டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அடி மேல் அடி.. திருந்தாத பாகிஸ்தான்.. துப்பாக்கி சூட்டில் 5 இந்திய வீரர்களை கொன்றதாக பொய் பிரசாரம்

Google Oneindia Tamil News

டெல்லி: ஜம்மு காஷ்மீரில் பூஞ்ச் பகுதியில் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய வீரர்களை கொன்றதாக பாகிஸ்தான் கூறுவதற்கு இந்திய ராணுவம் மறுப்பு தெரிவித்துள்ளது. மாறாக இந்தியா பதிலடி கொடுத்ததில் 3 பாகிஸ்தான் ராணுவத்தினர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

ஜம்மு காஷ்மீரில் ஸ்ரீநகரில் இன்று தேசியக் கொடி ஏற்றப்பட்டது. 370 சட்டப்பிரிவு நீக்கத்துக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இந்த நிலையில் சுதந்திர தினமான இன்று பூஞ்ச் மாவட்டம் கேஜி துறையில் பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது.

துப்பாக்கிச் சூட்டில் பாக்

துப்பாக்கிச் சூட்டில் பாக்

மாறி மாறி நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் பாகிஸ்தான் ராணுவம் பிழைத்தால் போதும் என புறமுதுகிட்டு ஓடியது. இதனிடையே உரி மற்றும் ரஜோரி பகுதியிலும் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் ராணுவம் மீதான துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலியாகிவிட்டனர்.

5 பேர் பலி

5 பேர் பலி

ஆனால் பாகிஸ்தானோ தப்பியோடிய நிலையிலும், தாங்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய ராணுவத்தினர் 5 பேர் உயிரிழந்ததாக கூறியது. இதை இந்தியா மறுத்தது.

போர் விமானம்

போர் விமானம்

இது போல் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த இந்திய விமானபடையின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் ராணுவம் பொய் பிரசாரம் செய்து விமான பாகங்கள் கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டது.

பட்டும் திருந்தாத பாகிஸ்தான்

பட்டும் திருந்தாத பாகிஸ்தான்

ஆனால் அது பழைய படம் என்பதை இந்தியா ஆதாரத்துடன் நிரூபித்தது. தற்போது இந்திய ராணுவத்தினர் 5 பேரை சுட்டுக் கொன்றதாக பொய் பேசி வருவதை இந்திய ராணுவம் மறுத்துள்ளது. 370 சட்டப்பிரிவு நீக்கம் குறித்து உலக நாடுகளின் கதவைகளை தட்டியும் யாரும் திறக்கவில்லை. இது போன்று அடி மேல் அடி வாங்கியும் பாகிஸ்தான் இன்னும் திருந்தவில்லை என்றே தெரிகிறது.

English summary
Indian Army denies Pakistan Army's claims of 5 Indian soldiers dead in ceasefire violations along the Line of Control in Jammu And Kashmir.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X