டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பழி போட வேண்டாம்.. இதற்கு நீங்களும்தான் காரணம்.. பொருளாதார சரிவால் பாஜகவிற்குள் நடக்கும் மோதல்!

இந்தியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவு காரணமாக பாஜக கட்சிக்குள் தற்போது மோதல் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    வரி சலுகைகள்.. நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு-வீடியோ

    டெல்லி: இந்தியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவு காரணமாக பாஜக கட்சிக்குள் தற்போது மோதல் நடந்து வருவதாக கூறப்படுகிறது. பாஜக கட்சியில் மட்டுமில்லாமல் அக்கட்சி தொண்டர்களுக்கு இடையிலும் இதனால் தற்போது பெரும் சண்டை ஏற்பட்டுள்ளது.

    கடந்த சில மாதங்களாக இந்திய ரூபாயின் மதிப்பு மோசமாக சரிந்து வருகிறது. அதிலும் கடந்த ஒரு வாரத்தில் ரூபாய் மதிப்பு யாரும் எதிர்பார்க்காத வகையில் வேகமாக தொடர்ந்து சரிந்து வருகிறது.

    இன்னும் சில நாட்களுக்கு இந்திய பொருளாதாரம் இப்படி தொடர்ந்து சரிய வாய்ப்புள்ளது என்று பொருளாதார வல்லுநர்கள் கணித்து உள்ளனர். இந்த பொருளாதார சரிவு தற்போது மத்திய அரசுக்கு பெரிய தலைவலியாக மாறியுள்ளது.

    அவர்தான் காரணம்

    அவர்தான் காரணம்

    இந்த பொருளாதார சரிவுக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்தான் காரணம் என்று ஒரு தரப்பு குற்றஞ்சாட்டி வருகிறது. அவர் நிதி அமைச்சராக பொறுப்பேற்ற பின்தான் இந்த பிரச்சனை ஏற்பட்டது. அதன்பின்தான் இந்திய ரூபாய் மதிப்பு மோசமானது என்று சிலர் கூறி வருகிறார்கள்.

    நிர்மலா சீதாராமன்

    நிர்மலா சீதாராமன்

    முக்கியமாக அவர் தாக்கல் செய்த பட்ஜெட்தான் இந்தியாவின் பொருளாதார சரிவுக்கு மிக முக்கிய காரணமாக மாறியது என்றும் சிலர் குற்றஞ்சாட்டி உள்ளனர். இதனால் நிர்மலா சீதாராமன் தரப்பிற்கும் அவரின் ஆலோசகர்களுக்கும் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

    அவர் மட்டும் இல்லை

    அவர் மட்டும் இல்லை

    அதேபோல் இந்த பிரச்சனைக்கும் நிர்மலா சீதாராமன் மட்டும் காரணம் இல்லை. இதற்கு பின் அருண் ஜேட்லியும் ஒரு காரணம்தான். அவர் நிதி அமைச்சராக இருந்த போதுதான் இந்தியாவின் பொருளாதாரம் மோசமானது. அப்போது அவர் எடுத்த தவறான நடவடிக்கைகள்தான் இந்த சரிவிற்கு காரணம். நிர்மலா மீது மட்டும் பழி போட வேண்டாம், என்று நிர்மலாவிற்கு ஆதரவாக சிலர் களமிறங்கி உள்ளனர்.

    முக்கிய தலைவர்

    முக்கிய தலைவர்

    அதே சமயம் பாஜகவில் நிதி அமைச்சர் பதவிக்கு அடிபோட்டு வரும் ஒரு முக்கிய தலைவர், இந்த இரண்டு பேருமே பொருளாதார சரிவிற்கு காரணம்தான் என்று கூறி வருகிறார். நிதி அமைச்சக பொறுப்பை வேறு சிலரிடம் (தன்னிடம்) கொடுத்தால்தான் பொருளாதார நிலை சரியாகும் என்று அவர் கூறி வருகிறார்.

    பாஜகவில் மோதல்

    பாஜகவில் மோதல்

    இதனால் பாஜக கட்சிக்கு உள்ளேயே சிறிய மோதல் தற்போது ஏற்பட்டுள்ளது. இந்த சிக்கலை பாஜக எப்படி கடந்து வர போகிறது. இந்தியா பொருளாதார சரிவில் இருந்து எப்படி மீள போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

    English summary
    Indian Economy situation makes a few problems inside the BJP party.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X