டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சீனாவை முந்திய இந்தியா.. எல்லை கோட்டு பகுதியில் 6 முக்கிய குன்றுகளை கைப்பற்றிய ராணுவம்

Google Oneindia Tamil News

டெல்லி: கடந்த 3 வாரங்களில் கிழக்கு லடாக் பகுதியில் உள்ள 7 முக்கிய மலைக் குன்றுகளை இந்திய ராணுவம் கைப்பற்றியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி முதல் செப்டம்பர் 2ம் வாரத்திற்கு இடைப்பட்ட காலகட்டத்தில் 6 முக்கிய இடங்களை இந்திய ராணுவம் கைப்பற்றி அந்த இடத்தை தன்வசப்படுத்தியுள்ளதாம்.

இந்தியா -சீனா இடையே கடந்த மே மாதம் முதல் மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த நிலையில் சீன ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தியதால் 20 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர். அது போல் இந்தியா பதிலடி கொடுத்ததில் சீன வீரர்கள் பலர் கொல்லப்பட்டனர்.

இந்திய பயணிகளுக்கு கொரோனா...2வது முறையாக ஏர் இந்தியா விமானத்துக்கு ஹாங்காங் தடை!!இந்திய பயணிகளுக்கு கொரோனா...2வது முறையாக ஏர் இந்தியா விமானத்துக்கு ஹாங்காங் தடை!!

சீன படைகள்

சீன படைகள்

இந்தநிலையில் எல்லையில் அமைதி நிலவ வேண்டும் என்ற பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜீ ஜின்பிங் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தை மீறிவிட்டதாக இரு தரப்பும் பரஸ்பரம் குற்றம்சாட்டிவந்தன. ராணுவ அதிகாரிகள் நிலையான பலகட்ட பேச்சுவார்த்தையில் சீன படைகளை பின்வாங்குவதாக அறிவித்துவிட்டு அவற்றை செய்யாமல் இருந்தது.

பேச்சுவார்த்தை

பேச்சுவார்த்தை

இதனால் எல்லையில் பதற்றம் நீடித்து வந்தது. இந்த நிலையில் எல்லையில் அமைதி நிலவ பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மாஸ்கோவில் சீன அமைச்சர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

6 முக்கிய மலைகள்

6 முக்கிய மலைகள்

அப்போது எல்லை தாண்டுதல், அத்துமீறுதல், சர்வதேச ஒப்பந்த விதிகளை மீறுதல், ஆக்கிரமித்தல் என சீனா மீது இந்தியா குற்றச்சாட்டுகளை முன்வைத்ததோடு சீனாவுக்கு எச்சரிக்கையும் விடுத்தது. இந்த நிலையில் எல்லையில் உள்ள 6 முக்கிய மலைகளை இந்தியா கைப்பற்றியதாக மத்திய அரசுக்கு நெருக்கமான வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எந்தெந்த மலைகள்

எந்தெந்த மலைகள்

இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், சீன ராணுவ ஆக்கிரமிப்புகள் இருப்பதாக கூறப்படும் மகார் குன்று, குருங் குன்று, ரேச்சன் லா, ரேஜாங்க் லா, மோக்பாரி உள்ளிட்ட மலைகளை இந்திய ராணுவம் கைப்பற்றியுள்ளது. இந்த குன்றுகள் அனைத்தும் சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் செல்வதற்கு முன்பு முந்திக் கொண்டு இந்தியா கைப்பற்றியது என்றார்கள்.

300 வீரர்கள்

300 வீரர்கள்

அதேசமயம், பிளாக் டாப் மற்றும் ஹெல்மெட் டாப் மலை பகுதிகள் சீனா வசம் உள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ரேசாங் லா மற்றும் ரேச்சன் லா மலை பகுதிகளின் அருகே 3000 வீரர்களை சீனா குவித்திருக்கிறது. கடந்த 45 ஆண்டுகளில் எப்போதும் இல்லாத அளவுக்கு கடந்த 3 வாரங்களில் சீனாவின் ஆக்கிரமிப்பு அட்டகாசம் கூடிக் கொண்டே போகிறது என்பதும், அதை இந்தியப் படைகள் இதற்கு முன்பு போல இல்லாமல் சற்று வீரியத்துடன் போராடி முறியடித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

English summary
Report says that Indian Army occupied 6 major hills in three weeks amid standoff with China.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X