டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இனியும் என்ன செய்வது.. மாற்றங்களுக்கு பின்பும் சரியும் பொருளாதாரம்.. குழப்பத்தில் மத்திய அரசு!

இந்திய பொருளாதாரம் பல்வேறு அதிரடி அறிவிப்புகளுக்கு பின்பும் கூட தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Watch Video : Finance reform announcements not reflected in the ground so far

    டெல்லி: இந்திய பொருளாதாரம் பல்வேறு அதிரடி அறிவிப்புகளுக்கு பின்பும் கூட தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. மத்திய அரசை இந்த சரிவு பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

    இந்திய பொருளாதாரம் தொடர்ந்து இறங்குமுகமாக சென்று கொண்டு இருக்கிறது. அதிலும் மத்திய நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன் பதவி ஏற்றபின் பொருளாதாரம் மிக மோசமான சரிவை சந்தித்துள்ளது.

    பொருளாதார சரிவை சரி செய்ய மத்திய அரசு நிறைய முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் அரசு மேற்கொண்ட நடவடிக்கை எதுவுமே பயன் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

     வங்கிகளுக்கு வீழ்ச்சி.. ஆட்டோமொபைலும் காலி.. பெரும் சரிவோடு முடிந்த பங்கு சந்தை.. ஷாக்கிங்! வங்கிகளுக்கு வீழ்ச்சி.. ஆட்டோமொபைலும் காலி.. பெரும் சரிவோடு முடிந்த பங்கு சந்தை.. ஷாக்கிங்!

    என்ன மாற்றம்

    என்ன மாற்றம்

    இந்திய பொருளாதார சரிவு முதல்முறையாக ஆட்டோமொபைல் துறையில்தான் எதிரொலித்தது. ஆட்டோமொபைல் துறையில் தினமும் பலர் பணியில் இருந்து நீக்கப்பட்டனர். அந்த சரிவு ஏற்பட ஏற்பட, தங்கத்தின் விலை ஒரு பக்கம் உயர்ந்தது. ரூபாய் மதிப்பு சரிந்தது. இதை தொடர்ந்து வரிசையாக சென்செக்ஸ் மிக மோசமாக தினமும் சரிந்தது.

    என்ன ஜிடிபி

    என்ன ஜிடிபி

    அதேபோல் கடந்த காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி மதிப்பும் மிக மோசமான சரிவை சந்தித்தது. 5% என்ற மிக மோசமான நிலையை ஜிடிபி அடைந்தது. உலகம் முழுக்க 2009-11 சமயங்களில் ஏற்பட்ட பொருளாதார சரிவின் போது கூட இந்தியாவில் இவ்வளவு மோசமாக ஜிடிபி சரிவு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் நிலையான ஆட்சி இருக்கும் இப்போது ஜிடிபி மோசமான வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

    என்ன சீர்திருத்தம்

    என்ன சீர்திருத்தம்

    இதையடுத்து ஆட்டோமொபைல் துறைகளிலும், வங்கி துறையிலும் நிறைய சீர்திருத்தங்களை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். பொதுத்துறை வங்கிகள் பல ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டு மொத்த வங்கிகளின் எண்ணிக்கை 12 ஆக குறைக்கபட்டது. அதேபோல் ஆட்டோமொபைல் துறைகளில் வரி விதிப்பு தொடங்கி நிறைய சலுகைகள் அறிவிக்கப்பட்டது.

    ஆனால் இல்லை

    ஆனால் இல்லை

    ஆனால் கண்கெட்ட பிறகு சூரிய உதயம் போல இந்த நடவடிக்கைகள் எதுவுமே பெரிய அளவில் பலன் அளிக்கவில்லை. இந்த அறிவிப்புகளை மக்கள் மற்றும் வியாபாரிகள் நம்பவில்லை என்பதற்கு இன்றைய பங்குச்சந்தை நிலவரம் முக்கிய உதாரணம் என்று கூட கூறலாம். மும்பை பங்கு வர்த்தகம் இன்று காலையிலேயே பெரிய சரிவோடுதான் தொடங்கியது.

    மேலும் சரிவு

    மேலும் சரிவு

    அதேபோல் மொத்தமாக 800 புள்ளிகள் சரிந்து சென்செக்ஸ் நிறைவு பெற்றது. மாலையில் 36,428 புள்ளிகளுடன் நிறைவு பெற்றது. அதேபோல் நிஃப்டி மேலும் சரிந்து 51 புள்ளிகள் சரிந்து 10,851.35 புள்ளியுடன் நிறைவு பெற்றது. பங்கு வர்த்தகர்களை இந்த சரிவு பெரிய அளவில் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

    எதுவும் கிடையாது

    எதுவும் கிடையாது

    முக்கியமாக வங்கிகள், ஆட்டோமொபைல் துறைகள் அதிக சரிவை சந்தித்தது. டாடா மோட்டார், ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎப்சி, ரிலையன்ஸ் இண்டஸ்டிரி ஆகிய நிறுவனங்கள் அதிக இழப்பை சந்தித்தது. வங்கிகள், ஆட்டோமொபைல் துறைகளில் மத்திய அரசின் சீர்திருத்தம் எந்த வகையிலும் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என்பது இதன் மூலம் புலன் ஆகி உள்ளது.

    பெரிய குழப்பம்

    பெரிய குழப்பம்

    அதே சமயம் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் சந்தையில் எதிரொலிக்க மேலும் சில நாட்கள் ஆகும் என்று கூறுகிறார்கள். இதனால் அவசரமாக பொருளாதார சரிவை எப்படி சரி செய்வது என்று தெரியாமல் மத்திய அரசு பெரிய குழப்பத்திற்கு உள்ளாகி உள்ளது. எதை குடித்தால் பித்தம் தெளியும் என்ற நிலைக்கு இந்திய பொருளாதாரம் தள்ளப்பட்டு உள்ளது .

    English summary
    Indian Economy: Finance reform announcements not reflected in the ground so far.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X