டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மியான்மரில் கிளர்ச்சியாளர்களால் கடத்தப்பட்ட இந்தியர் மரணம்!

Google Oneindia Tamil News

டெல்லி: மியான்மரில் கிளர்ச்சியாளர்களால் சிறைபிடிக்கப்பட்ட இந்திய கட்டுமான ஆலோசகர், மரணமடைந்தார்.

மியான்மரின் ராகைன் மாநிலத்தின் வடக்கு பகுதியில் இந்தியத் திட்டப் பணியில் கட்டுமான ஆலோசகராக பணியாற்றியவர்,வினு கோபால் (60). இவரையும், அங்கே பணிபுரியும் மேலும் நான்கு இந்தியர்களையும், கடந்த ஞாயிற்றுக்கிழமை, அங்குள்ள 'அராகன்' என்ற கிளர்ச்சியாளர் குழுவால் சிறை பிடிக்கப்பட்டனர்.

Indian arrested by rebel army dies in Myanmar

இந்த நிலையில், வினு கோபால் மரணமடைந்துவிட்டதாக கிளர்ச்சி குழு திடீரென அறிவித்தது. இதையடுத்து, நேற்று, மற்ற 4 பேரை விடுதலை செய்தது அந்த குழு. இறந்தவரின் உடலும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

ஆசியான் மற்றும் கிழக்கு ஆசியா உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடி பாங்காக்கில் மியான்மரின் ஆளும் கட்சி தலைவர் ஆங் சான் சூகி -யை சந்தித்த அதே நாளில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

இந்தியா-மியான்மர் எல்லையில் செயல்பட கிளர்ச்சிக் குழுக்களை அனுமதிக்க மாட்டோம் என மோடி அந்த சந்திப்பில் உறுதியளித்திருந்தார்.

காஷ்மீரை தொடர்ந்து நாகாலாந்து பிரச்சனைக்கும் சுமூக தீர்வை உருவாக்கும் மத்திய அரசு!காஷ்மீரை தொடர்ந்து நாகாலாந்து பிரச்சனைக்கும் சுமூக தீர்வை உருவாக்கும் மத்திய அரசு!

அராகன் அமைப்பின் அறிக்கையில், சுவாச பிரச்சினையால் வினு கோபால் இறந்தார். எங்களின் மருத்துவ ஊழியர்களால் வழங்கப்பட்ட "சிறந்த மருத்துவ பராமரிப்பு" வசதி இருந்தபோதிலும் குறுகிய நேரத்தில் அவர் இறந்துவிட்டார்.

அவர் இதய நோய் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு மருந்துகள் எடுத்து வந்தவர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மரணத்திற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுவிக்கப்பட்ட மற்ற நால்வரும், விஜய் குமார் சிங் (48), நங்ஷான்போக் சுயம் (47), ராகேஷ் சர்மா (64), அஜய் கோத்தியால் (50) என தெரியவந்துள்ளது.

அராகன் கிளர்ச்சிப் படை தங்கள் பகுதி வழியாகச் செல்லும் போக்குவரத்து வாகனங்களை அடிக்கடி சோதித்து பார்க்கிறது. அந்த வாகனங்களில் மியான்மர் ராணுவ உறுப்பினர்கள், ஆயுதங்கள் மற்றும் மியான்மர் ராணுவம் தொடர்பான நபர்கள் இருக்கிறார்களா என்பதை அறிய இந்த சோதனை நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
A 60-year-old Indian national has died in the custody of Arakan Army, ethnic rebels in Myanmar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X