டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

லடாக்கின் ஏரியில் மலைகளை கைப்பற்றிய இந்திய ராணுவம்... செம்ம திருப்பம்.. அதிர்ச்சியில் சீனா

Google Oneindia Tamil News

டெல்லி: லடாக்கின் பாங்காங் த்சோ ஏரியின் வடக்கு கரையில் உள்ள உயரமான மலைகளை இந்திய ராணுவம் கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் இந்திய இராணுவம் பங்கோங் த்சோவின் வடக்கு மற்றும் தெற்கு கரைகளில் சீனாவிற்கு தக்க பதிலடி கொடுக்க முடியும் என்பதால் இந்த முன்னேற்றம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ஏனெனில் பொதுவமாக மலைகளில் யுத்தம் நடந்தால் மலையின் உச்சியை கைப்பற்றி ஆதிக்கம் செலுத்தினால் தான் போரில் வெல்வது எளிதாக இருக்கும் அந்த வகையில் இந்தியா உயரமான மலைப்பகுதிகளை தன் வசம் கைப்பற்றி உள்ளது.

இதனால் பாங்காங் த்சோவின் வடக்குக் கரையில் உள்ள பிங்கர் 4 பகுதியில் சீனா தனது படைகளை அதிகரித்து, இந்திய எல்லையை நெருங்க முயற்சிப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

ரஷ்யாவை வைத்துக் கொண்டே.. சீனாவிற்கு ரஷ்யாவை வைத்துக் கொண்டே.. சீனாவிற்கு "கண்டிஷன்" போடும் இந்தியா.. இன்று மீட்டிங்.. என்ன நடக்கும்?

நடவடிக்கை எடுக்கலாம்

நடவடிக்கை எடுக்கலாம்

லடாக் பகுதியில் அமைந்துள்ள முழு பாங்கோங் த்சோ ஏரிக்கு தெற்கே ஆக்கிரிமித்து பின்னர் இந்தியாவிடம் இழந்த நிலத்தை மீண்டும் கைப்பற்றுவதற்க சீன இராணுவம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதனால் அங்கு இந்தியா ஒரு முன்கூட்டிய நடவடிக்கையில் இறங்கி முக்கியமான மலை உச்சிகளை கைப்பற்றி உள்ளது.

பெய்ஜிங்கில் கட்டுப்பாடு

பெய்ஜிங்கில் கட்டுப்பாடு

எல்லை தற்போது பதட்டத்தை அதிகரித்துள்ளது காரணம் என்னவென்றால், இப்போது பாங்கோங் த்சோ பகுதியில் உள்ள அனைத்து நடவடிக்கைகளும் பெய்ஜிங்கில் உள்ள சீனாவின் ராணுவ தளபதிகளால் நேரடியாகக் கட்டுப்படுத்தப்படுகின்றன. எனவே எல்லையில் பகுதியில் உள்ள சீன ராணுவ அதிகாரிகளின் கைகளில் நிலைமை இல்லை.

படைகள் குவிப்பு

படைகள் குவிப்பு

இந்தியாவிற்கு அழுத்தம் கொடுப்பதற்காக, சீனா இந்தியா இடையே எல்.ஐ.சி.யின் மலைப்பாதையான ஸ்பாங்கூர் கேப் அருகே சீனா தனது 15-20 ராணுவ டேங்கர்களை முன்வைத்துள்ளது. இந்தியாவும் தனது ராணுவ டேங்கர்களை நிறுத்தியுள்ளது. சீனா அதன் மோல்டோ காரிஸனில், இப்போது 5,000-7,000 வீரர்களை நிறுத்தியுள்ளது. இந்தியாவும் இதேபோன்ற எண்ணிக்கையில் வீரர்களை நிறுத்தி வைத்துள்ளது.

இந்தியா பதிலடி

இந்தியா பதிலடி

சீன ராணுவ வீர்கள் தினந்தோறும் இந்தியர்களின் நிலைகளை அச்சுறுத்த முயற்சிக்கின்றனர். இந்தியா தக்க பாதுகாப்புகளை உருவாக்கி, அதன் நிலைகளை சுற்றி முள்வேலி வைத்துள்ளது. இந்த கம்பிகளைக் கடப்பது இந்திய இராணுவத்தின் வலுவான எதிர்வினையை சந்திக்க வேண்டியது வரும் என்று சீனர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சீனா திடீர் முற்றுகை

சீனா திடீர் முற்றுகை

முன்னதாக திங்கள்கிழமை இரவு சீன இராணுவம் முள்வேலியை அகற்ற முயன்றது, ஆனால் திரும்பிச் செல்லுமாறு இந்தியா எச்சரித்தது. இதனால் ஆத்திரம் அடைந்த சீன ராணுவத்தினர், இந்திய ராணுவ வீரர்களை அச்சுறுத்துவதற்காக வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அத்துடன் சீன ராணுவ வீரர்கள் வழக்கம் போல் இரும்பு ராடு, கம்பி, கட்டுககம்பிகள் சுற்றப்பட்ட கிளப் உள்ளிட்ட ஆயுதங்களையும் துப்பாக்கிகளையும் வைத்து கொண்டு மிரட்டினர். ஆனால் இந்தியா எச்சரித்ததால் சென்றுவிட்டனர்.

என்ன பிரச்சனை இப்போது

என்ன பிரச்சனை இப்போது

கடந்த மே மாதத்தில், சீன இராணுவம் பங்கோங் த்சோவின் வடக்குக் கரையில் உள்ள எல்லைக்கட்டுபபாட்டு கோட்டு பகுதியைக் கடந்து ஃபிங்கர் 4 மற்றும் ஃபிங்கர் 8 பகுதிகளுக்கு இடையில் 8 கி.மீ. தூரம் உள்ள பகுதியில் ஆக்கிரமிப்பு செய்தது.இ தற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இரு நாடுகளுக்கும் இடையிலான அனைத்து இராஜதந்திர மற்றும் இராணுவ பேச்சுவார்த்தைகளிலும், சீனா ஆக்கிரமித்த பகுதியை காலி செய்ய அப்பட்டமாக மறுத்துவிட்டது.

ரோந்து செல்லும் சீனா

ரோந்து செல்லும் சீனா

ஃபிங்கர் பகுதி என்பது பாங்காங் ஏரியை ஒட்டிய சிரிஜாப் வரம்பில் உள்ள எட்டு மலைகளின் தொகுப்பைக் குறிக்கிறது. இந்தியாவின் எதிர்ப்பை மீறி ஃபிங்கர்4 முதல் 1ஃபிங்கர் 8 வரை உள்ள பகுதிளில் சீன ராணுவம் ரோந்து செல்கிறது. இதனால் பதற்றம் அதிகமாக உள்ளது.

English summary
The Indian Army occupied heights on the north bank of Pangong Tso which overlook Chinese positions on the ridge lines in the Finger 4 area.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X