டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பெரும் சரிவில் ஆட்டோமொபைல் தொழில்.. பிரஷ்ஷர்களை கூட வேலைக்கு எடுக்க யாரும் ரெடி இல்லை!

Google Oneindia Tamil News

டெல்லி: ஆட்டோமொபைல் தொழில் மிகப்பெரிய சரிவை சந்திக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக ஏற்கனவே பணியில் இருக்கக்கூடிய ஊழியர்கள் வீட்டுக்கு அனுப்பப்படுவதோடு, புதிதாக பணிக்கு ஆள் எடுப்பது பாதிக்கப்பட்டுள்ளது.

மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ், மாருதி சுசுகி மற்றும் அசோக் லேலன்ட் போன்ற ஆட்டோமொபைல் நிறுவனங்கள் கேம்பஸ் இன்டர்வியூ மூலமாக பிரஷர்களை பணிக்கு எடுக்கக்கூடிய பணியை நிறுத்தி வைத்துள்ளன.

Indian automobile industry is beginning to face a huge downturn

டிராக்டர்கள் மற்றும் பயன்பாட்டு வாகனங்களை உற்பத்தி செய்வதில் நாட்டின் முன்னணியில் உள்ள மஹிந்திரா நிறுவனம் கேம்பஸ் இன்டர்வியூ மூலமாக பணிக்கு சேர்க்கக் கூடிய பணியாளர்கள் எண்ணிக்கையை பாதியாக குறைந்துள்ளது.

சுமார் 400 பேரை இவ்வாறு பணிக்கு சேர்க்கக் கூடிய அந்த நிறுவனம், இப்போது 200 பேரை பணிக்கு சேர்த்துள்ளது என்று அந்த நிறுவனத்தின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ராஜேஷ்வர் திரிபாதி தெரிவித்துள்ளார்.

புதியவர்களை வேலைக்கு எடுப்பதை குறைத்துக்கொண்டு உற்பத்தி திறனை அதிகரிப்பது தான் நோக்கம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஆட்டோமொபைல் தொழில் சரிய தொடங்கியது முதலே பணிக்கு ஆட்களை சேர்ப்பதில் மிகவும் யோசித்து தான் செயல்பட்டு வருகிறோம். காலி பணியிடங்களை நிரப்புவதற்கு ஏற்கனவே உள்ள பணியாளர்களை சுழற்சி முறையில் பயன்படுத்திக் கொள்கிறோம் என்கிறார் அவர்.

19 வருடங்களில் இல்லாத அளவுக்கு கடந்த ஜூலை மாதம் இந்தியாவில் வாகனங்களின் விற்பனை மிகப் பெரும் சரிவை சந்தித்தது. பயணிகள் வாகன விற்பனை 31 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சி அடைந்தது. பொதுவாக ஆட்டோமொபைல் தொழில் நிறுவனங்கள் தொழில் பயிற்சிக் கூடங்களில் கேம்பஸ் நேர்காணல்கள் நடத்தி ஆள் சேர்க்கை செய்வது வழக்கம், இப்போது பல தொழில்நுட்பக் கல்லூரிகளும் நேர்காணல் இன்றி வெறிச்சோடி கிடக்கின்றன என்கிறார்கள் இந்த துறை வல்லுநர்கள்.

நாட்டின் ஆட்டோமொபைல் தொழில் துறையில் ஏற்பட்டுள்ள பெரும் சரிவு, முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமான அசோக் லேலன்ட்டையும் பாதித்துள்ளது.
இந்த பிரச்சனை இந்த வருடத்தோடு முடிவடைய போவது கிடையாது, இன்னும் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளாவது இதேபோன்ற நெருக்கடிநிலை நீடிக்கக் கூடும் என்று அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

இந்திய ஆட்டோமொபைல் துறையால் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 37 மில்லியன் பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The automobile industry is beginning to face a huge downturn. Due to this, already existing employees are being sent home and new recruits have been affected.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X