டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இன்று முதல்.. மால்களை தவிர்த்து பிற கடைகள் இயங்கலாம்.. சலூன்களும் செயல்படும்.. மத்திய அரசு அதிரடி

Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய அரசு இரவோடு இரவாக ஒரு முக்கியமான அதிரடி முடிவு எடுத்துள்ளது. அதன்படி, காய்கறி போன்ற அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டுமே திறந்து இருப்பதற்கு இதுவரை வழங்கிய அனுமதியை இன்னும் நீட்டிப்பு செய்துள்ளது. அதாவது அத்தியாவசிய தேவைகளை பிற கடைகளும் திறந்து கொள்ளலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Recommended Video

    Lockdown Relaxation : மத்திய அரசு இரவோடு இரவாக எடுத்த அதிரடி முடிவு

    மே 3ஆம் தேதி வரை நாடு முழுவதும் லாக்டவுன் நடைமுறையில் உள்ளது .அப்படி இருக்கும்போது இதுபோன்ற கடைகளுக்கு லாக்டவுன் நெறிமுறைகளில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்படுவதாக உள்துறை அமைச்சக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

    சிறு குறு தொழில் செய்வோர், லாக்டவுனால் தங்கள், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுப்பிய நிலையில் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

    சென்னை, கோவை உட்பட 5 நகரங்களில் முழு ஊரடங்கு.. காய்கறி கடை கூட திறக்காது.. முதல்வர் உத்தரவுசென்னை, கோவை உட்பட 5 நகரங்களில் முழு ஊரடங்கு.. காய்கறி கடை கூட திறக்காது.. முதல்வர் உத்தரவு

    ட்வீட்

    ட்வீட்

    நள்ளிரவில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதன்படி, அந்தந்த மாநில அல்லது யூனியன் பிரதேசங்களில் பதிவுபெற்ற கடைகள் இன்று முதல் திறந்து கொள்ளலாம். மக்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள கடைகள், மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளைத் தவிர்த்து மற்ற பகுதிகளில் உள்ள மார்க்கெட்டுகளில் செயல்படும் கடைகள் ஆகியவற்றை திறந்து கொள்ளலாம்.

    50 சதவீதம் ஊழியர்கள்

    50 சதவீதம் ஊழியர்கள்

    தனித்தனியாக செயல்படக்கூடிய கடைகள் என்றால் மாநகராட்சி நகராட்சியாக இருந்தாலும் அவற்றையும் திறந்து கொள்ள அனுமதிக்கப்படும். மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகள் அல்லாத பிற பகுதிகளில் உள்ள மார்க்கெட் ஏரியாக்களில் செயல்படும் கடைகள் திறந்து கொள்ள அனுமதிக்கப்பட்ட போதிலும் அங்கு 50 சதவீதம் அளவுக்கு தான் ஊழியர்கள் பணியாற்றவேண்டும். சமூக விலகல் பின்பற்றப்பட வேண்டும். அனைவரும் முகக்கவசம் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும்.

    50 சதவீதம் ஊழியர்கள்

    50 சதவீதம் ஊழியர்கள்

    தனித்தனியாக செயல்படக்கூடிய கடைகள் என்றால் மாநகராட்சி நகராட்சியாக இருந்தாலும் அவற்றையும் திறந்து கொள்ள அனுமதிக்கப்படும். மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகள் அல்லாத பிற பகுதிகளில் உள்ள மார்க்கெட் ஏரியாக்களில் செயல்படும் கடைகள் திறந்து கொள்ள அனுமதிக்கப்பட்ட போதிலும் அங்கு 50 சதவீதம் அளவுக்கு தான் ஊழியர்கள் பணியாற்றவேண்டும். சமூக விலகல் பின்பற்றப்பட வேண்டும். அனைவரும் முகக்கவசம் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும்.

    சலூன்கள் திறப்பு

    சலூன்கள் திறப்பு

    இன்று முதல் சலூன்கள் மற்றும் பார்லர்கள் திறக்க அனுமதிக்கப்படுகிறது. கிராமப்புறம் மற்றும் பேரூராட்சிகள் போன்ற பகுதிகளில் செயல்படும் அனைத்து சந்தைகளும் திறந்துகொள்ள அனுமதிக்கப்படுகிறது. நகர்ப்புறங்களை பொருத்தளவில் காய்கறி கடைகள் அனுமதிக்கப்பட்டுள்ளது போலவே அத்தியாவசியமற்ற பொருட்கள் மற்றும் சேவைகளை செயல்படுத்த அனுமதிக்கப்படுகிறது. குடியிருப்பு பகுதிகளில் மற்றும் தனியாக இருக்கக்கூடிய கடைகளுக்கு இது பொருந்தும். மால்களில் செயல்படும் கடைகளுக்கு பொருந்தாது.

    கிராமங்கள்

    கிராமங்கள்

    கிராமப்புறங்களில் அத்தியாவசிய சேவைகளை வழங்க கூடிய அனைத்து வகையான கடைகளும் திறந்து இருக்கலாம். நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளுக்குள் வராத பிற பகுதிகளில் உள்ள மார்க்கெட் காம்ப்ளக்ஸ்களில் உள்ள கடைகள் எனில் அவற்றை திறந்து கொள்ளலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஹாட்ஸ்பாட்டுகளுக்கு அனுமதி இல்லை

    ஹாட்ஸ்பாட்டுகளுக்கு அனுமதி இல்லை

    அது நகர்ப்புற பகுதியோ, அல்லது வேறு பகுதியோ எதுவாக இருந்தாலும் கடைகளில் 50 சதவீத ஊழியர்கள் மட்டுமே வைத்து இயக்க வேண்டும். இருப்பினும், இந்த விதிமுறை விளக்கம் என்பது ஹாட்ஸ்பாட் மற்றும் கண்டைன்மெண்ட் பகுதிகளுக்கு பொருந்தாது. தமிழகத்தில் பல மாவட்டங்கள் ஹாட்ஸ்பாட் என்ற இடத்தில்தான் வருகிறது. மதுபானக்கடைகளை பொறுத்தளவில் அது கடைகள் பதிவு சட்டத்தின் கீழ் வராது என்பதால் அதற்கு விதிவிலக்கு அளிக்கப்படவில்லை. எனவே மதுபானம் கிடைக்காது.

    ஊரடங்கு தளர்வு

    ஊரடங்கு தளர்வு

    மே 3ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு உத்தரவை முழுமையாக தளர்த்தப்படுவதற்கு, மத்திய அரசு தயாராக இருப்பதற்கான, அறிகுறியாக இந்த விதிமுறை தளர்வு என்பது பார்க்கப்படுகிறது. அதற்குள்ளாக கொரோனா வைரஸ் பரவலை கட்டுக்குள் வைத்து விடலாம் என்று மத்திய அரசு கணக்கிட்டு இவ்வாறு, ஒரு நடவடிக்கையை எடுத்துள்ளது என்று தெரிகிறது.

    English summary
    The Ministry of Home Affairs (MHA), in its latest order, issued on Friday night, permitted the shops providing non-essential goods and services to open from Saturday (April 25) onwards.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X