டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பாகிஸ்தான் வான் எல்லைக்குள் இருந்து சர்ரென பாய்ந்து வந்த விமானம்.. இடை மறித்த இந்திய போர் விமானங்கள்

Google Oneindia Tamil News

டெல்லி: பாகிஸ்தானின் கராச்சியிலிருந்து இந்திய வான் எல்லைக்குள் அனுமதியின்றி நுழைந்த ஜார்ஜியா நாட்டு விமானம் இந்திய போர் விமானத்தால் இடைமறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இன்று மதியம் 3.15 மணியளவில், இந்திய வான் எல்லைக்குள், வடக்கு குஜராத் பகுதிக்குள், அனுமதியின்றி ஒரு விமானம் பாகிஸ்தான் வான் எல்லைக்குள் இருந்து திடீரென நுழைந்தததை கண்டறிந்த இந்திய விமானப்படை அதிகாரிகள் உடனடியாக ஆக்ஷனில் இறங்கினர். இதுகுறித்து எச்சரிக்கைகள் பறந்தன.

Indian Air Force fighter jets force cargo plane coming from Pakistan

உடனடியாக இந்திய விமானப்படையின் சுகோய் விமானங்களில் பறந்தனர் விமானப்படையினர். சந்தேகத்திற்கிடமான விமானத்தை நடுவானில் இடைமறித்தன இந்திய விமானப்படை விமானங்கள். உடனடியாக தரையிறங்குமாறு, உத்தரவிட்டனர்.

இதையடுத்து, அந்த விமானம், ஜெய்ப்பூரில் தரையிறக்கப்பட்டது. விசாரணையில், அது கராச்சியிலிருந்து, டெல்லி நோக்கி சென்ற விமானம் என்பது தெரியவந்துள்ளது.

ஜார்ஜியா நாட்டின் ட்பிலிசி நகரிலிருந்து, கராச்சி வழியாக டெல்லி சென்று கொண்டிருந்ததாக பைலட் தெரிவித்துள்ளார். சோவியத் ரஷ்யா தயாரிப்பு இன்ஜின் கொண்ட அந்த விமானம் அன்டோனோவ் ஏஎன் 12 வகையை சேர்ந்த மிகப்பெரிய சரக்கு விமானமாகும்.

27,000 அடி உயரத்தில் இந்த விமானம் பறந்தபோது இடை மறிக்கப்பட்டது. எதற்காக அனுமதிக்கப்பட்ட பாதையை தவிர்த்து வேறு பாதையில் ஏன் அது பயணித்தது என்பது பற்றி பைலட்டிடம் விசாரணை நடந்து வருகிறது. விமானத்தில் என்ன உள்ளது என்பது குறித்தும் பரிசோதனைகளை நடத்தி வருகிறார்கள், அதிகாரிகள்.

இந்தியா-பாகிஸ்தான் நடுவே கடந்த பிப்ரவரி மாதம் கடும் யுத்த சூழ்நிலை நிலவிய நிலையில், பாகிஸ்தான் வான் எல்லைக்குள் இருந்து இந்தியாவிற்குள் அனுமதியின்றி வந்த விமானத்தால் பல மணி நேரம் பரபரப்பு சூழ்நிலை நிலவியது என்னவோ உண்மை.

English summary
Indian Air Force fighter jets force an Antonov AN-12 heavy cargo plane coming from Pakistani Air space to land at Jaipur airport. Questioning of pilots on.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X