வருகிறது 5 கோடி 'கோர்பிவேக்ஸ்' தடுப்பூசி! - அனுமதி அளித்த இந்திய மருந்துகள் கட்டுப்பாடு இயக்குனரகம்!
டெல்லி: 5 கோடி 'கோா்பிவேக்ஸ்' கொரோனா தடுப்பூசிகளை வாங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
கோவாக்ஸின் மற்றும் கோவிஷீல்ட் தடுப்பூசிகளை கொரோனாவுக்கு எதிராக நாடு முழுவதும் செலுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் இதுவரை 169 டோஸ்கள் வேக்சின் போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோர்பிவேக்ஸ் என்ற தடுப்பூசியையும் மக்களுக்கு செலுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஹைதராபாதை சோ்ந்த பயாலஜிகல்-இ நிறுவனம், கோா்பிவேக்ஸ் தடுப்பூசியை மத்திய உயிரி தொழில்நுட்பத் துறையுடன் இணைந்து தயாரித்தது.
தேர்தலுக்காக கொரோனா எண்ணிக்கையில் குளறுபடியா? - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம்

தடுப்பூசி
கோவாக்ஸின் , கோவிஷீல்ட் ஆகியவற்றுக்குப் பிறகு முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 3-ஆவது கரோனா தடுப்பூசி, கோா்பிவேக்ஸ். இந்தத் தடுப்பூசியின் அவசரகாலப் பயன்பாட்டுக்கு இந்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு இயக்குநரகம் அனுமதி அளித்துள்ளது. பயாலஜிகல்-இ நிறுவனம் இந்த வேக்சினை தயாரித்துள்ளது.

கோர்பிவேக்ஸ்
இந்நிலையில், பயாலஜிகல்-இ நிறுவனத்திடம் இருந்து 5 கோடி கோா்பிவேக்ஸ் தடுப்பூசிகளை வாங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது . ஒரு டோஸ் தலா ரூ.145-க்கு கொள்முதல் செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. கோா்பிவேக்ஸ் தடுப்பூசிகளை நடப்பு மாதத்திலேயே பயாலஜிகல்-இ நிறுவனம் மத்திய அரசிடம் வழங்கும் என மத்திய சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தடுப்பூசி கொள்முதலுக்காக ரூ.1,500 கோடி வழங்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பூஸ்டர்
நாட்டில் தற்போது 15 வயதைக் கடந்த அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. முன்களப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், 60 வயதைக் கடந்த இணைநோய் உள்ளோருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி துவங்கப்பட்டுள்ளது. வயதுக்குக் குறைவான சிறார்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள அனுமதி அளிப்பது தொடா்பாகவும், முன்னெச்சரிக்கை தடுப்பூசி பெறத் தகுதியானவர்களின் பட்டியலை விரிவுபடுத்துவது தொடர்பாகவும் மத்திய அரசு சார்பில் ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

பயன்பாடு
கோா்பிவேக்ஸ் தடுப்பூசியை 18 வயதைக் கடந்தோருக்கு 28 நாள்கள் இடைவெளியில் இரு தவணைகளாகச் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் கோர்விவேக்ஸ் தடுப்பூசி நாடு முழுவதும் பயன்பாட்டுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு எதிராக கோர்விவேக்ஸ் சிறப்பாக செயல்படும் என்றும் மருத்துவக்கழகம் தெரிவித்துள்ளது.