டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

என்ன பட்ஜெட் இது? இந்திய பொருளாதாரம் பற்றி எதாவது தெரியுமா?.. ராஜ்யசபாவில் கிழித்து தொங்கவிட்ட ப.சி!

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவின் பொருளாதாரம் மிக மோசமான நிலையில் இருக்கிறது, ஆனால் மத்திய பட்ஜெட் அதன் மீது கொஞ்சம் கூட கவனம் செலுத்தவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் எம்பி ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இரண்டு வாரம் முன் 2020-2021ம் ஆண்டிற்கான பட்ஜெட் லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் வருமான வரி அறிவிப்பு தொடர்பான முக்கியமான அறிவிப்புகள் வெளியானது

ஆனால் இந்த அறிவிப்புகள் இந்திய பொருளாதாரத்தில் பெரிய மாற்றம் எதையும் ஏற்படுத்தாது என்கிறார்கள். அதேபோல், இந்த பட்ஜெட் பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்தது. இந்த பட்ஜெட் குறித்து முன்னாள் மத்திய நிதி அமைச்சர் எம்பி ப. சிதம்பரம் இன்று ராஜ்யசபாவில் பேசினார்.

ஒரே நாடு.. ஒரே மத கொள்கைக்கு எதிராக போராடுவோம்.. ஆஸ்கர் மேடையில் கர்ஜித்த ஜோக்கர் ஹீரோ.. பரபரப்பு!ஒரே நாடு.. ஒரே மத கொள்கைக்கு எதிராக போராடுவோம்.. ஆஸ்கர் மேடையில் கர்ஜித்த ஜோக்கர் ஹீரோ.. பரபரப்பு!

என்ன பேசினார்

என்ன பேசினார்

ப. சிதம்பரம் தனது உரையில், இந்தியாவில் பொருளாதாரம் மிக மோசமான நிலையில் இருக்கிறது. இளைஞர்கள் பலர் வேலையின்றி இருக்கிறார்கள். இந்தியர்கள் நாளுக்கு நாள் ஏழையாகிக் கொண்டே இருக்கிறார்கள். அரசு இந்திய பொருளாதாரம் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். அதற்காக நேரம் செலவழிக்க வேண்டும் . சாதாரண அரசியலில் நேரம் செலவழிப்பதை இந்த அரசு குறைக்க வேண்டும்.

மிக மோசம்

மிக மோசம்

இந்தியாவில் பொருளாதாரம் இன்னும் சில நாட்களில் மாபெரும் சரிவை சந்திக்கும். பாஜக அரசின் மிக மோசமான நிர்வாகம்தான் இதற்கு காரணம். அவர்களின் மிக மோசமான ஆட்சி முறைதான் இதற்கு காரணம். நம்முடைய அறையில் இரண்டு யானைகள் உள்ளது. ஒன்று வேலைவாய்ப்பு இன்னொன்று மக்களின் வாங்கும் சக்தி குறைவது.

கவனிக்கவில்லை

கவனிக்கவில்லை

இரண்டையும் இந்த அரசு கவனிக்கவில்லை. மத்திய அரசு 200 கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பணத்தை வாரி வழங்கி இருக்கிறது. ஆனால் மக்களிடம் பணம் இல்லை. சாதாரண மக்கள் கையில் பணம் குறைவாக இருக்கிறது. மக்களிடம் பொருள் வாங்க போதிய பணம் இல்லை. மக்கள் எங்கும் முதலீடு செய்வது கிடையாது. மக்கள் இடத்தில் அச்சம் உண்டாகிவிட்டது.

நிலை இல்லை

நிலை இல்லை

மக்களிடம் ஒரு நிலையற்ற தன்மை ஏற்பட்டுள்ளது. அதனால் அவர்கள் முதலீடு செய்ய பயப்படுகிறார்கள். இதனால் இந்த நாட்டில் இனி வரும் நாட்களில் யாரும் முதலீடு செய்ய போவதில்லை. மக்களின் கையில் பணத்தை கொடுப்பதுதான் சரியான தீர்வாக இருக்கும். மக்களிடம் பணத்தை அளிக்க வேண்டும். உழைக்கும் மக்கள் கையில் பணம் புழங்க வேண்டும்.

ஒரே வாய்ப்பு

ஒரே வாய்ப்பு

அப்போதுதான் இந்திய பொருளாதாரம் தப்பிக்கும். ஆனால் அதைப்பற்றி இந்த பட்ஜெட்டில் ஒன்றும் இல்லை. வரி குறைத்து பட்ஜெட்டில் எதுவும் இல்லை. இந்த பட்ஜெட்டில் நிறைய தவறு இருக்கிறது. நிதி நிலை அறிக்கையை கூட நிதி அமைச்சர் வாசிக்கவில்லை. அவ்வளவு மோசமான நிலையில்தான் இந்த அரசு நடந்து கொண்டு இருக்கிறது.

என்ன சொன்னார்

என்ன சொன்னார்

இந்தியாவின் தலைமை பொருளாதார ஆலோசகர் இந்தியாவின் பொருளாதாரம் ஐசியூவில் இருக்கிறது என்கிறார். அபிஜித் பானர்ஜி இந்தியாவின் பொருளாதாரம் மிக மோசமாக இருக்கிறது என்கிறார். ஆனால் அவரை அமைச்சர்கள் மிரட்டுகிறார்கள். இந்திய பொருளாதாரம் ஐசியூவில் நோயாளி போல இருக்கிறது.ஆனால் மருத்துவம் தெரியாத மருத்துவர்கள் அதற்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவர்கள் எங்களிடம் ஆலோசனை கேட்க பயப்படுகிறார்கள், என்று ப. சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.

English summary
Indian budget and economy are in worst shape says P Chidambaram on Nirmala Sitharaman Budget 2020.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X