டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இஸ்ரேல்- அரபு எமிரேட்ஸ் உடன்பாடு- இந்தியா வரவேற்பு! பாலஸ்தீன நிலைப்பாடு தொடரும் என அறிவிப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: இஸ்ரேல்- ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையேயான வரலாற்று சிறப்புமிக்க உடன்பாட்டை வரவேற்பதாக இந்தியா அறிவித்துள்ளது. அதேநேரத்தில் பாலஸ்தீனம் தொடர்பான இந்தியாவின் நிலை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    Israel-UAE-US Deal : இந்தியாவின் நிலைப்பாடு

    பாலஸ்தீன பிரச்சனையால் அரபு நாடுகளுக்கும் இஸ்ரேல் நாட்டுக்கும் இடையேயான ராஜாங்க ரீதியான உறவுகள் முட்டுக்கட்டையாக இருந்து வந்தன. இந்த நிலையில் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் முயற்சியால் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இஸ்ரேல் இருநாடுகளும் ராஜாங்க ரீதியான உறவுகளை உருவாக்க ஒப்புக் கொண்டுள்ளன.

    India welcomes UAE-Israel deal,

    இது தொடர்பான ஒப்பந்தம் வரலாற்று சிறப்புமிக்கதாக பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தை தொடர்ந்து பாலஸ்தீன நிலப்பகுதியை ஆக்கிரமிது இஸ்ரேல் தமது நாட்டுடன் இணைக்காது என கூறப்பட்டுள்ளது. ஆனால் பாலஸ்தீனமோ இதனை நிராகரித்ததுடன், எமிரேட்ஸ் செய்திருப்பது துரோகம் என சாடியுள்ளது.

    இந்நிலையில் இந்த ஒப்பந்தத்தை வரவேற்பதாக எமிரேட்ஸ் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா பின்னிடம் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆதரவு தெரிவித்தார். இதனை பாராட்டி தமது ட்விட்டர் பக்கத்திலும் ஜெய்சங்கர் பதிவிட்டார்.

    <span class= 74-வது சுதந்திர நாள் கொண்டாட்டம்: டெல்லி செங்கோட்டையில் இன்று பிரதமர் மோடி கொடியேற்றி வைத்து உரை" title=" 74-வது சுதந்திர நாள் கொண்டாட்டம்: டெல்லி செங்கோட்டையில் இன்று பிரதமர் மோடி கொடியேற்றி வைத்து உரை" /> 74-வது சுதந்திர நாள் கொண்டாட்டம்: டெல்லி செங்கோட்டையில் இன்று பிரதமர் மோடி கொடியேற்றி வைத்து உரை

    இதனிடையே வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அனுராத் ஶ்ரீவத்சவா டெல்லியில் செய்தியாளர்களிடம் இந்த ஒப்பந்தம் குறித்து பேசினார். அப்போது, மேற்காசியாவில் அமைதி நீடித்து நிலவ வேண்டும் என்பதுதான் இந்தியாவின் நிலைப்பாடு. ஆகையால் எமிரேட்ஸ்- இஸ்ரேல் ஒப்பந்தத்தை வரவேற்கிறோம்.

    அதேநேரத்தில் பாரம்பரியமாக பாலஸ்தீனத்துக்கான இந்தியாவின் ஆதரவும் தொடரும் என்றும் ஶ்ரீவத்சவா கூறினார்.

    English summary
    India on Friday welcomed the full normalisation of ties between the United Arab Emirates and Israel.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X