டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாக். ராணுவத்திடம் சிக்கும் முன் அபிநந்தன் அனுப்பிய கடைசி ரேடியோ மெசேஜ்?... வெளிவராத புதிய தகவல்

Google Oneindia Tamil News

டெல்லி:பாகிஸ்தான் நாட்டு ராணுவத்திடம் சிக்கும் முன்பாக... விமானி அபி நந்தன் அனுப்பிய கடைசி ரேடியோ தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த புதன்கிழமை பாகிஸ்தான் விமானப்படையின் போர் விமானங்கள் இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைந்தன. அந்த விமானங்களை எதிர்க்க மிக் ரக போர் விமானத்தில் விங் கமாண்டர் அபிநந்தன் சென்றார்.

ரஜோரி வான்வெளியில் பாகிஸ்தான் போர் விமானங்களை அவர் இடை மறித்தார். அப்போது நிகழ்ந்த சண்டையில் அபிநந்தன் பயணித்த விமானத்துக்கு சிக்கல் ஏற்பட்டது.

ஏவுகணை பயன்பாடு

ஏவுகணை பயன்பாடு

ஏவுகணை ஒன்றை பயன்படுத்தி அபிநந்தன் பாகிஸ்தானின் விமானத்தை வீழ்த்தியுள்ளார். அந்த ஏவுகணையை பயன்படுத்த அபிநந்தன் முடிவு செய்தார்.

உடைந்த விலா எலும்பு.. தண்டுவடத்தில் காயம்.. ''பக்'' இருந்ததா? அபிநந்தனின் பரபர ஸ்கேன் ரிப்போர்ட்! உடைந்த விலா எலும்பு.. தண்டுவடத்தில் காயம்.. ''பக்'' இருந்ததா? அபிநந்தனின் பரபர ஸ்கேன் ரிப்போர்ட்!

தகவல் அனுப்பிய அபிநந்தன்

தகவல் அனுப்பிய அபிநந்தன்

இதையடுத்து, அது குறித்த விவரங்களையும், தகவல்களையும் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பியுள்ளார். அதுதான் பாகிஸ்தான் வசம் பிடிபடும் முன்பு அனுப்பிய கடைசி ரேடியோ செய்தியாகும்.

பாராசூட்டில் பறந்தார்

பாராசூட்டில் பறந்தார்

அதன் பிறகு அவர் சென்ற விமானம் பாகிஸ்தான் எல்லையில் வீழ்ந்துள்ளது. பாராசூட்டை பயன்படுத்தி விமானத்தில் இருந்து குதித்த அபிநந்தன் பின்னர் பாகிஸ்தான் படைகளிடம் சிக்கினார்.

மருத்துவ சிகிச்சை

மருத்துவ சிகிச்சை

உலக நாடுகளின் அழுத்தம், இந்தியாவின் வலியுறுத்தல் ஆகியவற்றின் அடிப்படையில் அபிநந்தன் விடுவிக்கப்பட்டார். தற்போது அவருக்கு மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

English summary
Last radio information of iaf pilot Abhi Nandan before he captured by Pakistan Army.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X