டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

8 அதிநவீன அப்பாச்சி போர் ஹெலிகாப்டர்கள் விமானப்படையில் சேர்ப்பு.. குங்குமம், தேங்காய் உடைத்து பூஜை

Google Oneindia Tamil News

Recommended Video

    Watch Video : Apache choppers Ceremony

    டெல்லி: இந்திய விமானப் படையில் 8 அதிநவீன அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள் இன்று சேர்க்கப்பட்டுள்ளன. அமெரிக்காவிடமிருந்து வாங்கப்பட்ட அப்பாச்சி ஹெலிகாப்டர்கள், மலை, காடு போன்ற கடுமையான பகுதிகளிலும் எதிரிகளை தாக்க பயன்படும்.

    பதன்கோட் விமானப்படை தளத்தில் இன்று காலை நடைபெற்ற ஹெலிகாப்டர்கள் சேர்ப்பு விழாவில், விமானப்படை தளபதி, பி.எஸ்.தனோவா முக்கிய விருந்தினராக கலந்து கொண்டார். வாட்டர் சல்யூட் அடித்து, இந்த ஹெலிகாப்டர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

    Indian Air Force inducts 8 new Apache attack choppers

    மேற்கு பிராந்திய விமானப்படை தளபதி ஆர்.நம்பியார் பதான்கோட் விமான நிலையத்தில் வைத்து ஹெலிகாப்டர்களுக்கு 'பூஜை' நடத்தினார். ஹெலிகாப்டர்களுக்கு குங்குமம் வைக்கப்பட்டு, தேங்காய் உடைத்து, இந்த பூஜைகள் நடத்தப்பட்டன.

    அப்பாச்சி போர் ஹெலிகாப்டர்களை இயக்கும் உலகின் 14 வது நாடு இந்தியாவாகும். இந்திய விமானப்படை, செய்தித் தொடர்பாளர் அனுபம் பானர்ஜி கூறுகையில், தற்போது விமானப்படையிடம் 8 அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள் உள்ளன. படிப்படியாக 22 ஹெலிகாப்டர்கள் சேர்க்கப்பட உள்ளன.
    நம்மிடம் இதற்கு முன்பும் பல போர் ஹெலிகாப்டர்கள் உள்ளன. ஆனால், இது மிக துல்லியமாக தாக்கக்கூடிய ஹெலிகாப்டராகும்.

    வடை தின்னோமோ.. வாயை துடைச்சோமா.. பேப்பரை கீழே போட்டாமோன்னு இருந்தா நல்லது.. இல்லாட்டி!வடை தின்னோமோ.. வாயை துடைச்சோமா.. பேப்பரை கீழே போட்டாமோன்னு இருந்தா நல்லது.. இல்லாட்டி!

    AH-64E அப்பாச்சி உலகின் மிக முன்னேறிய மல்டி-ரோல் போர் ஹெலிகாப்டர்களில் ஒன்றாகும், இது அமெரிக்க ராணுவத்தாலும் பயன்படுத்தப்படுகிறது.

    விமானப்படை தளபதி தனோவா கூறுகையில் "அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் நமது தேவைகளுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்டுள்ளன. சரியான நேரத்தில் ஹெலிகாப்டர்களை வழங்கியுள்ளார்கள். நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்" என்றார்.

    22 அப்பாச்சி ஹெலிகாப்டர்களை வாங்குவதற்காக, இந்திய விமானப்படை 2015, செப்டம்பரில் அமெரிக்க அரசு மற்றும் போயிங் லிமிடெட் நிறுவனத்துடன் பல பில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. 22 ஹெலிகாப்டர்களில் முதல் நான்கு விமானங்களை போயிங் கடந்த ஜூலை 27ம் தேதி ஒப்படைத்தது.

    English summary
    Air Chief Marshal BS Dhanoa and Western Air Commander Air Marshal R Nambiar near the Apache choppers for 'Pooja' ceremony before induction at the Pathankot Air Base. India is the 16th nation in the world to be operating the Apache attack helicopters.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X