடி தெரிவித்தார்.

    ட்ரம்ப் பேசுகையில், இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு எதிராக இணைந்து செயல்பட அமெரிக்கா-இந்தியா முடிவு செய்துள்ளது என்று தெரிவித்தார்.

    பிரதமர் மோடி, தனது உரையில், தீவிரவாதத்திற்கு ஆதரவு அளிப்போருக்கு எதிராக இரு நாடுகளும் இணைந்து செயல்பட உள்ளோம் என கூறியது, பாகிஸ்தானை மறைமுகமாக, குறிப்பிட்டுதான் என்று கூறப்படுகிறது. ஒருபக்கம், பாகிஸ்தான் அமெரிக்காவின் நட்பு நாடு என்று நேற்றுதான், ட்ரம்ப் கூறியிருந்தார். ஆனால், இன்று, அவர் இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு எதிராக இந்தியாவுடன் இணைந்து செயல்பட உள்ளதாக கூறியுள்ளார். மேலும், இது இந்தியா-அமெரிக்கா இடையேயான கூட்டு அறிக்கை என்பதால், இந்த வார்த்தைகள் முக்கியத்துவம் பெறுகிறது.

    English summary
    Our defence manufacturers are becoming part of each other's supply chains. Indian forces, today, do most of their training exercises with the US forces. We're also increasing cooperation to increase our homeland security and combating international terrorism. India, US Have Decided To Enhance Efforts To Hold Supporters Of Terrorism Accountable: PM Modi
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X