டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கோவாக்சின்... குரங்கு பரிசோதனையில்... அபாரமான நோய் எதிர்ப்பு சக்தி... முழு வெற்றி!!

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் தயாரிக்கப்பட்டு இருக்கும் கொரோனா தடுப்பு மருந்தான கோவாக்சின் குரங்குகளிடம் பரிசோதித்துப் பார்த்ததில் நல்ல நோய் எதிர்ப்பு சக்தி கொடுத்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹைதராபாத்தில் இருக்கும் பாரத் பயோடெக் நிறுவனமும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலும் இணைந்து கொரோனாவை தடுக்கும் கோவாக்சின் என்ற தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளனர். இந்த மருந்து தற்போது இந்தியாவில் மனித பரிசோதனையில் இருக்கிறது.

24 மணி நேரத்தில் 97,570 பேருக்கு புதிதாக நோய் தொற்று.. புள்ளி விவரம் வெளியிட்டது மத்திய அரசு! 24 மணி நேரத்தில் 97,570 பேருக்கு புதிதாக நோய் தொற்று.. புள்ளி விவரம் வெளியிட்டது மத்திய அரசு!

தேசிய வைராலஜி

தேசிய வைராலஜி

இந்த நிலையில் இந்த மருந்தை குரங்குகளுக்கு செலுத்தி தேசிய வைராலஜி நிறுவனம் பரிசோதித்துப் பார்த்துள்ளது. இதில் விலங்குகளுக்கு நல்ல நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்து இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த செய்தி இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்து கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டு இருக்கும் கோடிக்கணக்கான மக்களுக்கு ஆறுதலான செய்தியாக அமைந்துள்ளது.

பி வைரஸ்

பி வைரஸ்

இந்த தடுப்பு மருந்து உலகிலேயே மிகவும் பழமையான குரங்கு இனமான rhesus macaquesக்கு கொடுத்து பரிசோதிக்கப்பட்டது. குறிப்பாக இந்த வகை குரங்கு இனங்களில் அதிகமாக பி வைரஸ் இருக்கும். இந்த வகையான குரங்குகளில் வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால், இதில் இருந்து மனிதர்களுக்கு எளிதில் இந்த வைரஸ் பரவும். இந்த வகை குரங்குகளுக்குத்தான் தற்போது கோவாக்சின் கொடுத்து பரிசோதிக்கப்பட்டது.

போலி மருந்து

போலி மருந்து

இந்த பரிசோதனையில் சில குரங்குகளுக்கு உண்மையான கோவாக்சின் மருந்தும், சில குரங்களுக்கு போலி ஊசியும் போடப்பட்டது. இதில் உண்மையான கொரோனா தடுப்பு மருந்தான கோவாக்சின் செலுத்தப்பட்ட குரங்குகளுக்கு நல்ல நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்துள்ளது. இந்த தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட பின்னர் வைரஸ் நோய் கிருமிகளை தொற்றும் வகையில் குரங்கள் விடப்பட்டன. அதன் பின்னர் சோதித்துப் பார்த்ததில் நல்ல நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்து இருப்பது தெரிய வந்துள்ளது.

20 குரங்குகள்

20 குரங்குகள்

மொத்தம் 20 குரங்குகள ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. நான்கு பிரிவுகளாக ஒவ்வொரு குழுவிலும் ஐந்து குரங்குகள் பிரிக்கப்பட்டன. ஐந்து குரங்களுக்கு மட்டும் போலி மருந்து செலுத்தப்பட்டது. மற்ற குரங்களுக்கு மூன்று கட்ட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த மருந்து SARS CoV 2 வைரஸில் இருந்து எடுக்கப்பட்டு இருந்தது. மொத்தம் 14 நாட்கள் பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

நுரையீரலில் பாதிப்பு

நுரையீரலில் பாதிப்பு

இரண்டாவது டோஸ் அளித்த 14 நாட்களுக்குப் பிறகு அனைத்து குரங்குகளும் பரிசோதிக்கப்பட்டன. மூன்றாம் வாரத்திற்கு பின்னர் எந்தளவிற்கு நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது என்று பரிசோதிக்கப்பட்டது. இதில் குரங்குகளுக்கு நல்ல நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்து இருப்பது தெரிய வந்துள்ளது. நுரையீரலிலும் எந்த பாதிப்பு இல்லை. ஆர்என்ஏ வைரஸ் போலி மருந்து அளிக்கப்பட குரங்குகளின் நுரையீரலில் இருந்துள்ளது. ஆனால், கொரோனா தடுப்பு மருந்து கொடுக்கப்பட்ட குரங்குகளில் இல்லை. இந்த வைரஸ்தான் சார்ஸ், இன்புளூயன்சா, எபோலா, ஹெபடிடிஸ் ஆகியவற்றுக்கு காரணமாக இருக்கிறது.

Recommended Video

    Covaxin தடுப்பூசி | குரங்குகள் பரிசோதனையில் அபாரமான நோய் எதிர்ப்பு சக்தி | Oneindia Tamil
    மனித பரிசோதனை

    மனித பரிசோதனை

    இந்தியாவில் கோவாக்சின் மனித பரிசோதனை இரண்டாம் கட்ட பரிசோதனை 12 மையங்களில் பத்து மாநிலங்களில் நடந்து வருகிறது. இந்த ஆய்வு முடிந்த பின்னர் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானவர்கள் மூன்றாம் கட்ட மனித பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்படுவார்கள்.

    English summary
    Indian Covid-19 vaccine Covaxin protected animals from coronavirus
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X