டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ராணுவ தின கொண்டாட்டம்.. கலக்கல் போட்டிகளை நடத்தும் இந்திய ராணுவம்.. மக்களுக்கு அழைப்பு!

ராணுவ தினத்தை முன்னிட்டு மக்கள் கலந்து கொள்ளும் வகையில் நிறைய விளையாட்டு போட்டிகளை இந்திய ராணுவம் நடத்த உள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: 2019 ஜனவரி மாதம் நடக்க உள்ள ராணுவ தினத்தை முன்னிட்டு மக்கள் கலந்து கொள்ளும் வகையில் நிறைய விளையாட்டு போட்டிகளை இந்திய ராணுவம் நடத்த உள்ளது.

ராணுவ தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக டெல்லியில் பெரிய அளவில் விழாக்கள் நடப்பது வழக்கம்.

Indian Army celebrates Army Day: Calls people to participate in various competitions

ஜெனரல் கே.எம். கரியப்பா சுதந்திர இந்தியாவின் முதல் ராணுவ தளபதியான 1948ம் ஆண்டில் பொறுப்பேற்றதில் இருந்து ஆண்டுதோறும் ராணுவ தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி 71வது ராணுவ தினம் வரும் ஜனவரி 15, 2019ல் நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது.

டெல்லியில் நடக்கும் இந்த விழாவில் பிரதமர், முப்படை அதிகாரிகள், அமைச்சர்கள் கலந்து கொள்வது வழக்கம். ராணுவ பொருட்களின் கண்காட்சியும் இதில் நடக்கும்.

இந்த நிலையில் ராணுவ தினத்தை முன்னிட்டு இந்த முறை இந்திய பாதுகாப்பு துறை நிறைய போட்டிகளை நடத்த உள்ளது. பொதுமக்கள் கலந்து கொள்ளும் வகையில் நிறைய போட்டிகளை இந்திய ராணுவம் நடத்த முடிவு செய்துள்ளது. இந்திய குடிமகன்கள் யார் வேண்டுமானாலும் இந்த போட்டியில் கலந்து கொள்ள முடியும்.

ஆன்லைன் பெயிண்டிங், போட்டோகிராபி, வீடியோ உள்ளிட்ட பல போட்டிகள் இதில் நடத்தப்பட உள்ளது. டிசம்பர் 4ம் தேதி இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட தொடங்கிவிட்டனர். 2019 ஜனவரி 9ம் தேதி வரை விண்ணப்பங்களை அளிக்க முடியும்.

இந்திய ராணுவம் : தேசம்தான் முதலில் (Indian Army : Nation First) என்ற தலைப்பின் கீழ் படைப்புகளை உருவாக்க வேண்டும். இதில் வெற்றிபெறுபவர்களுக்கு நிறைய பரிசுகளும் வழங்கப்பட உள்ளது.

இந்த போட்டிக்கு எப்படி விண்ணப்பிப்பது என்று இந்த லின்கில் விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளது.

English summary
Indian Army celebrates Army Day: Calls people to participate in various competitions through their website.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X