டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

யாரும் பதறாதீங்க.. பொருளாதாரம் வளரப்போகுது.. களத்துக்கு வந்தார் தலைமை பொருளாதார ஆலோசகர்

Google Oneindia Tamil News

Recommended Video

    பொருளாதாரம் வளரப்போகுது.. களத்துக்கு வந்தார் பொருளாதார ஆலோசகர்

    டெல்லி: பொருளாதாரம் மிக விரைவில் உயர் வளர்ச்சி பாதையில் திரும்பும். வளர்ச்சிக்கு உதவ தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது, என்று, தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் தெரிவித்தார்.

    மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் இன்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:

    Indian economics will get boost: Chief Economic Adviser Krishnamurthy Subramanian

    இந்தியாவை, 5 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக மாற்ற அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. குறுகிய கால மற்றும் நீண்ட கால நடவடிக்கைகளை எடுக்க துவங்கியுள்ளோம்.

    முதலீடு விகிதம் சமீபமாக அதிகரித்து வருகிறது. 76% என்ற அளவை விட முதலீடு விகிதம் கூடுதலாக உள்ளது. அடுத்த சில மாதங்களில் இது மேலும் அதிகரிக்கும்.

    இனிமேல் நாட்டில் இருக்கப்போவது இந்த 12 பொதுத்துறை வங்கிகள்தான்.. லிஸ்ட் இதோ!இனிமேல் நாட்டில் இருக்கப்போவது இந்த 12 பொதுத்துறை வங்கிகள்தான்.. லிஸ்ட் இதோ!

    மூலதன செலவினங்களை விரைவுபடுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. நாட்டின் பணவீக்கம் கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே விலைவாசி உயரவில்லை. இந்தியப் பொருளாதாரம் வலுவாக இருக்கிறது என்பதற்கு இது உதாரணம்.

    பொருளாதாரம் மிக விரைவில் உயர் வளர்ச்சி பாதையில் திரும்பும். வளர்ச்சிக்கு உதவ தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. 8% வளர்ச்சி விகிதத்தை அடைவதற்கு முதலீடு முக்கியமானது என்பதை உணர்ந்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    நாட்டின் பொருளாதார வளர்ச்சி அடுத்த நிதியாண்டில் 7 சதவீதமாக உயருமா என்ற நிருபர்கள் கேள்விக்கு, அதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் தெரிவித்தார்.

    நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 5.8 சதவீதம் என்ற அளவில் இருந்து 5 சதவீதமாக குறைந்துள்ளதாக இன்று தகவல் வெளியாகியுள்ள நிலையில், மக்களும், முதலீட்டாளர்களும் பதற்றப்பட வேண்டாம் என்ற நோக்கத்தோடு, கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் இந்த பிரஸ்மீட்டுக்கு ஏற்பாடு செய்திருந்தார் என்று கூறப்படுகிறது.

    English summary
    The Govt. is taking all the necessary steps to take care of the situation: Krishnamurthy Subramanian, Chief Economic Adviser tells media over India’s Q1 GDP.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X