டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தா பிடிங்க ரூ. 3743 கோடி.. மாலத்தீவு உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு.. இந்தியா தாராள உதவி!

Google Oneindia Tamil News

டெல்லி: மாலத்தீவில் இந்தியா ரூ. 3743 கோடியில் கிரேட்டர் மாலே இணைப்புத் திட்டத்தை அறிவித்துள்ளது. மாலத்தீவில் இந்தியா கொண்டு வரும் மிகப்பெரிய திட்டம் இது என்று கருதப்படுகிறது. மாலத்தீவு நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில் இந்த திட்டத்துக்கு இந்தியா நிதியுதவி அளித்துள்ளது.

இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ட்விட்டரில் பதிவு செய்து தகவலில், ''இந்தியாவுக்கும், மாலத்தீவுக்கும் நல்ல உறவு இருந்து வருகிறது. இருநாடுகளுக்கும் இடையே வர்த்தகம், பொருளாதாரம் உயர்த்தும் வகையில் சரக்கு போக்குவரத்து வழக்கம் போல் செயல்படும். மாலத்தீவில் வேலை வாய்ப்பு, சுற்றுலா, மருத்துவ உதவிகள் பெறும் வகையில் புதிய இணைப்பு திட்டங்கள் கொண்டு வரப்படுகிறது. இதுகுறித்து மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா ஷஹித்துடன் பேச்சுவார்த்தை முடிந்துள்ளது.

India will fund to Greater Male Connectivity Project through a 500$ says minister Jaishankar

மாலத்தீவில் மேற்கொள்ளப்படும் திட்டத்தில் 6.7 கி. மீட்டர் தொலைவுக்கு பாலம் மற்றும் சாலைகள் அமைக்கப்படும். வில்லின்கிலி, கலிபஹு, திலபுஷி ஆகிய குட்டித் தீவுகள் மால்த்தீவுடன் இணைக்கப்படும். இதன் மூலம் மாலத்தீவின் பொருளாதாரம் மேம்படும். சாலை மற்றும் பாலம் அமைக்கும் திட்டத்துக்கு இந்தியா ரூ. 3743 கோடி கொடுக்கும். இதில் ரூ. 748 கோடி உதவித்தொகையாக அளிக்கப்படும். மீதமுள்ள நிதி கடனாக அளிக்கப்படும்.

India will fund to Greater Male Connectivity Project through a 500$ says minister Jaishankar

கொரோனா காலத்திலும் மாலத்தீவுக்கும், இந்தியாவுக்கும் இடையே போக்குவரத்து நடந்து வருகிறது. மாலத்தீவின் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில் இந்த போக்குவரத்து நீடிக்கப்பட்டு வருகிறது'' என்று தெரிவித்துள்ளார்.

India will fund to Greater Male Connectivity Project through a 500$ says minister Jaishankar

மாலத்தீவின் அதிபராக கடந்த 2018ல் இப்ராஹீம் மொஹம்மது சொலி பதவியேற்றதில் இருந்து இன்று வரை அந்த நாட்டுக்கு இந்தியா மொத்தம் 2 பில்லியன் டாலர் வரை நிதியுதவி அளித்துள்ளது.

Recommended Video

    Ramar நேபாளி என்றால் Buddhar இந்தியனா இருக்க கூடாதா? | Oneindia Tamil

    கொரோனா பரவல்.. தமிழகம் முழுக்க சுதந்திர தின கிராமசபைக் கூட்டம் ரத்து.. தமிழக அரசு அறிவிப்பு!கொரோனா பரவல்.. தமிழகம் முழுக்க சுதந்திர தின கிராமசபைக் கூட்டம் ரத்து.. தமிழக அரசு அறிவிப்பு!

    English summary
    India will fund to Greater Male Connectivity Project through a 500$ says minister Jaishankar
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X