டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பேரழிவில் நாட்டின் பொருளாதாரம்... புள்ளி விவரங்களை கூறி அதிரவைக்கும் ப.சிதம்பரம்

Google Oneindia Tamil News

Recommended Video

    பேரழிவில் நாட்டின் பொருளாதாரம்.. புள்ளி விவரங்களை கூறி அதிரவைக்கும் ப.சிதம்பரம்- வீடியோ

    டெல்லி: மந்தநிலை காரணமாக நாட்டின் பொருளாதாரம் பேரழிவான காலகட்டத்தில் இருப்பதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டி உள்ளார்.

    மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டட நாட்டின் பொருளாதாரம் குறித்த அறிக்கை குறித்து நேற்று டெல்லியில் பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறுகையில், "மத்திய நிதியமைச்சகத்தின் அறிக்கையை பார்க்கும் போது நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது தெரிகிறது. எனவே இது பொருளாதாரம் பலவீனமாக இருப்பதற்காக புள்ளியாக இருக்கலாம். மந்த நிலையால் நாட்டின் பொருளாதாரம் பேரழிவை நோக்கி சென்றுள்ளதை சிறுகுறு நிறுவனங்களின் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. இது பிரதமர் மோடி மற்றும் நிதியிமைச்சர் அருண்ஜெட்லி நிர்வாக திறமையின்மையே காரணம்.

    இப்படி கூட வழி உள்ளதா? ஸ்லீப்பர் செல்களை களமிறக்கும் டிடிவி தினகரன்.. அமமுக புது வியூகம்!இப்படி கூட வழி உள்ளதா? ஸ்லீப்பர் செல்களை களமிறக்கும் டிடிவி தினகரன்.. அமமுக புது வியூகம்!

    ஏழைகள் பாதிப்பு

    ஏழைகள் பாதிப்பு

    பொருளாதார தரவு குறித்த புள்ளி விவரங்களை அழகாக மறைத்து போலியாக வெளியிடுவதில் அருண்ஜெட்லி வல்லவர். மோடி அரசின் தவறான பொருளாதார கொள்கைகளால் ஏழைகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    கடுமையாக பாதிப்பு

    கடுமையாக பாதிப்பு

    பாஜக அரசு பொருளாதாரத்தை கடுமையாக சேதப்படுத்தி உள்ளதால், அடுத்து வரும் அரசு நிச்சயம் பொருளாதாரத்தை மேம்படுத்த நிறைய வேலைகளை செய்ய வேண்டிய நிலையில் உள்ளது. அடுத்து காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த உடன் சரி செய்யும்.

    மோசமான அழிவு

    மோசமான அழிவு

    உள்நாட்டு உற்பத்தி குறித்த நிறுவனங்களின் காலாண்டு அறிக்கை இப்போது வெளியான பின்னர் தான் நாட்டின் பொருளாதாரம், மந்த நிலையால் மோசமான அழிவு நிலைக்குள் நுழைந்து இருப்பது தெரியவந்துள்ளது.

    வேலை இழப்பு

    வேலை இழப்பு

    நாட்டின் வரி வருவாய் 1.6 லட்சம் கோடி அளவுக்கு சரிந்துள்ளது. இதனால் பற்றாக்குறை 3.9 சதவீதமாகி உள்ளது. தவறான முறையில் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை, மற்றும் ரூபாய் நோட்டுக்கள் செல்லாத நடவடிக்கை காரணமாக 2018ம் ஆணடு நாட்டில் 1.1 கோடி பேர் வேலை இழந்துள்ளனர்.

    வறுமையில் 50% மக்கள்

    வறுமையில் 50% மக்கள்

    ஆக்ஸ்பாம் குளோபல் இகுவாலிட்டி குழு 2018ம் ஆண்டு வெளியிட்ட புள்ளி விவரங்களின் படி, 2017-2018ம் காலகட்டத்தில் 73 சதவீத செல்வம், நாட்டின் மக்கள் தொகையில் ஒரு சதவீத அளவில் உள்ள பணக்கார்களின் பாக்கெட்டுக்கு சென்றுள்ளது. இதனை வறுமையில் உள்ள நாட்டின் 50 சதவீத மக்கள் பார்த்துக்கொண்டு தான் இருந்தனர்." இவ்வாறு கூறினார்.

    English summary
    The former Finance minister P Chidambaram said that the Indian economy has entered a disastrous phase of slowdown by pm modi rule
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X