டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

குளிர் வரட்டுமே.. எங்கள் கால்கள் பின் வைக்காது.. லடாக் எல்லையில் இந்திய ராணுவம் மாஸ் ஏற்பாடு- வீடியோ

Google Oneindia Tamil News

டெல்லி: லடாக் எல்லையில் இப்போதைக்கு சீனாவுடன் மோதல் போக்கு நிற்கப் போவதில்லை என்று தெரிகிறது. இதை மனதில் வைத்துதான் இந்திய ராணுவ வீரர்கள் கடும் குளிரை எதிர்கொள்ளத் தேவையான ஆயத்தங்களை, அரசு செய்து கொடுத்துள்ளது.

இந்தியா மற்றும் சீனா இடையே கிழக்கு லடாக் பகுதியில் சீனா ராணுவத்தை குவித்து வருகிறது. கடந்த மே மாதம் முதல் சீனா ராணுவ குவிப்பில் ஈடுபடுவதால் இந்தியாவும் தனது ராணுவத்தை அங்கே குவித்து வருகிறது.

இத்தனை மாதங்கள் ஆன பிறகும், பேசிப் பார்த்தும், சீனா பின்வாங்குவதாக இல்லை. எனவே, இந்தியாவும் விட்டுக் கொடுப்பதாக இல்லை.

பீகாரில் சின்ன கட்சிகள் கூட ஜெயிச்சிருக்கே.. காங்கிரஸ் தோற்க காரணம் என்ன தெரியுமா? ப.சிதம்பரம் பளிச்பீகாரில் சின்ன கட்சிகள் கூட ஜெயிச்சிருக்கே.. காங்கிரஸ் தோற்க காரணம் என்ன தெரியுமா? ப.சிதம்பரம் பளிச்

கல்வான் தாக்குதல்

கல்வான் தாக்குதல்

இந்த நிலையில்தான் ஜூன் மாதம் 15 ஆம் தேதி இரவு கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இரு நாட்டு ராணுவமும் கற்கள் மற்றும் இரும்பு கம்பிகளால் தாக்கி கொள்ளும் சூழ்நிலை உருவானது. இதில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர்.

பதுங்கும் சீனா

பதுங்கும் சீனா

சீனா தரப்பு தங்கள் தரப்பில், இதுவரை ஏற்பட்ட உயிர் சேதம் பற்றி வெளிப்படையாக தெரிவிக்காமல் இருந்து வருகிறது. இந்த தாக்குதல் சம்பவத்தை அடுத்து இந்திய ராணுவம் மேலும் உஷார் படுத்தப்பட்டுள்ளது.

ராணுவ வீடியோ

இந்த நிலையில்தான் இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ பதிவு வெளியாகியுள்ளது: லடாக் கிழக்குப்பகுதியில் கடும் குளிரை தாங்குவதற்காக கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. குளிர் உள்ளே நுழையாத அளவுக்கான கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

செம ஏற்பாடு

செம ஏற்பாடு

கப்போர்டுகள், ஹீட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. சில அறைகளில் ஒரு பெட் மட்டும் இருக்கிறது. இந்த அறைக்குள் செய்யப்பட்டுள்ள அனைத்து வசதிகளும் அந்த வீடியோ காட்சிகளில் இடம் பெற்றுள்ளன. இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது, இந்திய ராணுவம் எதற்கும் தயார் என்ற நிலைக்கு வந்து விட்டதாகவே தெரிகிறது. இந்த வீடியோ சீன தரப்புக்கு கொடுக்கப்படும் எச்சரிக்கையாகவும் பார்க்கப்படுகிறது.

English summary
Indian army is ready to tackle Chinese army even though in the winter season army has released a video recently e about their arrangements for the winter season.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X