டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டிரம்ப் vs மோடி.. முதல்முறை அமெரிக்காவை எதிர்க்க துணியும் இந்தியா.. ஈரானுக்கு கைகொடுக்க பிளான்!

அமெரிக்கா ஈரான் இடையே நிலவி வரும் பிரச்சனையில், இந்தியா அமெரிக்காவிற்கு எதிராக களமிறங்க முடிவெடுத்து இருப்பதாக செய்திகள் வருகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    கடும் கோபத்தில் டிரம்ப்! இந்தியா மீது பொருளாதார தடையா?- வீடியோ

    டெல்லி: அமெரிக்கா ஈரான் இடையே நிலவி வரும் பிரச்சனையில், இந்தியா அமெரிக்காவிற்கு எதிராக களமிறங்க முடிவெடுத்து இருப்பதாக செய்திகள் வருகிறது.

    அமெரிக்கா ஈரான் இடையே கடுமையான பிரச்சனைகள் நிலவி வருகிறது. ஈரான் அமெரிக்கவுடன் செய்திருந்த அணு ஆயுத ஒப்பந்தத்தை மதிக்கவில்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றஞ்சாட்டினார்.

    இதையடுத்து அணு ஆயுத ஒப்பந்தத்தை முறிக்க போவதாக ஈரான் தெரிவித்து வந்தது. இதனால் கோபம் அடைந்த அமெரிக்கா ஈரான் மீது 3 பொருளாதார தடைகளை விதித்து இருந்தது.

    கிடைக்கிற கேப்பல்லாம் யூஸ் பண்ணிப்போம்ல.. இதுதாங்க உண்மையான இந்திய மண்.. சொல்கிறார் எஸ்வி சேகர்! கிடைக்கிற கேப்பல்லாம் யூஸ் பண்ணிப்போம்ல.. இதுதாங்க உண்மையான இந்திய மண்.. சொல்கிறார் எஸ்வி சேகர்!

    என்ன தடை

    என்ன தடை

    அதில் முதல் இரண்டு தடைகள் மிக முக்கியமானது. அதன்படி ஈரானிடம் இருந்து உலக நாடுகள் எதுவும் எண்ணெய், பெட்ரோல், டீசல் வாங்க கூடாது என்று இதில் குறிப்பிட்டது. இதற்கான தடை சென்ற வருடமே அமலுக்கு வந்தது. சீனா, இந்தியா, துருக்கிக்கு மட்டும் கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது.

    என்ன நடந்தது

    என்ன நடந்தது

    இதையடுத்து கடந்த மே 2ம் தேதியுடன் இந்த கால அவகாசம் முடிவடைந்தது. துருக்கி தற்போது ஈரானிடம் இருந்து பெட்ரோல் வாங்குவதை மொத்தமாக நிறுத்திவிட்டது. சீனா இதில் இன்னும் தெளிவான முடிவை எடுக்கவில்லை. ஆனால் இந்தியா பெட்ரோல் வாங்குவதை தற்காலிகமாக தேர்தலை முன்னிட்டு நிறுத்தியது.

    ஆனால் என்ன

    ஆனால் என்ன

    ஆனால் அப்போதே இதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று இந்திய தரப்பு அமெரிக்காவிடம் கேட்டு இருந்தது. ஆனால் அதற்கு டிரம்ப் ஒப்புக்கொள்ளவில்லை. இந்த நிலையில், ஈரானிடம் இருந்து தொடர்ந்து எண்ணெய் வாங்க இருப்பதாக இந்திய முடிவெடுத்துள்ளது. அமெரிக்காவின் தடையை மீறி எண்ணெய்யை வாங்க உள்ளதாக தகவல்கள் வருகிறது.

    விரைவில் ஒப்பந்தம்

    விரைவில் ஒப்பந்தம்

    இதற்காக இந்தியா ஈரானுடன் விரைவில் ஒப்பந்தம் போட போகிறது என்றும் கூறுகிறார்கள். நேரடியாக இந்தியா பெட்ரோல் டீசலை டெலிவரி செய்யும் வகையில் இந்த ஒப்பந்தம் போடப்பட உள்ளது என்று கூறப்படுகிறது. அதே சமயம் தடையை மீறி ஒப்பந்தம் நடப்பதால் முன்பை விட குறைந்த விலையில் பெட்ரோல் டீசலை ஈரானிடம் இருந்து வாங்க இந்தியா முடிவெடுத்து இருப்பதாக தெரிகிறது.

    பிரச்சனை

    பிரச்சனை

    ஈரான் அமெரிக்கா இடையில் நிலவும் பிரச்சனையில் ஏனோ எந்த ஒரு நாடும் அமெரிக்காவை எதிர்க்கவில்லை. சீனா, ரஷ்யா கூட அமெரிக்காவை எதிர்த்து கேள்வி கேட்கவில்லை. ஆனால் இதில் இந்தியாதான் முதல்முறை வித்தியாசமான முடிவை எடுத்து, அமெரிக்காவிற்கு எதிராக களமிறங்கி உள்ளது. ஈரானுடன் கைகோர்க்கும் மோடியின் முடிவு டிரம்ப் தரப்பிற்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

    English summary
    India won't follow US rules anymore, It may buy Oil from Iran amidst Sanctions.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X