டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனாவுக்கு பலன்.. ரெம்டெசிவிர் மருந்தை அவசர காலத்தில் பயன்படுத்த இந்தியா ஒப்புதல்

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் அவசரகால பயன்பாட்டிற்காக கிலியட் சயின்சஸ் நிறுவனத்தின் ரெம்டெசிவிர் ஆன்டிவைரஸ் மருந்தை பயன்படுத்த ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அரசு செவ்வாய்கிழமை தெரிவித்துள்ளது.

Recommended Video

    அவசர காலத்தில் பயன்படுத்த ரெம்டெசிவர் மருந்துக்கு இந்தியா ஒப்புதல்

    கொரோனா வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் 63 லட்சம் பேர் பாதிக்கப்பபட்டுள்ளனர். இதில் 3லட்சத்து 77 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் பல லட்சம் பேர் கொரோனா பாதிப்புடன் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    அமெரிக்கா மற்றும் ஐரோப்பியா நாடுகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. இதேபோல் இந்தியா, பிரேசில் உள்ளிட்ட வளரும் நாடுகளிலும், பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. ரஷ்யாவிலும் பாதிப்பு மோசடைந்துள்ளது.

    சூப்பர்.. தமிழகத்திலிருந்து கர்நாடகா செல்ல இ-பாஸ் தேவையில்லை.. 14 நாட்கள் வீட்டு தனிமை போதும்சூப்பர்.. தமிழகத்திலிருந்து கர்நாடகா செல்ல இ-பாஸ் தேவையில்லை.. 14 நாட்கள் வீட்டு தனிமை போதும்

     ஹைட்ராக்ஸி குளோரோகுயின்

    ஹைட்ராக்ஸி குளோரோகுயின்

    உலகின் பல்வேறு நாடுகளும் கொரோனா வைரஸ்க்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கி உள்ளன. எந்த ஒரு மருந்தையும் இதுவரை உலக சுகாதார அமைப்பு அங்கீகரிக்கவில்லை. கொரோனாவுக்கு தடுப்பு மருந்தாக அவசர கால பயன்பாட்டிற்கு அமெரிக்கா ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை பயன்படுத்தியது. உலகின் பல்வேறு நாடுகளும் இதைத்தான் பயன்படுத்தி வருகின்றன. ஆனால் இந்த மருந்தால் பக்க விளைவுகள் அதிகம் என்ற புகார் உள்ளது.

    அமெரிக்கா ஒப்புதல்

    அமெரிக்கா ஒப்புதல்

    இந்நிலையில் அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் ரெம்டெசிவிர் மருந்து கொரோனா நோயாளிகளை குணப்படுத்துவதில் நல்ல பலன் அளிப்பதாக கூறப்பட்டது. இதையடுத்து இதற்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர காலத்தில் பயன்படுத்த ஒப்புதல் வழங்கியது. இதேபோல் ஜப்பான் சுகாதாரத்துறை அமைச்சகமும் ரெம்டெசிவிர் மருந்தை அவசர காலத்தில் பயன்படுத்த ஒப்புதல் வழங்கியது.

    ஐந்து நாள் கொடுக்கலாம்

    ஐந்து நாள் கொடுக்கலாம்


    முறையான மருத்துவ பரிசோதனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு முன்னேற்றம் காண்பிக்கும் முதல் மருந்தாக ரெம்டெசிவிர் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
    கிலியட் சயின்சஸ் திங்களன்று மிதமான பாதிப்பு உள்ள கொரோனா நோயாளிகளுக்கு ஐந்து நாள் படிப்படியாக இந்த ரெம்டெசிவிர் மருந்தைக் கொடுத்தால் மிதமான நன்மையைக் காட்டியதாகக் கூறியது.

    இறக்குமதி செய்ய விருப்பம்

    இறக்குமதி செய்ய விருப்பம்

    எனினும் ஐரோப்பிய மற்றும் தென் கொரிய அதிகாரிகளும் ரெமெடிசிவரை இறக்குமதி செய்ய பார்க்கிறார்கள், தென் கொரிய சுகாதார அதிகாரிகள் கடந்த வெள்ளிக்கிழமை மருந்து இறக்குமதி செய்யக் கோருவதாகக் கூறினார்கள். கிலியட் நிறுவனம் இன்னும் சந்தையில் ரெம்டெசிவிர் மருந்தை விற்பனை செய்வதற்கு ஒழுங்குமுறை அங்கீகாரத்தைப் பெறவில்லை.

    அவசர கால பயன்பாடு

    அவசர கால பயன்பாடு

    இந்நிலையில் நிர்வாகத்திற்கான நிபந்தனையுடன் ரெம்டெசிவிர் மருந்தை ஜூன் 1 ம் தேதி முதல் ஐந்து டோஸ் வழங்கலாம் அவசரகால பயன்பாட்டின் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஜெனரல் ஒரு மின்னஞ்சல் அறிக்கையில் தெரிவித்துள்ளார். இந்த மின்னஞ்சலுக்கு மருந்து தயாரிப்பாளர் கிலியட் சயின்சஸ் உடனடியாக பதிலளிக்கவில்லை.

    தமிழகத்தில் கொரோனா

    தமிழகத்தில் கொரோனா

    செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, இந்தியாவில் 198,706 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளன. இதில் 5,598 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில தமிழக அரசு இன்று வெளியிட்ட கொரோனா பாதிப்பு குறித்த அறிக்கையில், தமிழ்நாட்டில் இன்று 1091 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று 3ஆவது நாளாக ஒரே நாளில் பாதிப்பு 1,000ஐ தாண்டி உள்ளது.

    English summary
    India approved Gilead Sciences Inc's antiviral drug remdesivir for emergency use in treating coronavirus patients.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X