டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அடுத்தடுத்து அதிரடி.. இந்திய விமானப்படை திறன் 20% அதிகரிப்பு.. என்ன காரணம்?

Google Oneindia Tamil News

டெல்லி: கடந்த சில மாதங்களில், இந்திய விமானப்படை தனது திறனை 20 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது என்று, தகவல்கள் வெளியாகியுள்ளன.

விமானப்படையின், போர் திறனை அதிகரிக்க விமானப்படை கடந்த சில மாதங்களில் மட்டும் 2 ஆயிரம் விமான வீரர்களுக்கு கூடுதலாக விமானங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த முடிவு விமானப்படையின் திறனை 20% அதிகரித்துள்ளது என்று ராணுவ வட்டாரங்கள் செய்தி நிறுவனம் ஒன்றிடம் தெரிவித்தன.
இது படைகளின் செயல்பாட்டு திறனை அதிகரிப்பது மட்டுமல்லாமல், விமானப்படை வீரர்கள் மீதான அழுத்தத்தையும் குறைக்கும்.

Indian Air Force increased the strength of its combat aircraft squadrons by 20%

2019ல் பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில், இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலுக்குப் பின்னர், விமானப்படை தனது போர் திறனை அதிகரிக்க தீவிரம் காட்டி வருகிறது. ஏர்-டு-ஏர் ஏவுகணைகள் மற்றும் வானில் இருந்து தரையில் உள்ள இலக்குகளை குறி வைத்து தாக்கும் ஆயுத அமைப்புகள், ஸ்பைஸ் -2000 குண்டுகள் மற்றும் ஸ்ட்ரம் டேங்க் எதிர்ப்பு வழிகாட்டும் ஏவுகணைகள் ஆகியவை கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன.

முதல் போர் விமான படைப்பிரிவு தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இதில் சுகோய் -30 எம்.கே.ஐ போர் விமானங்களும் அடங்கும். இந்தியப் பெருங்கடலைக் கண்காணிப்பதில் அவர்கள் மிக முக்கிய பங்கு வகிப்பார்கள் என்று விமானப்படை கூறுகிறது. இது தவிர, கடற்படை மற்றும் விமானப்படை பிரிவுகளும் உதவி பெறும். இந்த சுகோய் விமானங்கள் அனைத்திலும் பிரம்மோஸ் ஏவுவகணைகள் பொருத்தப்பட்டுள்ளன.

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட போர்விமானம் தேஜஸ் கோவை சூலூர் விமானப்படைத் தளத்தில் விமானப் படையில், 2018 ஜூலை மாதம் சேர்க்கப்பட்டது. முன்னதாக இது பெங்களூரில் நிறுத்தப்பட்டிருந்தது.

English summary
The Indian Air Force (IAF) has increased the strength of its combat aircraft squadrons by 20 per cent for better preparedness in war-fighting.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X