டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம்.. முதல் கட்ட தேர்வை நிறைவு செய்ய விமான படை

Google Oneindia Tamil News

டெல்லி: மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக விண்ணுக்கு அனுப்பப்படும் வீரர்களுக்கான முதல் கட்ட தேர்வை நடத்தி முடித்துள்ளது.

அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்து விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்தை மேற்கொள்ள இந்தியா முயற்சித்து வருகிறது. இதற்கு ககன்யான் திட்டம் என பெயரிடப்பட்டுள்ளது.

இதை மத்திய அரசு அறிவித்த பிறகு 2022-ஆம் ஆண்டு நிறைவேற்றுவதற்கான முயற்சிகளில் இஸ்ரோ தீவிரமாகியுள்ளது. இதற்காக ரூ 10 ஆயிரம் கோடி ஒதுக்கப்படுகிறது. இதற்காக ரஷ்யா, பிரான்ஸ் நாட்டுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது.

Indian Air Force completes first level of selection for Gaganyan Mission

இதற்காக முதலில் 2 ஆளில்லா விண்கலங்களும் மனிதர்களை கொண்டு செல்லும் ஒரு விண்கலமும் தயாரிக்கப்படவுள்ளன. அவ்வாறு தயாரிக்கப்பட்ட பிறகு இரண்டு முறை ஆளில்லா விண்கலன்களை விண்ணுக்கு அனுப்பி ஆய்வு செய்யப்படும்.

பின்னர் வீரர்களுக்காக தயாரிக்கப்பட்ட விண்கலம் அனுப்பப்படும். இதற்காக இந்திய விமான படை முதல்கட்ட தேர்வை நடத்தியுள்ளது. கடுமையான உடல் திறன், பரிசோதனை, ஆய்வகப் பரிசோதனைகள், கதிர்வீச்சு பரிசோதனைகள், மருத்துவ பரிசோதனை, மனதிடத்திற்கான சோதனைகள் ஆகியவற்றின் மூலம் வீரர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

இத்தனை தேர்வுகளில் தேர்ச்சியாகும் 2 முதல் 3 வீரர்கள் ககன்யான் திட்டத்துக்கு தேர்வு செய்வர் என கூறப்பட்டுள்ளது.

English summary
IAF completed Level-1 of Indian Astronaut selection at Institute of Aerospace Medicine. Selected Test Pilots underwent extensive physical exercise tests, lab investigations, radiological tests, clinical tests & evaluation on various facets of their psychology.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X