டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உலகின் அதிநவீன ஆயுதங்கள் கொண்ட அப்பாச்சி ஹெலிகாப்டர்.. இந்திய விமானப்படையில் சேர்ப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: உலகிலேயே அதிநவீன ஆயுதங்களை சுமந்து செல்லக் கூடிய திறன் படைத்த ஹெலிகாப்டரான அப்பாச்சி ஹெலிகாப்டர்களை அமெரிக்க அரசு இந்திய விமானப்படையிடம் ஒப்படைத்தது.

இந்தியா தனது விமானப்படையை மேலும் வலுவாக்க அமெரிக்க தயாரிப்பான போயிங் ஏஹெச் -64 இ அப்பாச்சி ஹெலிகாப்டர்களை வாங்க உத்தேசித்திருந்தது. இதற்காக அமெரிக்க ராணுவத்துடன் இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தது.

Indian Airforce receives appachi helicopters from America

22 ஹெலிகாப்டர்களை வழங்க கேட்டு நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் செய்யப்பட்டிருந்த இந்த ஒப்பந்தப்படி அமெரிக்கா முதல் நான்கு ஹெலிகாப்டர்களை இந்திய விமானப்படையிடம் ஒப்படைத்தது. புது டெல்லிக்கு அருகிலுள்ள ஹிண்டன் நிலையத்தில் இந்த ஹெலிகாப்டர்களை அமெரிக்க ஏரோஸ்பேஸ் நிறுவனமான போயிங் ஒப்படைத்துள்ளது.

தீரனுக்காக உருக்கம்...வேல்முருகனுக்காக ஏக்கம்... பாமகவினரை நெகிழ வைக்கும் டாக்டர் ராமதாஸ்தீரனுக்காக உருக்கம்...வேல்முருகனுக்காக ஏக்கம்... பாமகவினரை நெகிழ வைக்கும் டாக்டர் ராமதாஸ்

ஒரு ஹெலிகாப்டரின் விலை ரூ. 4,168 கோடி என்ற அளவில் இந்த ஹெலிகாப்டர்களை இந்தியா வாங்கியுள்ளது. முதல் நான்கு ஹெலிகாப்டர்கள் இப்போது இந்திய விமானப்படைக்கு வந்து சேர்ந்துள்ளது, அடுத்த வாரம் மேலும் 4 ஹெலிகாப்டர்கள் வரவுள்ளது. 2022க்குள் 22 ஹெலிகாப்டர்களும் ஒப்படைக்கப்படும் என்று தயாரிப்பு நிறுவனமான போயிங் தெரிவித்துள்ளது.

இந்த ஹெலிகாப்டர்கள் லேசர் மற்றும் இன்ஃப்ரா ரெட் தொழில்நுட்பத்தில் இயங்கக் கூடியது. அதோடு இரவு பகல் என எந்த நேரத்திலும் வலிமையுடன் செயல்படும் விதத்தில் இந்த ஹெலிகாப்டர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்திய விமானப்படையில் MI 35 என்ற ரஷ்ய தயாரிப்பு விமானங்கள் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்தன.

இப்போது அமெரிக்காவின் ஏஹெச் -64 இ அப்பாச் ஹெலிகாப்டர்கள் வந்துள்ளதால் ரஷ்ய தயாரிப்பு விமானங்கள் இந்திய விமானப்படையிலிருந்து அப்புறப்படுத்தப் படுகின்றன. இதனால் இந்திய விமானப்படையின் புதிய அங்கமாக உலகின் அதிநவீன ஆயதங்கள் கொண்ட அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் பறக்கப் போகின்றன.

English summary
Indian Airforce has received Appachi helicopters from US
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X