டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பழைய வாகனத்தை எக்ஸ்சேஞ்ச் செய்யுங்கள்.. புதிய வாகனம் வாங்குங்கள்.. நிர்மலா சீதாராமன் கோரிக்கை!

Google Oneindia Tamil News

Recommended Video

    வரி சலுகைகள்.. நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு-வீடியோ

    டெல்லி: மக்கள் பழைய வாகனங்களை ஒப்படைத்துவிட்டு (Exchange) புதிய வாகனங்களை வாங்க வேண்டும், அப்போதுதான் ஆட்டோமொபைல் சரிவு வேகமாக சரியாகும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

    இந்தியா பொருளாதாரம் தொடர்ந்து கடந்த சில மாதங்களாக சரிவை சந்தித்து வருகிறது. அதிலும் இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவிற்கு மோசமான சரிவை சந்தித்துள்ளது.

    இந்த பொருளாதார சரிவு இப்போதே ஆட்டோமொபைல் துறையில் எதிரொலித்துள்ளது. இதனால் ஆட்டோமொபைல் துறையில் பலர் வேலையை இழந்து வருகிறார்கள். இந்த நிலையில் இன்று ஆட்டோமொபைல் துறைக்கான சீர்திருத்தங்களை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

    என்ன பேட்டி

    என்ன பேட்டி

    நிர்மலா சீதாராமன் தனது பேட்டியில், ஆட்டோ மொபைல் துறையில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் சரிவு குறித்து எல்லோரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஆட்டோ மொபைல் துறையில் ஏற்பட்டு வரும் சரிவுகளை சரி செய்ய வேகமாக செயலாற்றி வருகிறோம். ஆட்டோமொபைல் துறையை நாங்கள் மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.

    எவ்வளவு பதிவுகட்டணம்

    எவ்வளவு பதிவுகட்டணம்

    வாகனங்களுக்கான பதிவுகட்டண நடைமுறையில் மாற்றம் செய்யப்பட உள்ளது. ஒருமுறை பதிவு கட்டண நடைமுறை 2020 வரை நிறுத்தப்படுகிறது. இதனால் இரண்டாவது முறை ரிஜிஸ்டர் செய்ய பணம் கொடுக்க வேண்டும்.

    என்ன மாற்றம்

    என்ன மாற்றம்

    2020 மார்ச் வரை வாங்கப்படும் பிஎஸ்4 வாகனங்கள் தொடர்ந்து இயங்க அனுமதிக்கப்படும். வானங்களை அதிகமாக வாங்குவதற்கு வசதியாக வாகன கடன் வட்டி குறைக்கப்படும். பழைய வாகனங்களை ஒப்படைத்துவிட்டு (Exchange) புதிய வாகனங்களை வாங்க வேண்டும்.

    புதிய வாகனம் வாங்குங்கள்

    புதிய வாகனம் வாங்குங்கள்

    பழைய வாகனங்களை அரசு கண்காணிக்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் வாகன விற்பனை அதிகரிக்கும். இதன் மூலம் வருவாய் இழப்பு சரி செய்யப்படும். முதலீட்டாளர்களின் நலன்தான் முக்கியம் என்ற அடிப்படையில் மத்திய அரசு செயல்படுகிறது.

    அரசு நிறுவனம்

    அரசு நிறுவனம்

    அரசு நிறுவனங்கள், அரசு அமைப்புகள் வாகனங்கள் வாங்க தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. அந்த தடை தற்போது நீக்கப்படும். அரசு நிறுவனங்கள், அமைப்புகள் புதிய வாகனங்கள் வாங்க அனுமதி வழங்கப்படும். இந்திய பொருளாதார வளர்ச்சி நிலை குறித்து அடுத்த வாரம் மேலும் சில அறிவிப்புகள் வெளியிடப்படும், என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

    English summary
    Indian Economy: Exchange your old vehicles with new vehicles says Finance Minister Nirmala Sitaraman.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X