Hinduphobia எதிரான ஆக்ஷன் தேவை.. வலதுசாரி அடிப்படைவாதம் ஒன்றும் பயங்கரவாதம் இல்லை.. ஐநா இந்திய தூதர்
டெல்லி: பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் வலதுசாரி அடிப்படைவாதம், வன்முறை தேசியவாதத்தைச் சேர்க்கக் கூடாது என வலியுறுத்தி ஐ.நா.வுக்கான இந்தியத் தூதர் டி.எஸ்.திருமூர்த்தி, இந்துபோபியா குறித்தும் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச பயங்கரவாத எதிர்ப்பு மையம் (ஜிசிடிசி) சார்பில் சமீபத்தில் தலைநகர் டெல்லியில் காணொலி காட்சி மூலம் மாநாடு ஒன்று நடைபெற்றது. அதில் ஐ.நா.வுக்கான இந்தியத் தூதர் டி.எஸ்.திருமூர்த்தி கலந்து கொண்டு பேசினார்,
அதில் அவர் இஸ்லாமோபோபியா போலவே புத்த மற்றும் சீக்கியர்களுக்கு எதிரான வன்முறையை இந்துபோபியா என ஐநா கருத வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
'வாழ்க்கையில் ஏதாவது சாதிச்சியானு கேட்டா கண்டிப்பாக இதை சொல்வேன்'.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி

வலதுசாரி அடிப்படைவாதம்
அந்த மாநாட்டில் பேசிய ஐநாவுக்கான இந்தியத் தூதர் டி.எஸ் திருமூர்த்தி, சர்வதேச பயங்கரவாத தடுப்பு அமைப்பு குறிப்பிட்ட சில பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக மட்டும் நடவடிக்கை எடுத்து வருகிறது. பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் வலதுசாரி அடிப்படைவாதம், வன்முறை தேசியவாதத்தைச் சேர்க்கக் கூடாது என வலியுறுத்தி அவர், அவ்வாறு சேர்த்தால் அது பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையை நீர்த்துப்போகச் செய்யும் என்றார். இது தொடர்பாகக் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டமும் பல குறைபாடுகளைக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

எது பயங்கரவாதம்
இதனால் அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பிறகு பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் உலக நாடுகளிடையே கிடைத்த ஒருமித்த கருத்து சிதறிப் போக வாய்ப்புகள் உள்ளது. இது தொடர்பாக அவர் கூறுகையில், "கடந்த இரண்டு ஆண்டுகளில், பல்வேறு நாடுகளும் தங்களின் அரசியல் உள்ளிட்ட பிற உள்நோக்கங்கள் காரணமாக அடிப்படைவாதம், வன்முறை தேசியவாதம், வலதுசாரி அடிப்படைவாதம் போன்றவற்றைப் பயங்கரவாதமாக முத்திரை குத்த முயல்கின்றன. இந்த போக்கு மிகவும் ஆபத்தானது" என்றார்.

இந்துபோபியா
ஐநா சபையின் பயங்கரவாத தடுப்பு பிரிவின் தலைவரா இந்த மாதம் இந்தியா பொறுப்பேற்றது, திருமூர்த்தியின் இந்தக் கருத்துக்கள் மூலம் இந்த ஆண்டு டிசம்பர் ஐநா பாதுகாப்புக் குழு பதவியில் இருக்கும் வரை இந்தியா பயங்கரவாதம் என்றால் என்ன என்ற விதிமுறைகளை விரிவுபடுத்துவதை இந்தியா கடுமையாக எதிர்க்கும் என்பதையே இது தெளிவாக உணர்த்துகிறது. மேலும், அவர் பௌத்தம் மற்றும் சீக்கிய மதத்திற்கு எதிரான பிற செயல்பாடுகளை இந்துபோபியா என ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஐநா நடவடிக்கை தேவை
மேலும், குறிப்பிட்ட மதங்களுக்கு எதிரான தாக்குதல்கள் குறித்துப் பேசிய அவர், "ஆபிரகாமிய மதங்களான இஸ்லாம், கிறிஸ்தவம் மற்றும் யூத மதங்கள் எதிரான நடவடிக்கைகள் மட்டுமே ஐ.நா சபையால் நிறைவேற்றப்பட்ட உலகளாவிய பயங்கரவாத எதிர்ப்பு உத்தியில் இடம் பெற்றிருந்தது. சமீப காலமாக இந்து விரோத, பௌத்த எதிர்ப்பு மற்றும் சீக்கியர்களுக்கு எதிரான வெறுப்புகள் அதிகரித்து வருவது கவலைக்குரிய விஷயமாகும், இந்த அச்சுறுத்தலை ஐநா கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்" என்றார்.

வலதுசாரி மற்றும் இடதுசாரி
இந்தியாவில் வலதுசாரி சிந்தனை வலுகட்டாயமாக திணிக்கப்படுவதாக மேற்குல நாடுகளில் பத்திரிகைகள் விமர்சிப்பது தொடர்பாகப் பேசிய அவர்," இது போல முத்திரை குத்துவது மிகவும் தவறான போக்கு. ஜனநாயகத்தில் வலதுசாரி மற்றும் இடதுசாரி என இரு அமைப்புகளும் முக்கியம். அதில் மக்களின் ஆதரவு யாருக்குக் கிடைக்கிறதோ அவர்கள் ஆட்சியைப் பிடிக்கிறார்கள். இதுபோல முத்திரை குத்தப்படுவது இரட்டை கோபுர தாக்குதலுக்கு முந்தை உலகிற்கு, அதாவது உங்கள் பயங்கரவாதிகளைப் பற்றி எங்களுக்குக் கவலை இல்லை என்ற நிலைக்கு நம்மை அழைத்துச் செல்லும் ஆபத்து உள்ளது.

யார் பயங்கரவாதிகள்
பயங்கரவாதிகள் அனைவரும் பயங்கரவாதிகள் தான். அவர்களில் நல்லவர்கள் கெட்டவர்கள் என யாரும் இல்லை. இதில் வேறுபாடு உள்ளது என்று கூறுபவர்களுக்குப் பின்னணியில் ஒரு திட்டம் உள்ளது என்றே அர்த்தம். அவர்களுக்கு ஆதரவு கொடுத்து மூடிமறைப்பவர்களும் குற்றவாளிகள் தான். எனவே நமது கவனத்தை நீர்த்துப்போகச் செய்யும் தவறான முன்னுரிமைகளுக்கு எதிராக ஐநா பாதுகாப்பு கவுன்சில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.