ஆட்டத்தை தொடங்கிய BRICS.. அடித்து ஆடும் இந்தியா! ஆச்சரியத்தில் ரஷ்யா சொன்னதை பாருங்க
டெல்லி: உலக அளவில் மிகவும் வலிமை மிக்க அமைப்பாக பிரிக்ஸ் வளர்ந்து வருகிறது. இந்த அமைப்பில் தவிர்க்க முடியாத நாடாக தற்போது இந்தியா உருவாகியிருப்பதாக ரஷ்யா பாராட்டியுள்ளது.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்த ரஷ்யாவின் பிரிக்ஸ் நிபுணர் கவுன்சில் தலைவர் ஷெர்பா விக்டோரியா இதை கூறியிருக்கிறார்.

இந்தியாவை பாராட்டிய ரஷ்யா
கடந்த 3ம் தேதி விக்டோரியா ஊடகத்திற்கு பேட்டியளித்திருந்தார். அதில் அவர் பேசியதாவது, "பிரிக்ஸ் அமைப்பில் இந்தியாவின் தலைமைத்துவம் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். மறுபுறம் ஜி20 அமைப்பிலும் இந்தியா தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்திருக்கிறது. கடந்த 2023ல் ஜி20 அமைப்பில் தலைமையேற்கும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்திருந்தது. இதனை மிகச்சரியாக இந்தியா பயன்படுத்தியது. உலக நாடுகளுக்கு ஒத்துழைப்பை வழங்க தயாராக இருக்கிறோம் என்பதை இந்தியா அறிவித்தது.
இந்தியாவின் தலைமை
'ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம்' என்கிற கருப்பொருளில் 2023 ஜி20 மாநாட்டை இந்தியா வழிநடத்தியிருந்தது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, டிஜிட்டல் நிர்வாகம், வர்த்தக சீர்திருத்தங்கள் ஆகியவற்றில் இந்தியா சிறப்பாக இருக்கிறது.
பிரிக்ஸ் அமைப்பை பொருத்தவரை, தற்போது புதிய நாடுகள் இணைந்திருந்தாலும் பன்மைத்துவம் என்கிற கோட்பாட்டையும், ஒற்றுமை மற்றும் சுயமரியாதை என்பதையும் அடிப்படையாக கொண்டு இது இயங்கி வருகிறது. இன்றைய தேதியில் உலகம் முழுவதும் பதற்றம் அதிகரித்திருக்கிறது. இதற்கிடையில் பிரிகிஸ் உரையாடலை முன்வைக்கிறது. அதன் மூலம் பஞ்சாயத்துகளை தீர்க்க முடியும் என்று நம்புகிறது.
பெண்களுக்கான வாய்ப்பு
அந்த வகையல் ஜி20 நாடுகளை விட பிரிக்ஸ் சிறப்பாகவே செயல்படுகிறது என்று நம்புகிறோம். உதாரணமாக ஜி20 நாடுகளில் பெண்களுக்கான வாய்ப்பை எடுத்துக்கொள்ளுங்கள். தலைமை பண்பு, சம பொருளாதார வாய்ப்பு, வேலை வாய்ப்பு உள்ளிட்டவற்றில் பிரிக்ஸ் சிறப்பாகவே இயங்குகிறது" என்று கூறியிருக்கிறார்.
அவர் இப்படி சொன்னதில் உண்மை இருக்கிறது. இந்தியாவில் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் (எம்எஸ்எம்இ) வளர்ச்சி அதிகமாக இருக்கிறது. நாட்டின் மொத்த வேலை வாய்ப்பில் இது 30-40% வரை உருவாக்குகிறது. உள்நாட்டு உற்பத்தியில் 29-30% வரை பங்களிக்கிறது. ஏற்றுமதியில் 45% வரை எம்எஸ்எம்இ துறையின் பங்கு இருக்கிறது.
இந்தியா சாதித்தது இதுதான்
இந்த துறையில் பெண்கள் கணிசமான அளவில் இருக்கிறார்கள். அதாவது மொத்த எம்எஸ்எம்இ துறையில் பெண்கள் தலைமை வகிக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை 20.5%. இது குறைவாக தெரிந்தாலும், இந்நிறுனங்கள் வீரியமாக செயல்படுகின்றன. மொத்த வேலை வாய்ப்பில் இந்நிறுவனங்கள், 18.73% பங்களிக்கின்றன. மொத்த முதலீட்டில் இவை 11.15% தனது பங்கை செலுத்துகிறது.
டாப்பில் தமிழ்நாடு
2021ம் ஆண்டு புள்ளிவிரவங்களின்படி இந்தியாவின் எம்எஸ்எம்இ துறையில் மொத்தம் 11 கோடி பேர் வேலை செய்கிறார்கள். இதில் பெண்களின் பங்களிப்பு 24 சதவிகிதமாகும். இது பாதிக்கு பாதி கிடையாதுதான். ஆனால் இந்த அளவு கூட ஜி20 நாடுகளில் பெண்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என்பது வேறு கதை. மாநில வாரியாக பார்த்தால் மேற்கு வங்கம், தமிழ்நாடு மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்கள்தான் இந்தியாவில் பெண்கள் தலைமை அதிகமாக இருக்கும் எம்எஸ்எம்இ துறைகளை கொண்டிருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.
இதையெல்லாம் குறிப்பிட்டுதான் ரஷ்யா நமக்கு பாராட்டை தெரிவித்திருக்கிறது. இந்த பாராட்டுடன் மேலும் நம் நாடு வளரட்டும்.












Click it and Unblock the Notifications