டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அந்த ஒரு அனுபவமே போதும்.. நாங்கள் இப்போது அனைத்திற்கும் ரெடி.. இந்திய ராணுவ தளபதி அதிரடி பேட்டி!

இந்திய ராணுவம் எந்த விதமான தாக்குதலையும் எதிர்கொள்ளும், எப்போதும் திருப்பி தாக்க இந்தியா ராணுவம் தயாராக இருக்கும் என்று இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி: இந்திய ராணுவம் எந்த விதமான தாக்குதலையும் எதிர்கொள்ளும், எப்போதும் திருப்பி தாக்க இந்தியா ராணுவம் தயாராக இருக்கும் என்று இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

காஷ்மீருக்கு வழங்கிய சிறப்பு அந்தஸ்தை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. அது மட்டுமில்லாமல் ஜம்மு காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து உள்ளது.

இந்த நிலையில் எந்த விதமான தாக்குதலையும் சமாளிக்க தயார் என்று பாகிஸ்தான் ராணுவம் நேற்று தெரிந்தது. அதேபோல் எல்லையில் ராணுவ வீரர்கள் தயார் நிலையில் இருக்கிறார்கள் என்றும் பாகிஸ்தான் கூறியுள்ளது.

என்ன பேசினார்

என்ன பேசினார்

இதையடுத்து தற்போது இந்திய பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டிரம்புடன் போனில் பேசியுள்ளார். இந்தியாவிற்கு எதிராக சில தலைவர்கள் வன்முறையை தூண்ட முயன்று கொண்டு இருக்கிறார்கள். ஆசிய பிராந்தியத்தில் சில தலைவர்கள் இந்தியாவிற்கு எதிராக செயல்படுகிறார்கள், என்று பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் தெரிவித்துள்ளார்.

ராணுவமும் எப்படி

ராணுவமும் எப்படி

இந்த நிலையில் இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் இன்று ஓய்வு பெறும் ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார். அவர்களுடன் முக்கிய விஷயங்கள் குறித்து பிபின் ராவத் பேசினார். பாகிஸ்தான் எல்லையில் ராணுவம் குவிக்கப்பட்டு வருவது குறித்து ஆலோசனை செய்தார்.

என்ன தாக்குதல்

என்ன தாக்குதல்

அதில், பாலக்கோடு தாக்குதல் நமக்கு நிறைய அனுபவம் தந்தது. உலக அளவில் இந்திய ராணுவத்தின் பலம் அப்போதுதான் தெரிந்தது. மிக முக்கியமாக இந்திய விமானப்படை அந்த தாக்குதலை மிக சிறப்பாக நடத்தியது. நாம் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டோம்.

போதும்

போதும்

பாலக்கோடு தாக்குதல் அனுபவமே போதும். இந்திய ராணுவம் அனைத்து விதமான தாக்குதலையும் இனி சமாளிக்கும். எந்த விதமான தாக்குதலை நடத்தவும் இந்திய ராணுவம் தயாராக இருக்கிறது, என்று பிபின் ராவத் தனது பேச்சில் குறிப்பிட்டுள்ளார்.

English summary
Indian Army was ready for any eventuality on the ground after the Balakot operations says Army Chief General Bipin Rawat.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X