• search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

அன்று 114 பேரை இழந்த இந்திய ராணுவம்...சுதாரித்தது... சீனாவை வெளுக்கத் தயார்!!

|

டெல்லி: லடாக்கின் உயரமான மலைப்பகுதியில் நாட்டை பாதுகாத்து வரும் இந்திய ராணுவ வீரர்களுக்கு குளிர்காலத்தில் -50 டிகிடி செல்சியசை தாங்கும் அளவிற்கு உயர் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட ஆடைகள் வழங்கப்பட இருக்கிறது. இந்த ஆடைகள் ஒரு மணி நேரத்துக்கு 40 கி. மீட்டர் வேகத்தில் வீசும் காற்றையும் தாங்கும் திறன் கொண்டதாக இருக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்திய சீன எல்லையில் லடாக் பகுதி சமீப நாட்களில் பதற்றத்துக்கு உள்ளாகி வருகிறது. இங்கு இருக்கும் 12க்கும் மேற்பட்ட இடங்களை ஆக்ரமிக்க சீனா முயற்சித்து வருகிறது. அதேசமயம், இந்தப் பகுதிகள் அனைத்தும் கடல் மட்டத்தில் இருந்து மிகவும் உயரமான இடத்தில் இருப்பதால், குளிர்காலத்தில் ராணுவ வீரர்கள் மிகவும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். இதனால், இந்தப் பகுதிகளை சீனாவிடம் காப்பதிலும் அவ்வப்போது தோல்வியும் ஏற்படுகிறது.

அருணாச்சலில் எல்லை தாண்டிய எருதுகள்... உளவு கருவிகளை பொருத்தி வேவு பார்க்க அனுப்பி வைத்ததா சீனா?

பூட்ஸ்

பூட்ஸ்

தற்போது பதட்டம் உச்சகட்டத்தை அடைந்து இருக்கும் நிலையில், குளிர்காலமும் நெருங்கிக் கொண்டுள்ளது. எனவே, இந்த இடத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இருக்கும் வீரர்களுக்கு குளிர்கால டென்ட்கள், பைபரால் வலுவூட்டப்பட்ட பிளாஸ்டிக்கால் ஆன கூடாரம் அமைப்பது. பனியை தாங்கும் பூட்ஸ்கள் ஆகியவை வீரர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. இதற்காக உலக அளவில் முன்னணியில் இருக்கும் நிறுவனங்களை மத்திய அரசு தொடர்பு கொண்டு வருகிறது.

குளிர்காலம்

குளிர்காலம்

சியாசின் போன்ற உயரமான இடங்களில் குளிர்காலத்தில் இருநாட்டு ராணுவ வீரர்களும் தங்களுக்குள் மோதலில் ஈடுபட வாய்ப்பு இருப்பதாக வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். குளிர்காலம்தான் தங்களுக்கு ஏதுவாக இருக்கும் என்று சீன ராணுவம் இந்திய எல்லைக்குள் முன்னேறலாம் என்று ஏற்கனவே கூறப்பட்டு வரும் நிலையில், எந்த நிலையையும் எதிர்கொள்ள இந்தியாவும் தயாராக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

திபெத் வீரர்கள்

திபெத் வீரர்கள்

கடல் மட்டத்தில் இருந்து 4000 மீட்டர் உயரத்தில் இருக்கும் பிளேக் டாப் என்ற இடத்தை சீன ராணுவம் கையகப்படுத்த முயற்சித்தது. ஆனால், இந்த இடத்தை ஸ்பெஷல் பிரான்டியர் போர்ஸ் என்ற படை சீன ராணுவத்தினரை விரட்டி அடித்தது. இந்தப் படையில் இடம் பெற்றவர்கள் திபெத் நாட்டினர். பழங்கால திபெத்தியர்களால் சீனாவை எதிர்கொள்ள உருவாக்கப்பட்ட படை. இந்தப் படையை எல்லையில் இந்தியா இந்த முறை பயன்படுத்தி இருந்தது.

பிங்கர் 3 போஸ்ட்

பிங்கர் 3 போஸ்ட்

க்ரீன் டப் பகுதியில் பிங்கர் 4 போஸ்டை சீனா ஆக்கிரமித்து இருந்தது. இதற்கு பழிவாங்கும் வகையில் பிளேக் டாப் பகுதியில் இருந்து சீனர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். க்ரீன் டாப் பகுதியில் இருந்து நேரடியாக இந்தியர்களின் மிகவும் முக்கியமான பகுதியான இருக்கும் பிங்கர் 3 போஸ்டை எளிதில் சீன ராணுவத்தால் கையகப்படுத்த முடியும். பிங்கர் 5ல் இருந்து படைகளை வாபஸ் பெறுவது என்று இந்தியா, சீனா இடையே பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால், அந்த இடத்தில் இருந்து படைகளை சீனா வாபஸ் பெறவில்லை.

இரும்புத்தடிகள்

இரும்புத்தடிகள்

இந்த நிலையில்தான் பிளேக் டாப் பகுதியை பாதுகாத்துக் கொள்ளும் நிலைக்கு கடந்த ஆகஸ்ட் 30-31 ஆம் தேதிகளில் இந்தியா தள்ளப்பட்டது. மேலும் செப்டம்பர் 7ஆம் தேதி இந்தியாவின் கட்டுப்பாட்டு பகுதிக்கு அருகே இருக்கும் ரெசாங்க் லே பாஸ் பகுதியில் சீன ராணுவத்தினர் இரும்பு தடிகள், ஈட்டிகளை கொண்டு வந்துள்ளனர்.

114 வீரர்கள் உயிரிழப்பு

114 வீரர்கள் உயிரிழப்பு

ரெசாங்க் லே பாஸ் பகுதியில்தான் 1962ல் நவம்பர் 18, இந்திய, சீன ராணுவ வீரர்களுக்கு இடையே போர் நடந்தது. அப்போது மேஜர் ஷைதன் சிங் தலைமையில் 114 வீரர்கள் தொடர்ந்து போராடி உயிரிழந்தனர். இது இன்றும் இந்திய வரலாற்றில் பேசப்பட்டு வரும் ஒரு நிகழ்வாக அமைந்துள்ளது.

எப்போதும் குளிர்காலத்தில்தான் சீனா எல்லையில் ஆக்கிரமிப்பில் ஈடுபடும் என்பது கடந்த கால வரலாறு. இதை இந்த முறை முறியடிக்க இந்தியாவும் தயாராகி வருகிறது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
English summary
Indian Army Prepares for Cold, Long Haul in Ladakh during winter
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X