டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாக். போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது உண்மைதான்.. ரேடார் ஆதாரம் இருக்கு.. இந்திய விமானப்படை அதிரடி

Google Oneindia Tamil News

Recommended Video

    பாக். போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது உண்மைதான் - இந்திய விமானப்படை

    டெல்லி: பாகிஸ்தானின் எப்-16 ரக போர் விமானத்தை இந்தியா சுட்டு வீழ்த்தியது உண்மைதான் என்று இந்திய விமானப்படை, இன்று மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

    புல்வாமா, தாக்குதலை தொடர்ந்து இந்திய விமானப்படையின் மிராஜ் வகை போர் விமானங்கள், பிப்ரவரி 26ஆம் தேதி பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று தீவிரவாத முகாம்கள் மீது குண்டுகளை வீசி அழித்துவிட்டு வந்தன.

    இதற்கு பதிலடியாக 27 ஆம் தேதி பாகிஸ்தான் நாட்டின் போர் விமானங்கள், ஜம்மு காஷ்மீர் எல்லையில், அத்துமீறி நுழைந்து இந்திய ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்த முற்பட்டன.

    இதை எதிர்த்து இந்திய போர்விமானங்கள் பதிலடி தாக்குதல் நடத்தின. அப்போது விங் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமான், மிக்-21 வகை விமானத்தில் பாகிஸ்தானின் எப்-16 வகை விமானத்தை விரட்டிச் சென்றார்.

    தேர்தல் வந்தாச்சுல்ல.. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி வீட்டுக்கு விரைந்து சென்ற அமித் ஷா! தேர்தல் வந்தாச்சுல்ல.. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி வீட்டுக்கு விரைந்து சென்ற அமித் ஷா!

    அபிநந்தன் கைது

    அபிநந்தன் கைது

    அபிநந்தன் விமானத்தின் மூலம் நடத்திய தாக்குதலில் எப்-16 விமானம் நொறுங்கி விழுந்த கூறப்பட்டது. பாகிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதலில் அபிநந்தன் விமானம், பாகிஸ்தான் எல்லையில் விழுந்தது. அப்போது, பாரசூட் மூலமாக, அபிநந்தன் விமானத்திலிருந்து குதித்து பாக், வீரர்களிடம் பிடிபட்டார். இதன் பிறகு சர்வதேச நாடுகளின் நெருக்கடி காரணமாக, அபிநந்தனை, நல்லெண்ண அடிப்படையில் விடுவிப்பதாக பாகிஸ்தான் கூறி விடுவித்தது. இதனிடையே, பாகிஸ்தானின் போர் விமானத்தை இந்தியா, சுட்டு வீழ்த்தியதாக கூறப்படுவது பொய் என்று பாகிஸ்தான் கூறியது.

    ஏவுகணை உதிரிபாகங்கள்

    ஏவுகணை உதிரிபாகங்கள்

    இதற்கு பதிலடியாக எப்-16 வகை விமானத்தில் மட்டுமே பயன்படுத்தக்கூடிய ஏவுகணை உதிரிபாகம் உடைந்து விழுந்து கிடந்ததை இந்தியப் படையினர் ஆதாரமாக காட்டி இருந்தனர். ஆனால் சமீபத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த ஃபாரின் பாலிசி என்ற இதழ் வெளியிட்ட செய்தியில், அமெரிக்க அதிகாரிகள் பாகிஸ்தானுக்கு சென்று தாங்கள் வழங்கியிருந்த எப்-16 விமானங்களை எண்ணிப் பார்த்து சோதித்து பார்த்ததாகவும், அப்போது எந்த ஒரு விமானமும் மாயமாகவில்லை என்று தெரிய வந்ததாகவும் செய்தி வெளியிட்டது.

    உண்மைதான்

    உண்மைதான்

    எனவே, இந்திய அரசு கூறிய தகவல் உண்மைக்குப் புறம்பானது என்று சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில் இன்று இந்திய விமானப்படையின் ஏர் வைஷ் மார்ஷல் ஆர்ஜிகே கபூர் நிருபர்களிடம் கூறுகையில், பாகிஸ்தானின் எப்-16 போர் விமானத்தை இந்திய விமானம் சுட்டு வீழ்த்தியதற்கான, ஆதாரம் உள்ளது. அதேநேரம் பாதுகாப்பு ரகசிய காரணங்களுக்காக, அந்த ஆதாரங்களை பொதுவெளியில் தற்போது வெளியிட முடியாது என்று தெரிவித்தார்.

    ரேடார் படங்கள்

    பிப்ரவரி 27ம் தேதி இந்திய வானிலை வான் எல்லைக்குள் பாகிஸ்தான் போர் விமானங்கள் நுழைந்ததும், அவற்றை இந்திய விமானப்படை விமானங்கள் திருப்பி விரட்டியடித்ததுற்குமான, ரேடார் ஆதாரங்களை புகைப்படங்களாக இந்திய விமானப்படை வெளியிட்டுள்ளது. எப்16 வகை போர் விமானங்களை இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்த கூடாது என அமெரிக்கா நிபந்தனை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    English summary
    The IAF has irrefutable evidence of not only use fact that F-16 was used by PAF on 27 February but also that an IAF MiG21 Bison shot down a PAF F-16, said Air Vice Marshal RGK Kapoor.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X